1928 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது முதல், தங்க நகை உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வரும் ராஜா ஜுவல்லர்ஸ், கிரிபத்கொடையில் தனது நான்காவது காட்சியறையை வெற்றிகரமாகத் திறந்து வைத்துள்ளதாக அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது. நேர்த்தி மற்றும் அதிநவீனத்தின் மீது நாட்டம் கொண்டவர்களுக்காக, சர்வதேச அளவில் கவர்ச்சி மிக்க, பல்வேறு தனித்துவமான வடிவமைப்புகளைக் காட்சிப்படுத்தும் அது, அனைத்து நகைகளையும் போட்டி விலையில் வழங்குகின்றது. இந்த முக்கியமான தருணத்தில்  வாடிக்கையாளர்களுக்காக ஒப்பிட முடியாத நகைத் தெரிவுகளை வழங்கும் அதன் அர்ப்பணிப்பை இது கோடிட்டுக் காட்டுகிறது.

95 ஆண்டுகால புகழ் மிக்க வரலாற்றைக் கொண்ட ராஜா ஜுவலர்ஸ், இலங்கையில் அதிக விருதுகளைப் பெற்ற நகை வர்த்தக நாமம் எனும் பெயரைக் கொண்டுள்ளது. மிகக் கோலாகலமாக திறக்கப்பட்ட இந்த கிரிபத்கொடை காட்சியறையானது, அதன் கைவினைத்திறனையும், வாடிக்கையாளர் திருப்திக்கான அதன் அர்ப்பணிப்புக்கான ஒரு முக்கிய சான்றாகவும் விளங்குகிறது.

ராஜா ஜுவலர்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அத்துல எலியபுர, புதிய கிரிபத்கொடை காட்சியறை திறப்பு தொடர்பான தனது கருத்துகளை வெளியிடுகையில், “எமது புதிய காட்சியறையானது, உயர்தர கைவினைத்திறனை வழங்குவதற்கும், வாடிக்கையாளர்களின் திருப்தியை உறுதி செய்வதற்குமான எமது நிலையான அர்ப்பணிப்பின் ஒரு பிரதிபலிப்பாகும். எமது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு போட்டித்தன்மை மிக்க விலைகளில், பிரத்தியேகமான தனித்துவ வடிவமைப்புகளில் அமைந்த நகைத் தெரிவுகளின் வரிசையை வழங்குவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.

இந்த மகத்தான சாதனையைக் கொண்டாடும் வகையில், காட்சியறையின் பிரம்மாண்ட திறப்பு விழாவையிட்டும், எதிர்வரும் பண்டிகைக் காலம் முழுவதும் கவர்ச்சிகரமான ஊக்குவிப்பு சலுகைகளை ராஜா ஜுவலர்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் காட்சியறைக்கு வரும் ஒவ்வொருவருக்கும் மறக்கமுடியாத அனுபவத்தை உறுதி செய்யும் வகையில், நேர்த்தியான நகைகளை பார்வையிடும் வாய்ப்புகளும் காணப்படுகின்றன.

கிரிபத்கொடை காட்சியறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நகைகளையும் அதன் சிறப்புகளையும் அறிந்துகொள்வதற்காக, நகை மீது ஆர்வம் கொண்ட அனைவரையும் ராஜா ஜுவலர்ஸ் அன்புடன் அழைக்கிறது. தங்க நகை உலகின் தலைவன் எனும் வகையில், ஆடம்பரத்தையும் பாரம்பரியத்தையும் மீள் வரையறை செய்து, தலைமுறைகளாகப் போற்றப்படும் காலத்தால் அழியாத நகைகளை அவர்கள் வழங்குகிறார்கள்.

ராஜா ஜுவலர்ஸின் விரிவான நகைகளின் சேகரிப்புகள் பற்றி அறிந்து கொள்ளவும், மேலதிக தகவல்களுக்கும், www.rajajewellers.com இணையத்தளத்தைப் பார்வையிடவும். அதன் Facebook பக்கம்: www.fb.com/Rajajewellers.lk/ மற்றும் அதன் Instagram பக்கம்: www.instagram/rajajewellers.lk ஊடாகவும் இணையலாம்.

END

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *