இலங்கையின் பசுமை உட்கட்டமைப்பு மற்றும் முதலீட்டை இணைந்து முன்னெடுக்கும் ABC Trade & Investments மற்றும் All-China Environment Federation

இதன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தமானது, இலங்கையின் நீர் மற்றும் பசுமை வலுசக்தி திட்டங்களில் சீனத் தொழில்நுட்பம், பொறியியல் நிபுணத்துவம் மற்றும் சாத்தியமான மூலதனத்தைச் செலுத்துவதற்கான மூலோபாயக் கட்டமைப்பை நிறுவுகிறது

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம்:

● தொழில்முனைவுக்கான உட்கட்டமைப்பு முதலீடு மற்றும் வெளிநாட்டுத் தொழில்நுட்ப அணுகலை விரிவுபடுத்துதல்

● தொழில்துறைக்கான சூழல் தரநிலைகள் மற்றும் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்துதல்

● நீண்டகால வளப் பாதுகாப்பு மற்றும் வலுசக்தி தேவைகள்

இலங்கை, கொழும்பு, 17 ஓகஸ்ட் 2026: இலங்கையின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப விநியோகம் மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட வணிகத் துறையில் முன்னணியில் உள்ள ABC Trade & Investments (Pvt) Ltd நிறுவனம், All-China Environment Federation (ACEF) உடன் ஒரு மூலோபாய ரீதியான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உத்தியோகபூர்வமாக கையெழுத்திட்டுள்ளது. இந்த கூட்டாண்மையானது இலங்கை முழுவதும் புதிய வலுசக்தி திட்டங்கள், நீர் முகாமைத்துவம் மற்றும் சூழல் பாதுகாப்புத் திட்டங்களை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு ஒன்றிணைந்த கட்டமைப்பை நிறுவுகிறது.

இந்த ஒப்பந்தமானது, மேம்பட்ட சீன பொறியியல் திறன்கள், உபகரணங்கள், தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் முதலீட்டு வளங்களுடன் ABC Trade & Investments நிறுவனத்தின் உள்ளூர் செயற்பாட்டு வலிமை, சந்தை நுண்ணறிவு மற்றும் திட்ட

செயற்படுத்தல் திறன்களுடன் இணைக்கிறது. சர்வதேச தொழில்நுட்பத்தை உள்ளூர் செயற்பாட்டுடன் இணைப்பதன் மூலம், இலங்கையின் நீண்டகால சூழல் மற்றும் சிவில் உட்கட்டமைப்பு முன்னுரிமைகளுக்குத் தீர்வு காணும் வகையில் இந்த முயற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

ABC Trade & Investment (Pvt) Ltd நிறுவனத்தின் பணிப்பாளரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அமல்ராஜா ஜயசீலன் மற்றும் ACEF இன் ‘Belt & Road Eco-Industry Cooperation’ சூழல் – தொழில்துறை இடையிலான ஒத்துழைப்பு பணிக்குழுவின் பொதுச்செயலாளர் ஷி ஜியாங் (Shi Xiang) ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். கொழும்பில் உள்ள Nondescripts Cricket Club (NCC) மைதானத்தில் ‘பசுமை வளர்ச்சியை வலுப்படுத்துதல், சீனா – இலங்கை சூழல் மற்றும் வலுசக்தி தொழிற்துறையின் புதிய கட்டமைப்பை இணைந்து உருவாக்குதல்’ எனும் கருப்பொருளின் கீழ் இடம்பெற்ற சீனா – இலங்கை சூழல் மற்றும் வலுசக்தி பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு தொடர்பான கூட்டத்தின் போது இதற்கான ஒப்பந்த கைச்சாத்திடும் நிகழ்வும் இடம்பெற்றது.

இந்த கூட்டாண்மை குறித்து மகிழ்ச்சி தெரிவித்து கருத்து வெளியிட்ட ABC Trade & Investment (Pvt) Ltd நிறுவனத்தின் பணிப்பாளரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அமல்ராஜா ஜயசீலன், “ACEF எமக்கு சீன சூழல் மற்றும் பொறியியல் திறன்களின் பரந்த வலையமைப்பிற்கான அணுகலை வழங்கும் அதே வேளையில், உள்ளூர் தேவைகள், விதிமுறைகள் மற்றும் அமுலாக்க யதார்த்தங்கள் பற்றிய புரிதலை நாம் அதனுடன் இணைக்கிறோம். நீர், பசுமை வலுசக்தி மற்றும் சூழல் முகாமைத்துவம் ஆகியவற்றில் உள்ள உண்மையான தேவைகளுக்கு தீர்வு காணுகின்ற பொருத்தமான தொழில்நுட்பங்களை அடையாளம் காணுதல், அவற்றை உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்ப மாற்றுதல் மற்றும் நடைமுறை ரீதியான திட்டங்களை உருவாக்குதல் ஆகியவற்றில் தற்போது எமது கவனம் உள்ளது” என்றார்.

இந்த ஒத்துழைப்பின் நோக்கமானது பல்வேறு சூழல் பயன்பாடுகளை உள்ளடக்கியது. உடனடி திட்ட உருவாக்கத்திற்காக அடையாளம் காணப்பட்ட முன்னுரிமைப் பகுதிகளில், ஒருங்கிணைக்கப்பட்ட நகர்ப்புற மற்றும் கிராமிய நீர் விநியோகம் மற்றும் வடிகாலமைப்புகள், உள்நாட்டு கழிவுநீர் சுத்திகரிப்பு மேம்பாடுகள், தொழில்துறை பூங்கா கழிவுநீர் முகாமைத்துவம், கிராமிய குடிநீர் சுத்திகரிப்பு, விநியோகிக்கப்படும்

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி நிறுவல்கள் மற்றும் நீர் உட்கட்டமைப்புடன் நேரடியாக இணைக்கப்பட்ட பசுமை வலுசக்தி கட்டமைப்புகள் ஆகியன உள்ளடங்குகின்றன.

