Hatch ஆனது, இலங்கையில் தொடக்கங்கள் தொடர்பான அனைத்து விடயங்களுக்கும் ஒரு ஈர்ப்பு மையமாக விளங்குவதில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இலங்கையை மையமாகக் கொண்ட ஆரம்பித்தல் மற்றும் வளர்ச்சியடைதல் (build up & scale up) என்பதை நோக்கமாகக் கொண்ட முதலீட்டுக்கான வாகனம் போன்று செயற்படுகின்ற Mountain Lion Ventures நிறுவனம், முதன் முதலாக Hatch Fund இல் முதலீட்டாளராகவும் மூலதன பாலமாகவும் இணைந்துள்ளது. உள்ளூர் தொடக்க நிறுவன சூழலில் தெரிவுநிலையை உருவாக்கும் Hatch இனதும் அவர்களால் இயக்கப்படும் அடைகாத்தல் மற்றும் உத்வேகமளித்தல் திட்டங்களின் மூலம் உலகளாவிய ரீதியில் அளவிடக்கூடிய தொடக்க நிறுவனங்களை அடையாளம் காணும் அதன் திறனுக்கு இது ஒரு உண்மையான சான்றாகும்.

ஒரு நிறுவப்பட்ட தொகுதியினை செயற்படுத்துபவர் எனும் வகையில், உள்ளூர் தொழில்முனைவோருக்கு, குறிப்பாக பெண் தொழில்முனைவோருக்கு, அவர்களின் தொடக்கங்களுக்கான யோசனை வழங்கல், தொடக்கமாதிரி மற்றும் அளவிடுதல் ஆகியவற்றில் மிகப் பொதுவான தடையாக, நிதி மற்றும் சந்தை அணுகல் உள்ளதை Hatch அடையாளம் கண்டுள்ளது. Hatch நிதியில் முதலீடு செய்யும் உலகளாவிய ரீதியில் நிறுவப்பட்ட முயற்சி மூலதன நிறுவனமான Mountain Lion Ventures ஆனது, இலங்கையிலுள்ள தொடக்க நிறுவனங்கள் எதிர்கொள்ளும் மேற்படி இரண்டு தடைகளையும் தாண்ட உதவுகிறது.

Hatch Fund ஆனது ESG Fund மற்றும் MoonShot Ventures இனை உருவாக்கிறது. ESG Fund ஆனது, இலங்கையின் முதலாவது Gender Smart Venture Capital நிதியான HERCapital ஆகும். MoonShot Ventures ஆனது, உற்பத்திகள், தொழில்நுட்பம் மற்றும் வணிக மாதிரிகளில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் புத்தாக்க கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் தொழில்நுட்ப நிதியாக உள்ளது.

ஆலோசனைக் குழுவின் தலைவர் டாக்டர் Cornelius Boersch, பொது பங்குதாரர் அசாத் சுல்தான், பொது பங்குதாரர் Love Yadav மற்றும் Venture பங்குதாரர் Jorge Perez Garcia ஆகியோரின் தலைமையின் கீழ், Mountain Lion Ventures ஆனது டிஜிட்டல் ரீதியாக ஏற்படும் மாற்றம் மற்றும் clean tech இடைவெளி ஆகியவற்றில் நவீன சந்தைக்கு ஏற்ற வகையில் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்ப முயற்சிகளை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

Mountain Lion Group ஆனது Sling Mobility (சில்லறை பொருட்கள் நிர்வாக தீர்வு வழங்கும் 360° யிலான மின்சார மொபிலிட்டி தளம்), LIWE Communities (இலங்கையின் முதலாவது விரிவான கிளவுட் அடிப்படையிலான ஸ்மார்ட் சமூக முகாமைத்துவ தளம்), Infragist (Metaverse, Cyber Security, Blockchain, Machine Learning, AI தீர்வுகள் முழுவதும் திறன்களைக் கொண்ட ஒரு அதிநவீன முழு அடுக்கு தொழில்நுட்ப சேவை நிறுவனம்), Mercato (ஒரு B2B ஒற்றை-தளம் கொள்முதல் தொகுதி) போன்ற வணிகங்களின் வளர்ச்சியில் இலங்கையின் தொடக்க நிறுவன சந்தை உதவியை அளவிடுவதற்கும் மேம்படுத்துவதற்கும் பொறுப்பாக உள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட Mountain Lion Group பொதுப் பங்குதாரர் Love Yadav, “அடுத்த தலைமுறை டிஜிட்டல் புரட்சியின் உச்சத்தில் இலங்கை உள்ளது. இது இவ்வெளியில் புத்தாக்கங்கள் மற்றும் யோசனைகளால் உருவாக்கப்படும் உச்சபட்ச பங்குதாரர் மதிப்பை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Mountain Lion குழுமத்துடன் இதேபோன்ற தூரநோக்கை Hatch பகிர்ந்து கொள்வதோடு, இது இந்த சுற்றுக்கான முதலீட்டு உறுதிப்பாட்டுடன் மேலும் ஒன்றிணைந்துள்ளது. இந்த முதலீட்டின் நோக்கமானது, எதிர்கால வளர்ச்சியை முன்னறிவிக்கும் திறனை கொண்டுள்ளது.” என்றார்.

Hatch அதன் ஆரம்பம் முதல், பெண் தொழில்முனைவோரை மேம்படுத்துதல் மற்றும் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் தொழில்நுட்ப புத்தாக்க கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கின்ற, அடைகாத்தல் மற்றும் உத்வேகமளித்தல் திட்டங்களை இயக்குவதில் Hatch ஒரு வலுவான முக்கியத்துவத்தை அளித்துள்ளது. Hatch Fund ஆனது, இந்த முக்கிய பிரிவுகளில் அது வழங்கும் ஆதரவை மேலும் மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் Hatch நிறுவனத்தின் இணை நிறுவுனர் பிருந்தா செல்வதுரை ஞானம் தெரிவிக்கையில், “பல்வேறு தொழில்துறைகளில் தொடக்க நிறுவனங்களுக்கு சிந்தனைகளுக்கு வடிவம் கொடுத்தல் மற்றும் வளர்ச்சி நிலைகளில் ஆதரிப்பதில் எமது குழுவிற்கு பல வருட அனுபவம் உள்ளது. இந்த அனுபவமும் நிபுணத்துவமுமே நாம் இன்று இந்நிலையை அடைய காரணமாகும். இந்த Hatch Fund இல் முதலீடு செய்வது, தொடக்க நிறுவன தொகுதிகளுக்கான எமது சேவைகளை மேலும் மேம்படுத்தவும், இந்த தொடக்க நிறுவனங்களை உலக அரங்கிற்கு கொண்டு செல்லவும் உதவுமென நான் நம்புகிறேன்.” என்றார்.

Hatch நிறுவனத்தின் முக்கிய திட்டங்களில் ஒன்று AccelerateHer ஆகும். இங்கு Hatch குழுவானது, குறித்த விடயம் தொடர்பான நிபுணர்களுடன் இணைந்து, நாடு முழுவதும் பயணம் செய்து, கடந்த வருடத்தில் 140 இற்கும் மேற்பட்ட பெண் தொழில் முனைவோர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், வணிகம் மற்றும் தொழில் முனைவு தொடர்பான முக்கிய விடயங்களை உள்ளடக்கிய துவக்கத்தை ஏற்படுத்தும் 3 நாள் முகாம்களை நடத்தியது. AccelerateHer திட்டமானது, பெண் தலைமைத்துவ வணிகங்களின் உயர் திறன் கொண்ட பாதையை உலக அரங்கு நோக்கி எடுத்துச் செல்வதற்காக நிதியைப் பெறத் தயார் செய்துள்ளது.

இலங்கையில் திறந்த புத்தாக்க கண்டுபிடிப்புகளை எளிதாக்குவதற்கான வசதிகளை ஏற்படுத்துவதில் Hatch  முன்னோடியாக உள்ளது. உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமான IFS உடனான அதன் சமீபத்திய கூட்டாண்மை மூலம், இலங்கையின் முதலாவது AI-Machine learning Incubator இனை அறிமுகப்படுத்த முடிந்தமையானது, நிஜ உலக பிரச்சினைகளை அடையாளம் காணவும், சோதிக்கவும், அவற்றை தீர்க்கவும் வாய்ப்பை வழங்குவதன் மூலம் உள்ளூர் தொழில்நுட்ப திறமையாளர்களை வளர்ப்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

அதன் இத்திட்டங்களுக்கு மேலதிகமாக, Hatch வழக்கமான Web 3 சந்திப்புகளுக்கான வசதிகளை ஏற்படுத்துகிறது. இவர்கள் மூலம் Web 3 மற்றும் செயற்கை நுண்ணறிவு வெளியில் பல முதன்முதலான விடயங்களை அது உருவாக்கி வருகிறது. அத்துடன் இக்குழுவானது, புதிய பொருளாதாரத்திற்கான தீர்வுகளில் கவனம் செலுத்துகிறது என்பதைக் காட்டுகிறது. அந்த வகையில் MoonShot ventures ஆனது உலகப் பொருளாதாரத்திற்குப் பொருந்தக்கூடிய பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கு மேலும் வசதியளிக்கிறது.

Hatch ஒரு தனித்துவமான உதவித் தளத்தை வழங்குகிறது. இது தொழில்முனைவோர் அவர்களின் தொலைநோக்கு பார்வையை அடையவும் அவர்களின் வணிகங்களை வளர்க்கவும் உதவுகிறது. இங்கு 800 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன், 100 இற்கும் மேற்பட்ட தொடக்கங்கள், 60,000 சதுர அடி இடம், தங்கள் துறைகளில் நிபுணர்களாகவுள்ள 60 இற்கும் மேற்பட்ட வழிகாட்டிகள், 100 இற்கும் மேற்பட்ட திட்ட பட்டதாரிகள், 40 இற்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் உலகளாவிய கூட்டாண்மைகள் உள்ளிட்ட மேலும் பல அம்சங்களை அது கொண்டுள்ளது.

திடமற்ற காலத்திலும் கூட, இலங்கையிலுள்ள வளர்ச்சியடைந்து வரும் தொழில்முனைவோருக்கு, நாட்டிற்குள் மட்டுமன்றி சர்வதேச அளவிலும் சிறந்து விளங்குவதற்கான நம்பிக்கையை Hatch வழங்குகிறது.

இலங்கை உலகத்தரம் வாய்ந்த மனித வளக் குழுவைக் கொண்ட பன்முகத்தன்மை கொண்ட நாடாகும். நிலவும் கஷ்டங்களுக்கு மத்தியிலும், இலங்கையின் தொடக்க நிறுவன சமூகம் மாபெரும் முன்னேற்றத்தை கண்டுள்ளது. இது கடினமான, விடாமுயற்சியின் உண்மைக் கதையாகும். இது இலங்கையை பிரச்சினைகளை சந்தித்த தேசத்திலிருந்து ஒரு தொடக்கத்தை உருவாக்கும் தேசமாக மாற்றுகிறது.

END

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *