நான்கு சமையல் கலைஞர்கள், தாராளமான விருந்துபசாரம்: ‘Flavours of Türkiye’ மீண்டும் ஷங்ரி-லா கொழும்பிற்கு வருகிறது
கிரில்லில் சுடப்படும் கெபாப்களின் நறுமணம், புதிதாக தயாரிக்கப்பட்ட ‘போரெக்’கின் (börek) மென்மையான அடுக்குகள் (delicate layers) மற்றும் ‘மெஸே’ (mezze) உணவுகளால் நிரப்பப்பட்ட ஒரு மேசை; ஹோட்டலின் உணவகத்திற்கு வருகை தருபவர்களை உணவின் மூலம் துருக்கியை கண்டறிய அழைக்கிறது ஷங்ரி-லா கொழும்பு. கடந்த ஆண்டின் வெற்றியதைத் தொடர்ந்து, இலங்கைக்கான துருக்கி தூதரகத்தின் ஒத்துழைப்புடன் ‘Flavours of Türkiye’ (துருக்கியின் சுவைகள்) உணவுத் திருவிழா, 2026 ஒக்டோபர் 30 முதல் நவம்பர் 07 வரை ‘Central Restaurant’ உணவகத்திற்கு மீண்டும் வருகிறது.

இந்த ஆண்டு திருவிழாவின் மையப்புள்ளியாக அலி தஷ்பினார் (Ali Taşpınar), சனெர் தொலு (Caner Dolu), மெஹ்மத் எர்டோகான் (Mehmet Erdoğan), பேய்சுல்லா கல்கான் (Feyzullah Kalkan) ஆகிய வருகை தரும் நான்கு சமையல் கலைஞர்கள் உள்ளனர். ஷங்ரி-லா கொழும்பின் சமையல் குழுவுடன் இணைந்து சமைப்பதற்காக துருக்கியில் இருந்து வருகை தரும் இவர்கள், தங்களது கைவண்ணத்தையும் துருக்கிய சமையலை மிகவும் தனித்துவமாக்கும் சுவைகள் பற்றிய தனிப்பட்ட புரிதலையும் இங்கு கொண்டு வருகின்றனர்.



சென்ட்ரல் உணவகத்தின் இரவு உணவு புபேவின் (buffet) ஒரு பகுதியாக வழங்கப்படும் இந்த துருக்கிய உணவுத் தெரிவானது, விருந்தினர்களைத் தங்களது சொந்த வேகத்திலேயே சுவைத்து, ஆராய்ந்து அறிய அழைக்கிறது. ‘போரெக்’கின் மொறுமொறுப்பான பேஸ்ட்ரி(creamy hummus and an assortment of mezze) மற்றும் சுவையான மாறுபாட்ட அனுபவத்தைக் கண்டறிவதற்கு முன், கிரீமி ஹம்முஸ் (creamy hummus) மற்றும் பல்வேறு வகை மெஸே உணவுகளுடன் உணவை ஆரம்பிக்கலாம். பின்னர் கிரில்லில் இருந்து புதிதாக எடுக்கப்பட்ட கெபாப்களுக்கு நகர்ந்து, பிஸ்தா பருப்புகளால் பூரணப்படுத்தப்பட்ட பக்லவாவின் (baklava) மென்மையான, பாகு நிறைந்த அடுக்குகளைச் சுவைக்கலாம். இது ஆர்வத்திற்குப் பதிலளிக்கும் ஒரு மெனுவாகும். ஒவ்வொரு முறை உணவருந்தும் மேசைக்குத் திரும்பும் போதும் மற்றொரு சுவையை கண்டறிவதற்கு இது வாய்ப்பை ஏற்படுத்தும்.
உணவானது இந்த சூழலின் மையப் புள்ளியை அமைக்கும் வேளையில், துருக்கிய இசையானது அந்த மாலைப் பொழுதிற்கு மற்றுமொரு பரிமாணத்தைக் கொண்டு வருகிறது. நன்றாக உணவருந்தவும் தாராளத் தன்மையுடன் பகிர்ந்து கொள்ளும் மகிழ்ச்சியை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு ஒன்றுகூடலையும் இது உருவாக்குகிறது.

