உலகளாவிய ரீதியில் 20 மில்லியனுக்கும் அதிகமான Pulsar மோட்டார் சைக்கிள்கள் விற்பனையாகியுள்ளதாக Pulsar அறிவித்துள்ளது. இதனூடாக வினைத்திறன் வாய்ந்த மோட்டார் சைக்கிள்களில் மிகவும் பிரபல்யம் பெற்ற மற்றும் நம்பிக்கையை வென்ற வர்த்தக நாமம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில், முதல் தர ஸ்போர்ட்ஸ் மோட்டார் சைக்கிளாக Pulsar திகழ்கிறது. இதுவரையில் 500,000க்கும் அதிகமான அலகுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சர்வதேச மட்டத்தில் இந்த வளர்ச்சியில், முதல் 10 மில்லியனை எய்துவதற்கு 17 வருடங்கள் கடந்திருந்த நிலையில், அந்தப் பெறுமதி இரு மடங்காக அதிகரிப்பதற்கு 6 வருடங்கள் மட்டுமே மேலதிகமாக தேவைப்பட்டிருந்தது. மோட்டார் சைக்கிள் பிரியர்கள் மத்தியில் வர்த்தக நாமம் ஆழமாக கொண்டுள்ள பிணைப்பு மற்றும் காலத்துடன் அதன் பரிணாம வளர்ச்சி போன்றன இந்த விற்பனை அதிகரிப்பினூடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

வலிமை, தொழில்னுட்பம் மற்றும் கண்கவர் தோற்றம் ஆகிய அனைத்து அம்சங்களையும் கொண்டிருப்பதால் Pulsar புகழ்பெற்றுள்ளது. வர்த்தக நாமத்தை அதன் வினைத்திறனுக்காக மோட்டார் சைக்கிள் ஆர்வலர்கள் விரும்புவதுடன், அவற்றின் கண்கவர் அலங்கார வடிவமைப்புகள் மற்றும் நவீன உள்ளம்சங்களுக்காகவும் தெரிவு செய்கின்றனர். மோட்டார் சைக்கிள் தொழிற்துறையினுள் மேம்படுத்தப்பட்ட தொழில்னுட்பத்தை கொண்டுவருவதில் எப்போதும் முன்னோடியாக அமைந்திருப்பதுடன், அதன் வினைத்திறன் DNA க்கு உண்மையான வகையில் ஏனைய போக்குகளை விட முன்னிலையிலும் திகழ்கிறது.

எல்லைகளை விஞ்சக்கூடிய வகையில் Pulsar அமைந்திருப்பதுடன், இலத்தீன் அமெரிக்கா, தென் கிழக்காசியா மற்றும் மத்திய கிழக்கு அடங்கலாக 50க்கும் அதிகமான நாடுகளில் பிரசன்னத்தைக் கொண்டுள்ளது. 20க்கும் அதிகமான சர்வதேச சந்தைகளில் முதலாவது அல்லது இரண்டாவது ஸ்தானத்தை கொண்டுள்ளது.

Pulsar N125 முதல் Pulsar N160 மற்றும் Pulsar NS200 வரையிலும், அதிகளவு எதிர்பார்ப்புகள் நிறைந்த தற்போது உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள Pulsar NS400 போன்றன மில்லியன் கணக்கானோரின் நம்பிக்கையை வென்றுள்ளதுடன், வீதிகளில் ஆதிக்கம் செலுத்த தயாராகவுள்ளன.

இலங்கையில் பஜாஜ் Pulsar மோட்டார் சைக்கிள்களின் உத்தியோகபூர்வ விநியோகஸ்த்தர் மற்றும் பொருத்துனராக டேவிட் பீரிஸ் மோட்டர் கம்பனி (DPMC) திகழ்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *