மீண்டும் தங்க விருதை வென்ற ஹலால் கவுன்சில்!’CNCI Achiever Awards 2026′ இல் இரட்டை கௌரவம்
2024 இல் வெள்ளி விருதில் இருந்து ஆரம்பித்து, 2025 மற்றும் 2026 ஆகிய இரண்டு வருடங்களிலும் தங்கம் மற்றும் சிறந்த சாதனையாளர் விருதுகளைப் பெற்று, HAC அமைப்பானது சேவைக்கான விசேடத்துவத்தில் தேசிய கௌரவத்தை தொடர்ச்சியாக மூன்றாவது வருடமாக பெற்று கொண்டாடுகிறது.
இலங்கை தேசிய கைத்தொழில் சபை (CNCI), கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து முன்னெடுத்த கைத்தொழில்துறை விசேடத்துவத்திற்கான 25ஆவது ‘CNCI Achiever Awards 2026’ நிகழ்வில், ஹலால் சான்றுறுதிப் பேரவை (Halal Assessment Council (Guarantee) Limited – HAC) மீண்டுமொரு முறை மதிப்புமிக்க தங்க விருதையும், “Top Achievers Award” எனப்படும் சிறந்த சாதனையாளர் விருதையும் வென்றுள்ளது.
இந்த அண்மைய சாதனை மூலம், இவ்விரண்டு கௌரவங்களையும் HAC அமைப்பு தொடர்ச்சியாக பெறும் இரண்டாவது ஆண்டைக் குறிப்பதுடன், 2024ஆம் ஆண்டில் வெள்ளி விருதை வென்று, இலங்கையின் சேவைத் துறையில் அவ்வமைப்பு கொண்டுள்ள விசேடத்துவத்திற்கான நிலையான சாதனையை இது எடுத்துக் காட்டுகிறது.

இடமிருந்து வலமாக: ருவன் எதிரிசிங்க (முன்னாள் தலைவர், CNCI), ரவி ரூபசிங்க (உள் நடுவர் குழு உறுப்பினர், CNCI), இல்மி ஹேவாஜூலிகே (பிரதம நிறைவேற்று அதிகாரி, இலங்கை நனோ தொழில்நுட்ப நிறுவனம்).
தனது 25ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் CNCI Achiever Awards நிகழ்வானது, வணிகச் செயற்பாடு, புத்தாக்கம், தரம், உற்பத்தித்திறன் மற்றும் நிலைபேறான வளர்ச்சி ஆகியவற்றில் சிறந்து விளங்கும் இலங்கை நிறுவனங்களை அங்கீகரித்து கௌரவிக்கிறது.
இந்த சாதனைகள் குறித்து HAC இன் பணிப்பாளரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஆகிஃப் ஏ. வஹாப் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த விருதுகள் எமது சாதனைகளுக்கான அங்கீகாரம் என்பதையும் தாண்டி, எமது குழுவின் அர்ப்பணிப்பையும் இலங்கை வணிக நிறுவனங்களும் நுகர்வோரும் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையையும் பிரதிபலிக்கின்றன. நம்பகமான ஹலால் சான்றளிப்பானது நுகர்வோர் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவது மட்டுமன்றி, இலங்கைத் தயாரிப்புகள் உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் போட்டியிட்டு வெற்றி பெற உதவுவதை உறுதி செய்வதே ஆகும். என்றார்.
தொடர்ச்சியாக மூன்று வருடங்களாக தேசிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ள HAC அமைப்பானது, நுகர்வோர் நம்பிக்கையை எவ்வாறு வலுப்படுத்த முடியும் என்பதையும், உள்ளூர் வணிகங்களை ஊக்குவிப்பதுடன் உள்ளூர் மற்றும் உலகளாவிய சந்தைகளில் இலங்கை தயாரிப்புகளுக்கான வாய்ப்புகளை எவ்வாறு உருவாக்க முடியும் என்பதையும் நம்பகமான ஹலால் சான்றளிப்பின் மூலம் தொடர்ச்சியாக நிரூபித்து வருகிறது.
Image Caption :
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் கௌரவ சத்துரங்க அபேசிங்கவிடமிருந்து HAC இன் முகாமைத்துவ பணிப்பாளர் ரிஸ்வி ஷஹீட் தங்க விருதைப் பெறுகிறார்.
இடமிருந்து வலமாக: ஆகிஃப் (பணிப்பாளர் – பிரதம நிறைவேற்று அதிகாரி, HAC), கெவின் எட்வர்ட்ஸ் (முன்னாள் தலைவர், CNCI), பிரதீப் கஹவலகே (தலைவர், CNCI), நபாஸ் (தரப் பிரிவுத் தலைவர் , HAC).











Post Comment