சருமப் பராமரிப்பு தீர்வுகளைத் தெரிவு செய்யும்போது, ஈரப்பதனூட்டும் பண்புகள் கொண்ட தயாரிப்புகளே ​​நாளாந்த சருமப் பராமரிப்பு நடைமுறைகளுக்கான சிறந்த தயாரிப்புகளாகும். சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், சருமத்தின் இளமையான தோற்றத்தை பாதுகாக்கவும் உதவும் ஒரு முக்கிய அங்கமாக ஈரப்பதன் காணப்படுகின்றது. குறிப்பாக இலங்கை போன்ற ஒரு நாட்டில் சூடான மற்றும் புழுக்கமான காலநிலையைக் கருத்தில் கொண்டு ஈரப்பதனூட்டும் பண்புகளைக் கொண்ட சருமப் பராமரிப்புப் பொருட்களைத் தேர்ந்தெடுப்பது இன்றியமையாததாகும். தற்காலப் பெண்கள் தயாரிப்புகளின் தரம், தயாரிப்பின் மூலப்பொருட்கள், சருமப் பராமரிப்பு நடைமுறைகளில் ஒவ்வொரு தயாரிப்பும் வழங்கும் நன்மைகள் குறித்து அதிக கவனமாக இருக்கிறார்கள். மென்மையான மற்றும் ஆரோக்கியமான சருமத்தை பெறுவதற்கு உதவுகின்றதும், சருமத்திற்கு உகந்த மூலப்பொருட்கள் கொண்ட கலவையைக் கொண்டிருக்கின்றதும், தங்களது பட்ஜெட்டுக்கு இணங்குகின்றதுமான தயாரிப்புகளையே பெண்கள் தெரிவு செய்கின்றனர்.

புதிய Velvet body wash (பொடி வொஷ்) உற்பத்திகள், சருமத்திற்கு அதிக ஈரப்பதன் மற்றும் நீண்ட நேரத்திற்கு நிலைத்திருக்கும் நீரேற்றத்தை வழங்குவதற்காக hydraboost தொழில்நுட்பத்தை இணைத்து மூன்று தனித்துவமான வகைகளுடன் மீள அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Velvet பொடி வொஷில் உள்ள ஈரப்பதனூட்டும் பண்புகள் மென்மையான, மிருதுவான, மீள்தன்மை கொண்ட சருமத்தை உறுதி செய்யும் அதே வேளையில், சருமத்தில் வரட்சியை நீக்கி பொலிவான சருமத்தை வழங்குகிறது. Black Orchid & Hibiscus, Wild Rose & Cherry Blossom, Vanilla & Shea Butter ஆகிய மூன்று வகைகளில் இந்த பொடி வொஷ்கள் வருகின்றன. ஒவ்வொரு வகையிலும் உள்ள சோடியான இரண்டு மூலப்பொருட்கள், மேலதிக சருமப் பராமரிப்பு நன்மைகளை வழங்குவதோடு, நீண்ட நேரத்திற்கு நிலைக்கும் நறுமணத்தையும் வழங்கி, நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க பெண்களுக்கு உதவுகிறது.

Velvet பொடி வொஷ் ஆனது, சிறந்த சுகாதார மற்றும் பாதுகாப்புத் தரங்களுக்கு இணங்க தயாரிக்கப்படுவதுடன், தோலில் எரிவை ஏற்படுத்தாது என மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இத்தயாரிப்பு ஒரு நாளைக்கு பல முறை பயன்படுத்தும் வகையில் பாதுகாப்பானது என பரிந்துரைக்கப்படுவதுடன், இது அதிக செறிவைக் கொண்டதாக காணப்படுவதால் ஒரு போத்தலில் இருந்து அதிகளவான பயன்பாட்டை உறுதி செய்கிறது. சவர்க்காரம், ஹேண்ட் வொஷ், பொடி லோஷன், பொடி வொஷ் ஆகியவற்றின் விரிவான தயாரிப்புகளின் மூலம் தனது இருப்பை உறுதிப்படுத்தியுள்ள Velvet, இலங்கைப் பெண்களின் சருமப் பராமரிப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சிறந்த வரலாற்றைக் கொண்டுள்ளது. Velvet தயாரிப்புகள் Hydrasoft  தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படுவதால், அது மென்மையான மற்றும் சிறப்பாக நீரேற்றப்பட்ட சருமத்தை வழங்குவதற்காக, ஈரப்பதனை சருமத்தில் தக்க வைக்கிறது. இலங்கைப் பெண்களின் சருமப் பராமரிப்புத் தேவைகளைப் புரிந்துகொள்ளும் ஒரு உண்மையான இலங்கை வர்த்தக நாமமான Velvet, உள்நாட்டிலுள்ள அனைத்து சரும வகைகளுக்கும் ஏற்றது என்பதை சோதனைக்கு உட்படுத்தி, உறுதிப்படுத்தி சருமப் பராமரிப்பு தீர்வுகளை வழங்குகிறது.

Velvet நுகர்வோரின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பில் கவனம் செலுத்தும் அதே வேளையில், சிறந்த சருமப் பராமரிப்பை வழங்குவதில் புகழ்பெற்று விளங்குகின்றது. Velvet தயாரிப்புகளில் உள்ள ‘safety for skin’ (தோலுக்கு பாதுகாப்பானது) எனும் சான்றானது, நிறுவனம் ஆரோக்கியமான தயாரிப்புகளை வழங்குவதில் அதிக கவனம் செலுத்துகின்றது என்பதற்கு உண்மையான சான்றாகும். IFRA, ISO, GMP சான்றிதழ்களை புதிய பொடி வொஷ் வகைகள் கொண்டுள்ளதன் மூலம், Velvet அதன் விசுவாசமான நுகர்வோருக்கு பல்லாண்டு காலமாக வழங்கி வரும் நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்துகிறது. பெண்களின் இதயத்திற்கு நெருக்கமான ஒரு வர்த்தகநாமம் எனும் வகையில், Velvet அவர்களின் சரும அழகை பராமரிக்க உதவும் சிறந்த சருமப் பராமரிப்பு நன்மைகளை வழங்க உறுதிபூண்டுள்ளது.

END

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *