FujiClean மற்றும் FujiMAC உடனான கூட்டணியை வலுப்படுத்தும் ABC Trade & Investment (Pvt) Ltd
ABC Trade & Investment (Pvt) Ltd நிறுவனம் FujiClean மற்றும் FujiMAC ஆகிய நிறுவனங்களின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விநியோகஸ்தராக நியமிக்கப்பட்டுள்ளது. இது வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், ஹோட்டல்கள் மற்றும் வர்த்தக மேம்பாடுகள் உள்ளிட்ட நாடு முழுவதிலும் உள்ள பரந்த அளவிலான பயன்பாடுகளுக்கு ஜப்பானிய கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் காற்றோட்டத் தொழில்நுட்பங்களை கொண்டு சேர்க்கிறது.
இந்த நியமனமானது, ஜப்பானில் மிகப்பெரிய உள்நாட்டு சந்தைப் பங்கைக் கொண்டுள்ளமைக்காக அங்கீகரிக்கப்பட்ட, ஒரே தளத்தில் கழிவுநீரைச் சுத்திகரிக்கும் தொகுதிகளைத் தயாரிக்கும் முன்னணி ஜப்பானிய உற்பத்தியாளரான FujiClean உடனான ABC Trade & Investment இன் கூட்டணியை மேலும் வலுப்படுத்துகிறது. அத்துடன், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் (STPs), செயற்கை குளங்கள் (Koi Ponds) மற்றும் மீன்வளர்க்கும் தொட்டிகள் உள்ளிட்ட பரந்த அளவிலான பயன்பாடுகளுக்கு சீரான காற்றோட்டம் மற்றும் நம்பகமான ஒட்சிசன் விநியோகத்தை வழங்கும் FujiMAC காற்றுப் பம்பிகளை உள்ளூரில் இலகுவாக பெற்றுக் கொள்ளும் வழிகளை இது விரிவுபடுத்துகிறது.

FujiClean பிரதிநிதிகளால் மேற்காள்ளப்பட்ட மதிப்பாய்வைத் தொடர்ந்து இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ABC Trade & Investment நிறுவனம் இந்த கூட்டாண்மைக்கான தேவைகளைப் பூர்த்தி செய்துள்ளதாக அவர்கள் தீர்மானித்தனர். இந்த மதிப்பீடானது உள்ளூர் விநியோகஸ்தராக ABC Trade & Investment இன் பாத்திரத்தை உறுதிப்படுத்துவதுடன், பல்வேறு அளவுகள் மற்றும் பயன்பாடுகளைக் கொண்ட சொத்துகளில் பயனுள்ள கழிவுநீர் முகாமைத்துவத்தை எதிர்பார்க்கும் இலங்கை வாடிக்கையாளர்களை உறுதிப்படுத்தப்பட்ட ஜப்பானிய தொழில்நுட்பத்துடன் இணைக்கிறது.
தனது தொழில்முறை ரீதியான சான்றுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ABC Trade & Investment நிறுவனம் கழிவுநீர் முகாமைத்தவத்தில் ஒரு ஆலோசகராக உள்ள மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் (CEA) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரமானது நிறுவனத்தின் தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும், இலங்கையில் பாதுகாப்பு மற்றும் நிலைபேறான வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் பொறுப்பான கழிவுநீர் முகாமைத்துவ தீர்வுகளை வழங்குவதற்கான அர்ப்பணிப்பையும் முன்னிலைப்படுத்துகிறது.

இது குறித்து நிறுவனத்தின் ஊடகத் தொடர்பாளர் தெரிவிக்கையில், “கழிவுநீர் முகாமைத்துவ விடயத்தில் எமது வீடுகள், கட்டடங்கள் மற்றும் வணிக வளாகங்களை எவ்வாறு மேம்படுத்துகிறோம், அவற்றை எவ்வாறு பராமரிக்கிறோம் என்பதன் ஒரு அத்தியாவசிய அங்கம் என நாம் கருத வேண்டும். இலங்கையில் FujiClean மற்றும் FujiMAC இன் உத்தியோகபூர்வ விநியோகஸ்தராக, தகவலறிந்த முடிவுகளை எடுக்க வாடிக்கையாளர்களுக்கு தேவையான தொழில்நுட்ப வழிகாட்டல் மற்றும் உதவிகளின் ஆதரவுடன், நன்கு நிறுவப்பட்ட ஜப்பானிய பொறியியலை பரந்த அளவிலான உள்ளூர் பயன்பாடுகளுக்கு எம்மால் அறிமுகப்படுத்த முடிந்துள்ளது.” என்றார்.
FujiClean இன் கழிவுநீர் சுத்திகரிப்பு தொகுதிகள் மற்றும் FujiMAC இன் காற்றுப் பம்பிகள் ஆகியன கழிவுநீர் முகாமைத்தவம் மற்றும் காற்றோட்டத்தில் ஒன்றோடொன்று பூர்த்தி செய்யும் செயற்பாடுகளை மேற்கொள்கின்றன. தெரிவு செய்யப்பட்ட தொகுதி மற்றும் திட்டத்திற்கான தேவைகளைப் பொறுத்து, இந்தத் தொழில்நுட்பங்கள் வீடுகள், பல அலகுகளைக் கொண்ட திட்டங்கள், விருந்தோம்பல் வசதிகள் மற்றும் பாரிய அளவிலான வர்த்தகத் திட்டங்களுக்கு ஆதரவளிக்க முடியும்.

இரண்டு வர்த்தகநாமங்களின் உள்ளூர் பிரதிநிதித்துவத்தின் மூலமும், சொத்து உரிமையாளர்கள், கட்டட நிர்மாணவியலாளர்கள், கட்டடக் கலைஞர்கள், பொறியியலாளர்கள் உள்ளிட்ட ஏனைய திட்ட பங்குதாரர்கள் தமது திட்டங்களுக்குப் பொருத்தமான தீர்வுகளை தேடும் போது தயாரிப்பு தொடர்பான தகவல்கள் மற்றும் அதற்கான தொழில்நுட்ப வழிகாட்டல்களை பெற்றுக் கொள்ள முடியும். தமது குடியிருப்பு, விருந்தோம்பல் மற்றும் வணிக உட்கட்டமைப்பை இலங்கை தொடர்ச்சியாக மேம்படுத்தி வரும் நிலையில், சூழல் தாக்கத்தைக் குறைப்பதற்கும் பொறுப்பான மேம்பாடுகளுக்கு ஆதரவளிப்பதற்கும், பயனுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு மிக முக்கியமானதாக உள்ளது. நாட்டின் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் (CEA) ஆலோசனை, அங்கீகாரம் மற்றும் FujiClean, FujiMAC உடனான உத்தியோகபூர்வ பங்காண்மையின் ஆதரவுடன், சர்வதேச பொறியியல் நிபுணத்துவத்தை, சிறந்த உள்ளூர் தொழில்நுட்ப ஆதரவுடன் இணைத்து, உறுதிப்படுத்தப்பட்ட ஜப்பானிய கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் காற்றோட்டத் தொழில்நுட்பங்களை இலங்கை வாடிக்கையாளர்களுக்கு மிக இலகுவாக பெற்றுக் கொள்ளக் கூடியதாக மாற்ற ABC Trade & Investment நிறுவனம் இலக்காக கொண்டுள்ளது











Post Comment