டேவிட் பீரிஸ் குழுமம் 2026 ஜனாதிபதி சுற்றாடல் விருது விழாவில் இரண்டு தங்கம், ஒரு வெள்ளி விருதுகளை வென்றது

சுற்றுச்சூழல் விசேடத்துவம், நிலைபேறான செயற்பாடுகள் மற்றும் பொறுப்பான வணிக நடைமுறைகளுக்கான குழுமத்தின் அர்ப்பணிப்பை மூன்று தேசிய விருதுகள் கௌரவிக்கின்றன

ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள் 2026 நிகழ்வில் இரண்டு தங்க விருதுகள் மற்றும் ஒரு வெள்ளி விருதை டேவிட் பீரிஸ் குழுமம் (David Pieris Group of Companies) வென்றுள்ளது. இது சூழல் நிலைபேறான தன்மை, புத்தாக்க கண்டுபிடிப்பு மற்றும் பொறுப்பான வணிக நடைமுறைகள் தொடர்பில் நிறுவனம் கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பை அங்கீகரித்து கௌரவிப்பதாக அமைந்துள்ளது.

டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தால் இயக்கப்படும் DPMC மடபாத்த மற்றும் மாத்தறை சேவை மையங்கள் (Workshops) மற்றும் டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (லங்கா) லிமிடெட் நிறுவனத்தின் ரன்ன உற்பத்தி வளாகத்தில் உள்ள வாகன ஒன்றிணைப்பு தொழிற்சாலை ஆகியவற்றில் செயற்படுத்தப்பட்டுள்ள சூழல் நலன் முயற்சிகளை இந்த விருதுகள் அங்கீகரிக்கின்றன.

DPMC மடபாத்த சேவை மையம் – மெரிட் விருதில் இருந்து தங்க விருதை நோக்கிய பயணம்

வாகன பராமரிப்பு, சேவைகள் மற்றும் பழுதுபார்க்கும் மையமான DPMC மடபாத்த மையம், 2024 இல் மெரிட் விருதையும் 2025 இல் வெண்கல விருதையும் பெற்றதைத் தொடர்ந்து தற்போது 2026 இல் தங்க விருதை பெற்று சாதனை படைத்துள்ளது. மழைநீர் சேகரிப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் அதன் மீள்பயன்பாடு, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி பயன்பாடு, பொறுப்பான கழிவு முகாமைத்துவம் மற்றும் வளங்களின் பாதுகாப்பு ஆகியவற்றின் மூலம் சூழல் நலன் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கான அதன் அர்ப்பணிப்பை இந்த தொடர்ச்சியான முன்னேற்றம் பிரதிபலிக்கிறது.

ரன்ன வாகன ஒன்றிணைப்பு தொழிற்சாலை – தங்க விருது

தனது முதலாவது பங்கேற்பிலேயே தங்க விருதை வென்ற ரன்ன உற்பத்தி வளாகத்தின் ஒன்றிணைப்புத் தொழிற்சாலை. மழைநீர் சேகரிப்பு, நீர் முகாமைத்துவத்திற்கு ஆதரவளிக்கும் தளத்திலுள்ள நீர்நிலைகள், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்கள், முறையான கழிவு முகாமைத்துவம் மற்றும் காபன் மற்றும் நீர் மாசு மதிப்பீடுகள் உள்ளிட்ட ஒருங்கிணைந்த சூழல் முகாமைத்துவ நடைமுறைகளுக்காக இந்த அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இதன் ‘Net Zero Energy Certification’ சான்றிதழானது, வளங்களின் திறனான பயன்பாடு மற்றும் நிலைபேறான தொழிற்துறை செயற்பாடுகளுக்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை மேலும் எடுத்துக் காட்டுகிறது.

DPMC மாத்தறை சேவை மையம் – வெள்ளி விருது

DPMC மாத்தறை சேவை மையமானது தனது முதலாவது பங்கேற்பிலேயே வெள்ளி விருதை தட்டிச் சென்றது. இதன் சூழல் நலன் முயற்சிகளில் கூரை மீதான சூரிய சக்தி, வாகனங்களை கழுவுவதற்கான நீரில் சுமார் 95% ஐ மீள்சுழற்சி செய்யும் கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் மீள்பயன்பாட்டுத் தொகுதிகள், மேம்படுத்தப்பட்ட வளத் திறன் மற்றும் அபாயகரமான கழிவுகள் மற்றும் சூழல் மாசுபாட்டைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் ஆகியன உள்ளடங்குகின்றன.

வாடிக்கையாளர்களுக்கு நன்மையளிக்கும் சூழல் பொறுப்பு

இந்த சாதனைகள் வணிகச் செயற்பாடுகளில் சூழல் அம்சங்களை ஒருங்கிணைப்பதற்கான குழுமத்தின் அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகின்றன. புதுப்பிக்கத்தக்க வலுசக்தி, நீர் பாதுகாப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் பொறுப்பான கழிவு முகாமைத்துவம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் மூலம், தனது செயற்பாடுகளில் சூழல் தாக்கத்தை குழுமம் தொடர்ச்சியாக குறைத்து வருகிறது.

குழுமத்தின் வாகன செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள மையங்கள் அங்கீகரிக்கப்பட்ட சூழல் முகாமைத்துவ நடைமுறைகளைச் செயல்படுத்துகின்றன எனும் மேலதிக நம்பிக்கையை இந்த விருதுகள் வாடிக்கையாளர்களுக்கு  வழங்குகின்றன. ஒவ்வொரு தனிப்பட்ட தயாரிப்பையும் சான்றளிப்பதற்கு பதிலாக சம்பந்தப்பட்ட மையங்களின் சூழல் நலன் சார்ந்த செயற்பாடுகளை இந்த விருதுகள் அங்கீகரித்து கௌரவிக்கும் அதே வேளையில், பொறுப்பான உற்பத்தி, வாகன ஒன்றிணைப்பு மற்றும் வாகன பராமரிப்புச் சேவைக்கான குழுமத்தின் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கின்றன.

நிலைபேறான எதிர்காலத்திற்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பு

இந்த சாதனைகள் குழுமத்தின் நிலைபேறான தன்மை தொடர்பான மூலோபாய ரீதியான ‘DPG STEP’ (Sustain, Track, Empower, Progress) உடன் ஒத்துப் போவதாக அமைகின்றன. இது தமது நிறுவனங்கள் முழுவதும் அளவிடக்கூடிய சூழல் மேம்பாடுகள் மற்றும் பொறுப்பான வணிக நடைமுறைகளை ஊக்குவிக்கிறது.

சூழல் செயற்பாடுகளை வலுப்படுத்தவும், வளங்களை பாதுகாக்கவும், தூய, பசுமையான, நிலைபேறான இலங்கைக்கு பங்களிக்கவும் டேவிட் பீரிஸ் குழுமம் தொடர்ந்தும் உறுதியுடன் உள்ளது.

Previous post

நான்கு சமையல் கலைஞர்கள், தாராளமான விருந்துபசாரம்: ‘Flavours of Türkiye’ மீண்டும் ஷங்ரி-லா கொழும்பிற்கு வருகிறது

Next post

ரோயல் – தோமஸ் படகோட்டப் போட்டியில் அடுத்த தலைமுறை தோமஸ் கல்லூரி படகோட்ட அணிக்கு புத்துயிரளிக்கும் பெல்வத்த

Post Comment