‘மேட் இன் ஸ்ரீலங்கா’ முத்திரையின் கீழ் புதிய ‘Switchgear’ வகையிலான உள்நாட்டு உற்பத்தியை விரிவுபடுத்தும் Polycrome
இந்த அறிமுகமானது 45 வருட வரலாறு கொண்ட இலங்கை வர்த்தகநாமத்திற்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைவதுடன், உள்நாட்டு உற்பத்தி மற்றும் தரமான மின்சாரத் தீர்வுகள் தொடர்பான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை காட்டுகிறது

நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட இலங்கை வர்த்தகநாமமான Polycrome, ‘மேட் இன் ஸ்ரீலங்கா’ (Made in Sri Lanka – உள்நாட்டு தயாரிப்பு) முத்திரையின் கீழ் புதிய ‘Switchgear’ (ஸ்விட்ச்கேர்) வகையிலான உற்பத்திகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நிறுவனத்தின் தயாரிப்பு வகைகளின் முக்கிய விரிவாக்கத்தைக் குறிப்பதுடன், உள்ளூர் உற்பத்தி மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கான அதன் அர்ப்பணிப்பை வலுப்படுத்துகிறது.
இலங்கைச் சந்தைக்கு உயர்தர மின்சாரத் தீர்வுகளை வழங்குவதற்கும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உற்பத்திகளின் வளர்ச்சியை ஆதரிப்பதற்கும் இவ்வர்த்தகநாமத்தின் பயணத்தில் இந்த அறிமுகமானது, மற்றுமொரு முக்கியமான மைல்கல்லாகும். கொழும்பு, ITC Ratnadipa ஹோட்டலில் நவம்பர் 16 இடம்பெற்ற Polycrome 2025–2026 Achievers’ Night சாதனையாளர்கள் இரவு விழாவில், நிறுவனத்தின் விற்பனை மற்றும் விநியோக வலையமைப்பின் சாதனைகளுடன் இந்த அறிமுகம் கொண்டாடப்பட்டது.
தனது 45 ஆண்டு கால பயணத்தில், நாட்டின் மின்சார நிறுவல்கள் மற்றும் உட்கட்டமைப்புகளுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட பல்வேறு வகையான தயாரிப்புகள் மூலம் இலங்கையின் மின்சார உற்பத்தித் துறையில் வலுவான இருப்பை Polycrome மேற்கொண்டுள்ளது. மினியேச்சர் சர்க்யூட் பிரேக்கர் (Miniature Circuit Breaker – MCB) அடைப்புகள், சுவிட்ச்சுகள் மற்றும் சொக்கெட்டுகள், BLDC கூரை மின்விசிறிகள், மின்விளக்குகள், மின்சார உபகரணங்கள் மற்றும் கேபிள் முகாமைத்துவ கட்டமைப்புகள் உள்ளிட்டவை அதன் தயாரிப்பு வகைகளில் உள்ளடங்குகின்றன. இலங்கையின் முதலாவது பிளாஸ்டிக் MCB அடைப்புகளை வழங்குவதோடு, பாரம்பரிய மரப் பதிப்புத் தயாரிப்புகளுக்கு மாற்றீடாக நீண்ட காலத்திற்கு உழைக்கும் பிளாஸ்டிக் சுவிட்ச்சுகள் மற்றும் சொக்கெட் மவுண்டிங் பாக்ஸ் அறிமுகத்தின் மூலம் இது உள்நாட்டு கைத்தொழில் துறைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளது. புத்தாக்கம், தரம் மற்றும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட மின்சார தீர்வுகள் மீது நிறுவனம் கொண்டுள்ள நீண்டகால கவனமானது, உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட மற்றும் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளில் பிரதிபலிக்கிறது.
உறுதியான இடத்தைப் பிடித்துள்ள இந்த தயாரிப்பு வகைகளின் அடிப்படையில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஸ்விட்ச்கேர்’ வகை தயாரிப்புகளானவை, தமது மின்சார தயாரிப்பு வரிசையை விரிவுபடுத்துவதற்கும் உள்ளூர் சந்தையில் தனது நிலையை வலுப்படுத்துவதற்கும் Polycrome மேற்கொள்ளும் முயற்சிகளில் மற்றுமொரு படியை எடுத்துக் காட்டுகிறது.
Polycrome நிறுவனத்தின் முன்னணி விநியோகஸ்தர்கள், விற்பனை அலுவலர்கள் மற்றும் உள்ளூர் விற்பனை முகாமையாளர்களின் செயல்திறன் மற்றும் பங்களிப்புகளையும் இந்த நிகழ்வு அங்கீகரித்து கௌரவித்தது. இவர்களது அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் ஆதரவுமே இவ்வர்த்தகநாமத்தின் வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக அமைந்துள்ளன.
பொலிகிராமின் நீண்டகால சந்தை இருப்பிற்கு பங்களித்த பங்காளித்துவங்களை அங்கீகரித்து கௌரவிப்பதற்கும், அதன் சமீபத்திய முக்கிய அடைவின் பின்னணியில் உள்ள கூட்டு முயற்சிகளைக் கொண்டாடுவதற்கும் இந்த நிகழ்வு ஒரு வாய்ப்பாக அமைந்தது.
உள்ளூர் உற்பத்தி, புத்தாக்கம் மற்றும் தரம் ஆகியவற்றிலான தொடர்ச்சியான கவனத்துடன், Polycrome தனது நிறுவப்பட்ட பாரம்பரியத்தைக் கட்டியெழுப்பவும், அதன் ‘ஸ்விட்ச்கேர்’ வகையின் அறிமுகத்துடனும் இலங்கையின் மின்சார தீர்வுகள் துறைக்கு தனது பங்களிப்பை வலுப்படுத்தவும் எதிர்பார்க்கிறது.
END











Post Comment