இலங்கையின் முதலாவது ரொபோ உதவியுடனான சத்திர சிகிச்சையை ஆசிரி சேர்ஜிகல் வைத்தியசாலைவெற்றிகரமாக முன்னெடுப்பு

இலங்கையின் முதலாவது ரொபோ உதவியுடனான சத்திர சிகிச்சையை ஆசிரி சேர்ஜிகல் வைத்தியசாலை வெற்றிகரமாக முன்னெடுத்து, நாட்டின் சுகாதாரப் பராமரிப்புத் துறையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லை பதிவு செய்துள்ளது. 2026 ஜுலை 13 ஆம் திகதி முதலாவது சத்திர சிகிச்சை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. அதனூடாக நோயாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சத்திர சிகிச்சை தொழில்னுட்பங்களை அணுகுவதற்கு வெளிநாடுகளுக்கு பயணிப்பதற்கான தேவையை இல்லாமல் செய்துள்ளது. ஆசிரி சேர்ஜிகல் வைத்தியசாலையின் அனுபவம் வாய்ந்த சத்திர சிகிச்சை நிபுணர்களால் பல்வேறு சத்திர சிகிச்சைத் துறைகளில் பயன்படுத்தப்படும் இத்தொழில்நுட்பமானது, மேம்பட்ட சத்திர சிகிச்சைக் கருவிகளையும் பாரம்பரிய மருத்துவ நிபுணத்துவத்தையும் ஒருங்கிணைக்கிறது.

இலங்கையின் மிகப்பெரிய சுகாதாரக் கூட்டு நிறுவனமான ஆசிரி, மேம்பட்ட சிகிச்சை முறைகளுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்காக மருத்துவத் தொழில்நுட்பங்கள், நிபுணத்துவத் திறன்கள் மற்றும் நவீன உட்கட்டமைப்புகளில் தொடர்ச்சியாக முதலீடு செய்து வந்துள்ளது. இந்த ரோபோ உதவியுடனான சத்திர சிகிச்சையின் அறிமுகம், சத்திர சிகிச்சைத் திறன்களை மேம்படுத்துவதிலும், சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தரத்திலான பராமரிப்பை நோயாளிகளுக்கு இலங்கையில் வழங்குவதிலும் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு முதலீட்டைப் பிரதிபலிக்கிறது.

60 க்கும் மேற்பட்ட நாடுகளில் ரோபோ முறையிலான சத்திர சிகிச்சை கட்டமைப்பு,, தெளிவான படமெடுப்பு, துல்லியத்தன்மை மற்றும் மேம்படுத்தப்பட்ட 3D high-definition காட்சியமைப்புகளுடன் உயர் கட்டுப்பாடு போன்றவற்றுடன் சத்திர சிகிச்சை நிபுணர்களால் 60 க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றது. சிறியளவிலான வெட்டுக்கள், சுற்றியுள்ள திசுக்களுக்கு ஏற்படும் குறைவான பாதிப்பு மற்றும் மேம்பட்ட அறுவைச் சிகிச்சைத் துல்லியம் ஆகியவை, நோயாளிகளுக்கு அறுவைச் சிகிச்சைக்குப் பின்னரான வலி குறைவதற்கும், குருதி இழப்பு குறைக்கப்படுவதற்கும், மருத்துவமனையில் தங்கியிருக்கும் காலம் சுருங்குவதற்கும் மற்றும் அவர்கள் விரைவாகக் குணமடைவதற்கும் பெரிதும் உதவுகின்றன.

ஆசிரி சேர்ஜிகல் வைத்தியசாலையின் செயற்பாடுகளுக்கான பணிப்பாளர் வைத்தியர். ஹரி பிரசாத் கருத்துத் தெரிவிக்கையில், “மருத்துவத் திறன், தொழில்நுட்பம் மற்றும் மனிதவளம் ஆகியவற்றில் தொடர்ச்சியாக முதலீடு செய்வதன் மூலம் சுகாதாரத் துறையில் முன்னேற்றம் ஏற்படும் என்று ஆசிரி எப்போதும் நம்பி வந்துள்ளது. இலங்கையின் முதலாவது ரோபோ உதவியுடனான சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டமை அந்தத் தத்துவத்தைப் பிரதிபலிக்கிறது – இது எமது வைத்தியர்களுக்குச் சிக்கலான சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான சிறந்த தொழில்நுட்பத்தை வழங்குவதையும், நோயாளிகளுக்கான ஒட்டுமொத்த சத்திரச் சிகிச்சை அனுபவத்தை மேம்படுத்துவதையும் வெளிப்படுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒழுங்குமுறைத் தரங்களுக்கு இணங்க அமைந்த இந்த முன்னோடித் தொழில்நுட்பத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்துவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம், இதன் மூலம் அதிகமான நோயாளிகள் தமது இருப்பிடத்திற்கு அருகிலேயே மேம்பட்ட சத்திர சிகிச்சைச் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். நாம் அறிமுகப்படுத்தும் ஒவ்வொரு புதிய மருத்துவ மேம்பாட்டைப் போன்று, எமது முன்னுரிமையாக நோயாளிகளின் பாதுகாப்பு, மருத்துவச் சிறப்பை வெளிப்படுத்துதல் மற்றும் அளவிடக்கூடிய முடிவுகள் ஆகியவை தொடர்ந்தும் காணப்படுகின்றன.” என்றார்.

இலங்கையின் முதலாவது ரொபோ உதவியுடனான சத்திர சிகிச்சை வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளமையானது, சத்திர சிகிச்சை முறைகளை மேம்படுத்துவது மற்றும் நோயாளர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த சிகிச்சைத் தெரிவுகளை இலங்கையில் அணுகுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான ஆசிரி சேர்ஜிகல் வைத்தியசாலையின் தொடர் முயற்சிகளில் முக்கியமான படிமுறையாக அமைந்துள்ளது.

Post Comment