Groundworth இன் “ISLA” – சிறந்த வாழ்க்கைக்கும் நீண்டகால மதிப்பிற்குமாக வடிவமைக்கப்பட்ட ஹோகந்தரவில் உள்ள சொகுசு நில அபிவிருத்தித் திட்டம் அறிமுகம்
Groundworth Group இனால் ஹோகந்தரவில் “ISLA” எனும் பிரத்தியேக சொகுசு நில அபிவிருத்தித் திட்டத்தை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது மூலோபாய இணைப்பு வசதி, இயற்கை எழில்மிக்க சூழல் மற்றும் நீண்டகால முதலீட்டுச் சாத்தியக்கூறுகளை ஒன்றிணைக்கும் சிந்தனைமிக்க திட்டமிடப்பட்ட ஒரு பாதுகாக்கப்பட்ட குடியிருப்புச் சமூகத்தை வழங்குகிறது. “Your Island Within the City” எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள ISLA, கொழும்பின் விரிவடைந்து வரும் புறநகர்ப் பகுதிகளை இலகுவாகச் சென்றடையும் வசதியுடன், ஒரு சொகுசு குடியிருப்புச் சமூகத்திற்குரிய தனித்துவத்தையும் அமைதியையும் ஒன்றாகக் கொண்டுவருகிறது.
ISLA திட்டம் ஹோகந்தரவில் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் பகுதியில், சுற்றியுள்ள நகரங்களுக்கும் பிரதான பாதைகளுக்கும் சிறந்த இணைப்பு வசதியை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. ஹோகந்தரவில் அமைந்துள்ள இந்த அபிவிருத்தித் திட்டம், குடியிருப்பாளர்களை நன்கு வளர்ச்சியடைந்த குடியிருப்பு மற்றும் வர்த்தகப் பகுதிகளுக்கு மிக அருகில் கொண்டு வருவதுடன், தலவத்துகொட, பன்னிபிட்டிய, கொட்டாவ மற்றும் அத்துருகிரிய ஆகிய பகுதிகளுக்கு இலகுவாகச் சென்றடையும் வசதியையும் வழங்குகிறது. இத்திட்டம் இலக்கம் 15/10, பஸ்டியன் வெரகல மாவத்தை, ஹோகந்தர வடக்கு, ஹோகந்தர எனும் முகவரியில் அமைந்துள்ளது.

இந்த அறிமுகம் தொடர்பில் Groundworth Group இன் முகாமைத்துவ பணிப்பாளரும், இணை ஸ்தாபகருமான கசுன் அந்த்ரஹென்னதி கருத்துத் தெரிவிக்கையில், “வெறும் ஒரு இடத்தைத் தாண்டி மதிப்பு வழங்கும் நிலங்களை அடையாளம் காண்பதற்கான எங்கள் அணுகுமுறையை ISLA பிரதிபலிக்கிறது. சிந்தனைமிக்க திட்டமிடல், மதிப்பு உயர்வதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் தரமான வாழ்க்கைச் சூழல் ஆகியவற்றை ஒன்றிணைத்து, ஹோகந்தரவில் சிறந்த போக்குவரத்து இணைப்புள்ள பகுதியில் ஒரு நவீன அபிவிருத்தித் திட்டத்தை உருவாக்குவது எங்கள் இலக்காக இருந்தது. வாடிக்கையாளர்கள் தமது இலட்சியங்களைப் பிரதிபலிக்கும் ஒரு இடத்தை உருவாக்குவதோடு, தங்களின் முதலீட்டின் மீது முழு நம்பிக்கையையும் வழங்கும் வகையில் ISLA வடிவமைக்கப்பட்டுள்ளது.” என்றார்.

ISLA இன் பிரத்தியேக பாதுகாக்கப்பட்ட குடியிருப்பு வடிவமைப்பு, அதன் ஒவ்வொரு அம்சத்திலும் உயர்ந்த மற்றும் பாதுகாப்பான வாழ்க்கைச் சூழலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் பிரதான திட்டத்தில் 6 பேர்ச் மற்றும் அதற்கு மேற்பட்ட அளவிலான 30 சொகுசு நிலப்பரப்புகள் மட்டுமே உள்ளன. இக்காணித் தொகுதி இயற்கை எழில்மிக்க சூழல், 30 அடி அகலமான உட்புற அணுகல் வீதிகள் மற்றும் சமூகம், தனித்துவம், விசாலமான தன்மை ஆகியவற்றின் உணர்வை உருவாக்கும் வகையில் நன்கு கட்டமைக்கப்பட்ட அமைப்பைக் கொண்டுள்ளது.

தெளிவான உறுதிப்பத்திரங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வரைபடங்கள் ஆகியவை இத்திட்டத்திற்கு மேலும் வலுசேர்ப்பதுடன், நீண்டகால முதலீட்டிற்காக அல்லது குடியிருப்பு அபிவிருத்திக்காக இக்காணியைக் கருத்திற் கொள்ளும் கொள்வனையாளர்களுக்கு அதிக உத்தரவாதத்தையும் அளிக்கின்றன. காணி ஒன்றின் விலை பேர்ச் ஒன்றுக்கு 1.8 மில்லியன் ரூபாயிலிருந்து ஆரம்பிக்கின்றது.
ISLA ஐ தற்போது நேரடியாக சென்று பார்வையிட முடியும் என்பதுடன், சில காணித் துண்டுகள் மாத்திரமே எஞ்சியுள்ளன.









Post Comment