இந்த மூலோபாயக் கட்டமைப்பு நீண்டகால தொழில்நுட்ப பரிமாற்றம், உள்ளூர்மயமாக்கல் மற்றும் தொழில்நுட்பத் திறன் மேம்பாடு ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கிறது. இந்த கூட்டணியானது தொழில்நுட்ப கருத்தரங்குகள், வர்த்தகப் பொருத்தப்பாடுகள், நிறைவேற்று வணிகப் பரிமாற்றங்கள் மற்றும் சீனாவில் உள்ள மாதிரி மையங்களுக்கான களப்பயணங்களுக்கு வசதி அளிக்கும். இது இலங்கையின் காலநிலை மற்றும் செயற்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப உயர் செயல்திறன் கொண்ட கட்டமைப்புகளை மாற்றியமைக்க ABC நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழுக்களுக்கு உதவும்.

இந்தக் கூட்டாண்மை இரு நிறுவனங்களின் பரஸ்பர பலங்களைப் பயன்படுத்துகிறது. ACEF சூழல் பாதுகாப்பு, நீர் பொறியியல், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மற்றும் EPC (பொறியியல், கொள்முதல், கட்டுமானம்) முதலீட்டில் இயங்கும் சீன நிறுவனங்களின் பரந்த வலையமைப்பைக் கொண்டுவருகிறது. ABC Trade & Investments தனது நீர் விஞ்ஞானப் பிரிவின் மூலம் நாடளாவிய சேவை உட்கட்டமைப்பு மற்றும் விசேட நிபுணத்துவத்தை வழங்குகிறது. இது ஆலோசனை, வடிவமைப்பு தீர்வு, உபகரண விநியோகம், நிறுவல், பரிசோதனை மற்றும் நீண்டகால இயக்கம் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய முழுமையான முகாமைத்துவத்தை வழங்குகிறது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒரு கட்டமைக்கப்பட்ட, நீண்டகால ஒத்துழைப்பு கட்டமைப்பை நிறுவுகிறது, இதன் கீழ் தனிப்பட்ட வணிக மற்றும் தொழில்நுட்ப திட்டங்கள் சுயாதீனமாக அடையாளம் காணப்பட்டு, மதிப்பீடு செய்யப்பட்டு, ஒப்பந்தம் செய்யப்படும். உறுதியாக நிரூபிக்கப்பட்ட சூழல் தொழில்நுட்பங்களை உள்ளூர் யதார்த்த விடயங்களுடன் இணைப்பதன் மூலம், ABC Trade & Investments மற்றும் ACEF ஆகியன இலங்கை முழுவதும் நிலைபேறான வளர்ச்சியை ஆதரிக்கும் நடைமுறை, அளவிடக்கூடிய உட்கட்டமைப்பு தீர்வுகளை உருவாக்கும் நோக்கத்தை கொண்டுள்ளன. ENDS

Photo Caption:

ABC Trade & Investments (Pvt) Ltd நிறுவனத்தின் பணிப்பாளரும் அதன் பிரதம நிறைவேவற்று அதிகாரியமான அமல்ராஜா ஜயசீலன் (வலது) மற்றும் All-China Environment Federation (ACEF) இன் Belt & Road Eco-Industry Cooperation பணிக்குழாமின் பொதுச்செயலாளர். ஷி ஜியாங் (இடது) ஆகியோர் இலங்கையின் பசுமை உட்கட்டமைப்பு, நீர் முகாமைத்துவம் மற்றும் பசுமை வலுசக்தி திட்டங்களை முன்னெடுப்பதற்காக கொழும்பில் மூலோபாய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளனர்.

ABC Trade & Investments (Pvt) Ltd பற்றி

இலங்கையில் ஒரு பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனமாக நிறுவப்பட்ட ABC Trade & Investments (Pvt) Ltd, ICT விநியோகம், சுகாதாரம், அச்சிடல், நுகர்வோர் இலத்திரனியல் மற்றும் சூழல் பொறியியல் ஆகிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. இதன் நீர் விஞ்ஞானப் பிரிவானது, உள்நாட்டு, வணிகம் மற்றும் அரச துறைகளில் குடிநீர் சுத்திகரிப்பு, தொழில்துறை கழிவுநீர் சுத்திகரிப்பு, திண்மக் கழிவு முகாமைத்துவம் மற்றும் காற்று மாசுபாட்டுக் கட்டுப்பாடு ஆகியவற்றில் விரிவான தீர்வுகளை வழங்குகிறது.

All-China Environment Federation (ACEF) பற்றி

All-China Environment Federation என்பது சூழல் பாதுகாப்பிற்காக அர்ப்பணிக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களைக் கொண்ட ஒரு நாடளாவிய ரீதியிலான இலாப நோக்கற்ற அமைப்பாகும். ‘Belt & Road’ சூழல்-தொழில்துறை ஒத்துழைப்பு பணிக்குழு போன்ற விசேட அமைப்புகள் மூலம், சர்வதேச ஒத்துழைப்பு, தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் பிராந்தியத்தில் பசுமை வளர்ச்சி முயற்சிகளுக்கு ACEF வசதிகளை ஏற்படுத்தி வருகிறது.

Post Comment