இது குறித்து ஷங்ரி-லா கொழும்பு பொது முகாமையாளர் அன்ட்ரியாஸ் ஸ்ட்ரைபர் (Andreas Streiber) தெரிவிக்கையில், “விருந்தினர்களை ஷங்ரி-லா கொழும்பு ஹோட்டலின் ‘Flavours of Türkiye’ இன் மற்றுமொரு பதிப்பிற்கு வரவேற்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். துருக்கியில் இருந்து வருகை தரும் நான்கு சமையல் கலைஞர்களுடன், இந்த வருடத்தின் திருவிழாவானது உணவு வகைகளுடன் ஒரு தனிப்பட்ட தொடர்பையும் இணைக்கிறது. அவர்கள் சுமந்து வரும் மரபுகள், அவர்கள் செம்மைப்படுத்திய திறன்கள் மற்றும் ஒவ்வொரு உணவின் பின்னணியிலும் உள்ள கதைகளை அவை சொல்லும். இசை, கலாசாரம் மற்றும் எமக்கே உரிய மனமார்ந்த உபசரிப்பு உணர்வின் மூலம் மகிழ்வூட்டப்பட்ட ஒரு அனுபவத்தின் மூலம் துருக்கிய மேசையின் நாவிற்கினிய உணர்வை பகிர நாம் ஆவலுடன் காத்திருக்கிறோம்.” என்றார்.
இது குறித்து, இலங்கைக்கான துருக்கி தூதுவர் மேன்மைதங்கிய செமிஹ் லுத்பு துர்குட் (Semih Lütfü Turgut) தெரிவிக்கையில், “துருக்கியில், ஒருவரை உணவருந்தும் மேசைக்கு வரவேற்பது நட்பின் வெளிப்பாடாகும். எமது சமையல் முறையானது பிராந்திய மரபுகள் மற்றும் உணவைப் பகிர்ந்து கொள்ளும் மகிழ்ச்சி ஆகியவற்றினால் அமைக்கப்பட்ட, பல தலைமுறை கதைகளைச் சுமந்து செல்கிறது. ‘Flavours of Türkiye’ மூலம், இலங்கையில் உள்ள விருந்தினர்களை எமது சமையல் கலைஞர்களின் கரங்கள் மற்றும் எமது இசையின் வளம் ஆகியவற்றின் மூலம், அதன் பாரம்பரியத்தை கண்டறிய நாம் அழைக்கிறோம். இந்த சந்திப்புகள் எமது நாடுகளுக்கு இடையிலான நட்பை ஆழப்படுத்துவதையும், எமது மக்களை நெருக்கமாக இணைப்பதையும் காண்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
‘Flavours of Türkiye’ உணவுத் திருவிழாவானது தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை சென்ட்ரல் ரெஸ்டாரண்டில் இடம்பெறும். இதற்கான கட்டணம் ஒரு நபருக்கு தலா ரூ. 9,539 ஆகும். கொழும்பில் தங்களது அடுத்து வரும் சமையல் கண்டுபிடிப்பைத் திட்டமிடும் உணவப் பிரியர்களுக்கு, இந்தத் திருவிழாவானது துருக்கிய சமையலை, நன்கறிந்த சமையல் கலைஞர்களின் முன்னிலையில் அனுபவிப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
முன்பதிவுகள் மற்றும் மேலதிக தகவல்களுக்கு, +94 77 817 4529 எனும் இலக்கத்தைத் தொடர்பு கொள்ளவும் அல்லது [email protected] ஊடாக மின்னஞ்சல் செய்யவும்.











Post Comment