Lenovo 360 Accelerate 2026 நிகழ்வில் IT Gallery Computers (Pvt) Ltd. நிறுவனத்திற்கு ‘Distributor Excellence Award 2025–2026 | Gaming & Visual Sri Lanka’ விருது
Lenovo (லெனோவா) நிறுவனத்துடனான தனது தொடர்ச்சியான கூட்டாண்மை மற்றும் இலங்கையில் Gaming & Visual வணிகப் பிரிவின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாக, Lenovo 360 Accelerate 2026 நிகழ்வில் மதிப்பு வாய்ந்த ‘Distributor Excellence Award 2025–2026 | Gaming & Visual Sri Lanka’ விருது வழங்கி IT Gallery Computers (Pvt) Ltd. நிறுவனம் கௌரவிக்கப்பட்டுள்ளது.
இந்த அங்கீகாரமானது, உள்ளூர் சந்தையில் Lenovo நிறுவனத்தின் இருப்பை விரிவுபடுத்துவதில், குறிப்பாக கேமிங், உள்ளடக்க உருவாக்குநர்களுக்கான (Creator-focused) சாதனங்கள் மற்றும் visual computing தீர்வுகள் போன்ற அதிக மேம்பட்ட பிரிவுகளில் IT Gallery Computers (Pvt) Ltd. ஒரு முக்கிய உந்து சக்தியாக விளங்குவதை எடுத்துக் காட்டுகிறது. இலங்கையின் தகவல் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப (ICT) துறை முழுவதும் விநியோகஸ்தர் கூட்டாண்மைகளை வலுப்படுத்துதல், சந்தையை மேம்படுத்துதல், வாடிக்கையாளர்களின் நீண்டகால நம்பிக்கையை கட்டியெழுப்புதல் ஆகியவற்றில் இந்நிறுவனம் மேற்கொண்டு வந்துள்ள தொடர்ச்சியான முயற்சிகளை இந்த விருது அங்கீகரிக்கிறது.
கடந்த பல வருடங்களாக, நாடளாவிய ரீதியிலான பலமான மீள்விற்பனையாளர் (Reseller) வலையமைப்பின் மூலம், Lenovo வர்த்தகநாமத்தின் உயர் ரக தொழில்நுட்பங்களை பரந்தளவில் அணுகுவதற்கு வழிவகை செய்வதில் IT Gallery Computers (Pvt) Ltd. நிறுவனம் முக்கிய பங்காற்றியுள்ளது. கூட்டாளர்களின் முன்னேற்றம், வர்த்தகநாமத்தின் மீதான ஈடுபாட்டு நடவடிக்கைகள் மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட திட்டங்களில் நிறுவனம் மேற்கொண்ட தொடர்ச்சியான முதலீடானது கேமிங் ஆர்வலர்கள், படைப்பாற்றல் நிபுணர்கள், கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவன பயனர்கள் மத்தியில் இந்த தயாரிப்புகள் பற்றிய விழிப்புணர்வையும் அதன் பயன்பாட்டையும் துரிதப்படுத்த உதவியுள்ளது.
IT Gallery Computers (Pvt) Ltd. நிறுவனம் Lenovo Legion மற்றும் LOQ கேமிங் சாதனங்கள், Lenovo Legion கேமிங் மொனிட்டர்கள் மற்றும் உள்ளடக்க உருவாக்குனர்கள் மற்றும் நிபுணர்களுக்கான Lenovo ThinkVision மொனிட்டர்கள் போன்ற தயாரிப்பு வரிசைகளின் மூலம் இலங்கையில் Lenovo வர்த்தகநாமத்தின் கேமிங் மற்றும் விஷுவல் தயாரிப்புகளை தொடர்ச்சியாக வலுப்படுத்தி வருகிறது. இந்நிறுவனம் நுகர்வோருக்காக பல்வேறு பயனர் தேவைகள் மற்றும் சந்தைப் பிரிவுகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட Full HD 1080P, 4K, OLED மற்றும் வளைந்த (Curved) டிஸ்ப்ளே தெரிவுகள் உள்ளிட்ட 16 அங்குலம் முதல் 49 அங்குலம் வரையிலான மாதிரிகளில் பரந்துபட்ட Lenovo மொனிட்டர்கள் மற்றும் டிஸ்ப்ளே தீர்வுகளை வழங்குகிறது.
