IOM மற்றும் மனித விற்பனைக்கு எதிரான தேசிய செயலணி ஜப்பான் அரசாங்கத்தின் உதவியுடன் மனித விற்பனை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் ஊடக பிரச்சாரத்தை ஆரம்பித்தன

மனித விற்பனைக்கு எதிரான தேசிய செயலணி (NAHTTF), புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்புடன் (IOM) இணைந்து மனித விற்பனை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் தொலைக்காட்சி மற்றும் வானொலி வழியான பிரச்சாரத்தைத் தொடங்கியது. ஜப்பான் அரசாங்கத்தின் 2.6 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியுன் நாடு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர் மற்றும் பாதிப்புக்குற்படக்கூடிய சமூகங்களுக்காக செயற்படுத்தப்பட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு பகுதியாக இது இடம்பெறுகின்றது. 

மனித விற்பனையின் ஆபத்துக்களை எடுத்துக்காட்டுவதுடன் மனித விற்பனையென்று சந்தேகிக்கப்படும் சம்பவங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு அறிவிப்பதை ஊக்குவிக்கின்றது. கட்டாய உழைப்பு பாலியல் சுரண்டல் சிறுவர் தொழிலாளர் மற்றும் இணையவழி குற்றம் இடம்பெறும் இடங்கள் உள்ளிட்ட பல்வேறு மனித விற்பனையின் வடிவங்கள் குறித்து சமூகங்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் மனித விற்பனையை எதிர்த்துப் போராட வேண்டியதன் அவசியத்தையும் பாதிக்கப்படக்கூடிய மக்களை சுரண்டலிலிருந்து பாதுகாக்க வேண்டிய அவசரத் தேவையையும் எடுத்துக்காட்டுவதை இந்த பிரச்சாரம் நோக்கமாகக் கொண்டுள்ளது. 

பல தளங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இப்பிரச்சாரம் தொலைக்காட்சி மற்றும் வானொலியை முதன்மையாகக் கொண்டு மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுவதுடன் மனித விற்பனைக்கு உள்ளாகி மீண்டவர்களின் நிஜமான வாழ்க்கை கதைகளை உள்ளடக்கியதாக இப்பிரச்சாரத்தின் உள்ளடக்கம் அமைகின்றது. இந்த பிரச்சாரமானது புலம்பெயர் தொழிலாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அபாயங்கள் குறித்த விழிப்புணர்வு விரிவான முறையில் சமூகத்திற்கு சென்றடைவதற்காக சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் விளம்பரப் பதாகைகள் மூலம் இப்பிரச்சாரம் மேலும் விரிவுபடுத்தப்படும். 

இது குறித்து கருத்து தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும் மனித விற்பனைக்கு எதிரான தேசிய செயலணியின் (NAHTTF) தலைவராகவும் பணியாற்றும் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொண்டா அவர்கள்ரூபவ் ‘நாங்கள் அனைத்து தனிநபர்களின் பாதுகாப்பையும் கண்ணியத்தையும் பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதுடன் இந்த ஊடக பிரச்சாரம் மனித விற்பனையை எதிர்த்துப் போராடுவதற்கான எங்கள் கூட்டுப் பொறுப்பை எடுத்தியம்புகின்றது’ என தெரிவித்தார். 

‘இந்தப் பணியில் எங்கள் நோக்கம் யாதெனில் விழிப்புணர்வையும் பல்வேறு துறைகளுக்கிடையில் ஒத்துழைப்பையும் மேம்படுத்துவதன் ஊடாக சுரண்டலில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளற்ற குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுகின்ற மற்றும் மனித விற்பனைக்கு பலியாகி மீண்டவர்களுக் கிடைக்க வேண்டிய உதவி கிடைக்கின்ற ஒரு இலங்கையை உருவாக்குவதாகும்’ என்று தெரிவித்தார். 

இந்த பிரச்சாரம் பார்வையாளர்களையும் கேட்பவர்களையும் மனித விற்பனைக்கு எதிரான தேசிய செயலணியால் செயற்படுத்தப்படும் அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்வதற்கு வழியமைப்பதுடன் அதனூடாக அவர்கள் மனித விற்பனை தொடர்பான சம்பவங்களைப் பற்றி அறிவிப்பதற்கு அல்லது உதவியினை பெற்றுக்கொள்வதற்கும் வாய்ப்பளிக்கின்றது. இது மனித விற்பனையைக் கண்காணித்து எதிர்த்துப் போராடுவதற்கான தேசிய மூலோபாய செயல் திட்டத்திற்கு (2021-2025) இசைந்தொழுகும் வகையில் மனித விற்பனைக்கு எதிராக நாட்டினது வினையாற்றுகையை வலுப்படுத்தும் விரிவானதொரு முயற்சியின் ஓர் அங்கமாகும். 

