வரலாற்றுச் சிறப்புமிக்க 100 மில்லியன் வாகன உற்பத்தி மைல்கல்லை எட்டிய ஒரேயொரு சீன வாகன உற்பத்தியாளரான SAIC நிறுவனத்தின் பின்னணியைக் கொண்ட IM Motors

உலகளாவிய ரீதியில் 100 மில்லியன் வாகனங்களை விநியோகித்த முதலாவது சீன வாகனக் குழுமமாக SAIC Motor நிறுவனம் உருவெடுத்துள்ளது. இது உலகளாவிய வாகனத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைவதுடன், இலங்கையில் Evolution Auto (Pvt) Ltd நிறுவனத்தினால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் IM Motors வர்த்தகநாமத்தின் உற்பத்திப் பின்னணியையும் வலுப்படுத்துகிறது.

SAIC மோட்டார் நிறுவனத்தின் 100 மில்லியனாவது வாகனமாக ‘IM Motors LS9 Hyper’ விநியோகிக்கப்பட்டுள்ளது. இது SAIC Motor நிறுவனத்தின் அடுத்த தலைமுறை உயர் ரக மின்சார வாகன வர்த்தகநாமமாக IM Motors வகிக்கும் பங்கையும், புத்திசாலித்தனமான போக்குவரத்து தீர்வுகளை நோக்கிய அக்குழுமத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் எடுத்துக் காட்டுகிறது.

இந்த வரலாற்றுச் சாதனை குறித்து Evolution Auto  நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி விரான் டி சொய்சா கருத்துத் தெரிவிக்கையில், “100 மில்லியன் வாகனங்களை விநியோகித்துள்ள SAIC Motor நிறுவனத்தின் இச்சாதனையானது, பல தசாப்த கால பொறியியல் விசேடத்துவம், உற்பத்தித் திறன் மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கையைப் பிரதிபலிக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாகும். IM Motors வர்த்தகநாமமானது, உலகின் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளர்களில் ஒருவரால் ஆதரிக்கப்படுகிறது எனும் உண்மை இலங்கை வாடிக்கையாளர்களுக்குப் பெரும் நம்பிக்கையை அளிக்கிறது. உலகளாவிய ரீதியிலான இந்த வலிமையை இலங்கையில் உள்ள எமது நிபுணத்துவம் மிக்க விற்பனைக்குப் பிந்தைய சேவை, அசல் உதிரிப்பாகங்களின் கையிருப்பு மற்றும் ஒவ்வொரு IM Motors உரிமையாளருக்குமான நீண்டகால அர்ப்பணிப்பு ஆகியவற்றின் ஊடாக மேலும் பலப்படுத்த, Evolution Auto  ஆகிய நாம் கடமைப்பட்டுள்ளோம்.” என்றார்.

ஏழு தசாப்தங்களுக்கும் மேலான வாகன உற்பத்தி அனுபவத்தைக் கொண்டுள்ள SAIC Motor, உலகின் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட வர்த்தகநாமங்கள், மூலோபாயக் கூட்டாண்மைகள் மற்றும் அதற்குரித்தான புத்திசாலித்தனமான மின்சார வாகனங்களின் (intelligent EVs) விரிவாக்கத்தின் மூலம், அதன் வாகனங்கள் தற்போது 170 இற்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த மைல்கல்லானது, IM Motors வர்த்தகநாமத்தின் பின்னணியில் அசைக்க முடியாத உற்பத்தித் திறன், நிரூபிக்கப்பட்ட பொறியியல் நிபுணத்துவம், புத்தாக்கம் தொடர்பான நீண்டகால அர்ப்பணிப்பைக் கொண்ட ஒரு முன்னணி உலகளாவிய உற்பத்தியாளர் உடனிருப்பதை உறுதிப்படுத்துகிறது.

இலங்கையில் IM Motors வாகனங்களின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான Evolution Auto, இந்த உலகளாவிய அடித்தளத்தை உள்ளூர் விற்பனை, விசேட சேவைப் பராமரிப்பு, அசல் உதிரிப்பாகங்கள் மற்றும் தொழில்நுட்ப அறிவு ஆகியவற்றின் மூலம் மேலும் மேம்படுத்துகிறது. இது வாடிக்கையாளர்கள் உள்ளூரிலும் சர்வதேச ரீதியிலும் மிகச்சிறந்த வாகன உரிமை அனுபவத்தைப் பெறுவதை உறுதி செய்கிறது.

இலங்கையின் மின்சார வாகனச் சந்தை தொடர்ச்சியாக முன்னேற்றமடைந்து வரும் நிலையில், இந்த மைல்கல்லானது IM Motors வாகனங்களை உலகின் மிகவும் அனுபவம் வாய்ந்த வாகன உற்பத்தியாளரால் ஆதரிக்கப்படும் ஒரு உயர்தர மின்சார வாகன வர்த்தகநாமமாக மீள நிலைநிறுத்துகிறது.

END

Post Comment