IT Gallery இன் கூட்டாளர் கட்டமைப்பின் கூட்டு பலத்தையும் இந்த சாதனை பிரதிபலிக்கிறது. இந்த மைல்கல்லை எட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்த தமது மீள்விற்பனையாளர் சமூகம், வாடிக்கையாளர்கள் மற்றும் உள்நாட்டுக் குழுவினரின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்காக நிறுவனம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்த விருதானது நம்பிக்கை, சீரான தன்மை, நீண்டகால கூட்டாண்மையின் மீது கட்டியெழுப்பப்பட்ட ஒரு கூட்டு வெற்றியாகக் கருதப்படுகிறது.
இது குறித்து, IT Gallery Computers (Pvt) Ltd நிறுவனத்தின் நிறுவுனரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான டிலந்த பெரேரா தனது நன்றியைத் தெரிவித்ததுடன், நிறுவனத்தின் எதிர்கால தொலைநோக்குப் பார்வை குறித்த உறுதிப்பாட்டை வலியுறுத்தி கருத்துத் தெரிவிக்கையில், “இந்த அங்கீகாரமானது, IT Gallery நிறுவனத்திற்கான ஒரு விருது மாத்திரமல்ல, எமது மதிப்புமிக்க கூட்டாளர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் Lenovo குழுவினருடன் பகிர்ந்து கொள்ளப்படும் ஒரு கூட்டுச் சாதனையாகும். புத்தாக்கங்களை ஊக்குவிப்பதற்கும், கேமிங் மற்றும் உள்ளடக்க உருவாக்குநர்களின் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும், உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப அனுபவங்களை இலங்கைக்குக் கொண்டு வருவதற்கும் நாம் தொடர்ச்சியாக கடமைப்பட்டுள்ளோம். நாட்டில் கேமிங், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் விஷுவல் தொழில்நுட்பங்களின் எதிர்காலத்தை நாம் ஒன்றிணைந்து தொடர்ச்சியாக உருவாக்குவோம்” என்றார்.
இலங்கையின் டிஜிட்டல் துறை தொடர்ச்சியாக வளர்ந்து வரும் நிலையில், IT Gallery Computers (Pvt) Ltd நிறுவனம் குறிப்பாக கேமிங், AI, streaming, design மற்றும் உள்ளடக்க உருவாக்குநர்கள் சார்ந்த தொழில்துறைகளில் அடுத்த தலைமுறை தொழில்நுட்பப் பயன்பாட்டை சாத்தியமாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது. Lenovo வர்த்தகநாமத்தின் உலகளாவிய புத்தாக்க கண்டுபிடிப்பு பாதையுடன் இணைந்தவாறான இந்நிறுவனத்தின் தொடர்ச்சியான பயணமானது, எதிர்காலத்திற்குத் தேவையான தீர்வுகளை வழங்குவதற்கும் நாட்டின் ICT சூழல் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்குமான அதன் அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது.
எதிர்காலத்தை நோக்குகையில், IT Gallery Computers (Pvt) Ltd. நிறுவனம் தனது கூட்டாளர்களின் ஈடுபாட்டை மேலும் ஆழப்படுத்தவும், தயாரிப்புப் பிரிவுகளின் வளர்ச்சியை விரிவுபடுத்தவும், இலங்கை நுகர்வோர் மற்றும் வணிகங்களுக்கு ஒரே மாதிரியான அதிவேக தொழில்நுட்ப அனுபவங்களின் வளர்ச்சியை ஆதரிப்பதற்குமான இலக்கைக் கொண்டுள்ளது.







Post Comment