‘மனித விற்பனையானது ஒரு பாரதூரமான குற்றமாக காணப்படுவதுடன் இந்தப் பிரச்சினையை திறம்பட கையால்வதற்கு விழிப்புணர்வு மிக முக்கியமானதாகும். இவ்விடயத்தில் ஊடகங்கள் தன்னகத்தே கொண்டுள்ள சக்தியைப் பயன்படுத்திக் கொண்டு பொதுமக்களுக்குக் விழிப்புணர்வை வழங்குவதும் மனித விற்பனையின் ஆரம்ப அறிகுறிகள் மற்றும் அவர்களுக்கு பெற்றுக்கொள்ளக்கூடிய உதவிகள் குறித்து அனைத்து இலங்கையர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் எங்கள் நோக்கமாகும். இந்த ஊடகப் பிரச்சாரமானது மனித விற்பனையால் நிர்க்கதி நிலைக்கு உள்ளாக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையின் ஒளிக்கீற்றாகும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இக்குற்றத்திற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதற்கான ஒரு அழைப்பாகும். அதாவது ஒர அரணாக ஒன்றிணைந்து நிற்கவும் குரலெழுப்பவும் பாதிப்புற்று மீண்டவர்களின் வாழ்கையை கட்டியெழுப்புவதற்காக அவர்களுக்கு செவிமடுத்து ஒத்தாசை வழங்குவதற்கும் அவர்கள் வலுவூட்டப்படுவதை உறுதிப்படுத்துவதற்கும் விடுக்கப்படும் ஒரு அழைப்பாகும். உயிர்களை பாதுகாத்தல் மற்றும் புலம்பெயர்வோரை பாதுகாத்தல் ஆகிய புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் மூலோபாய நோக்கங்களுக்கு அமைவாக செயலாற்றி சுரண்டலுக்கு எவ்வித வாய்ப்பும் இல்லாத மனித கண்ணியத்தை பாதுகாக்கின்ற எதிர்காலமொன்றை நாம் அனைவரும் கைகோர்த்துக்கொண்டு உருவாக்க முடியும்.’ என புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான பிரதானி கிறிஸ்டின் பார்கோ தெரிவித்தார். 

‘ஜப்பான் தனது ராஜதந்திரத்தின் முக்கிய தூண்களில் ஒன்றாக மனித பாதுகாப்பை ஏற்றுள்ளது அத்துடன் மனித விற்பனை தொடர்பான பிரச்சினையில் மற்றைய நாடுகளுடன் நெருக்கமாக இணைந்து செயலாற்றி வருகிறது. இலங்கையில் பலவந்த உழைப்பை தடுப்பதற்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவுவதற்கும் தொழிற்பயிற்சியை ஊக்குவிப்பதற்கும் மனித விற்பனைக்கு ஆளானவர்களை மீட்பதற்கும் அவர்களை அவர்களின் சமூகங்களில் மீளிணைப்பதற்கும் ஜப்பான் IOM போன்ற சர்வதேச நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பை வழங்கியுள்ளது. மனித விற்பனையை திறம்பட தடுப்பதற்கு சமூகம் சார்ந்த அணுகுமுறையை கடைபிடிப்பதும் பாதிப்புறும் தன்மையை குறைப்பதற்கு விழிப்புணர்வும் அவசியமாகும். ஆதலால் தான் இந்த செயல்திட்டத்தின் கீழ் நாடு தழுவிய ஊடக பிரச்சாரம் முக்கியத்துவம் பெறுவதோடு எமது முயற்சிகளின் முக்கிய அங்கமாகவும் விளங்குகின்றது. உலகலாவிய ரீதியில் மனித விற்பனை தொடர்பில் வினையாற்றுவதற்கு ஜப்பான் அர்ப்பணிப்புடன் உறுதி பூண்டுள்ளது’ என்று இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் கௌரவ இசொமாட்டா அகியோ தெரிவித்தார். 

IOM மற்றும் இலங்கையின் NAHTTF ஆகியவை இச்சந்தர்ப்பத்தில் பொதுமக்களை விழிப்புடன் இருக்குமாறும் மனித விற்பனை தொடர்பான சந்தேகித்திற்கிடமான சம்பவங்களை NAHTTF இன் நேரடி தொலைபேசி இலக்கமான 0768 447 700 இற்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றது.

Previous post

AIA Insurance & PodHUB hosts the award-winning Sri Lankan powerlifter Rohan Paulus on ‘Rethink Healthy’ podcast series

Next post

IOM සහ තැනැත්තන් වෙළෙඳාමට එරෙහි ජාතික කාර්ය සාධක බලකාය, ජපාන රජයේ අනුග්‍රහයෙන් තැනැත්තන් වෙළෙඳාම පිළිබඳ දැනුවත් කිරීම සඳහා දිවයින  පුරා මාධ්‍ය ප්‍රචාරණ ව්‍යාපාරයක් ආරම්භ කරයි.

Post Comment