KTM மோட்டார் சைக்கிள்களுடன் வீதிகளை மீண்டும் உயிர்ப்பூட்டிய DPMC

டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிறைவட்) லிமிடெட் நிறுவனம் (DPMC) ஐந்து வருட கால இடைவெளியின் பின்னர் KTM மோட்டார் சைக்கிள்களை பெருமையுடன் இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது உயர்தர செயல்திறன் கொண்ட மோட்டார் சைக்கிள் துறைக்கு திருப்புமுனையாக அமைந்திருப்பதுடன், உலகத் தரம் வாய்ந்த போக்குவரத்துத் தீர்வுகளை வழங்குவதில் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

நவீன ரக KTM மோட்டார் சைக்கிள்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு பத்தரமுல்லையில் உள்ள DPMC நிறுவனத்தின் காட்சிக் கூடத்தில் இடம்பெற்றது. மிகவும் எதிர்பார்ப்புடன் இடம்பெற்ற இந்த நிகழ்வானது பிரதான மோட்டார் சைக்கிள் துறையின் புதுப்பிக்கத்தக்க ஆர்வத்தை வெளிப்படுத்தியதுடன், உலகில் அதிகமாகக் கொண்டாடப்படும் உயர்ந்த செயல்திறனைக் கொண்ட மோட்டார் சைக்கிள் வர்த்தகநாமம் இலங்கையின் வீதிகளுக்கு மீண்டும் திரும்புகின்றன என்ற அறிவிப்பை விடுப்பதாகவும் அமைந்தது.

இறக்குமதிக் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படுவதற்கு முன்னர் DPMC நிறுவனம் 3,000 ற்கும் அதிகமான பல்வேறு வகையான  KTM மோட்டார் சைக்கிள்களை வெற்றிகரமாக விற்பனை செய்திருந்தது. உள்ளூர் சந்தையில் அதிக கேள்வியைக் கொண்ட மோட்டார் சைக்கிளாக இது விளங்கியது. கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக புதிய இறக்குமதிகள் இல்லாத போதும்,  ஏற்கனவே நாட்டில் இருந்த KTM மோட்டார் சைக்கிள்கள் தமது சிறந்த செயலாற்றலை வெளிப்படுத்தத் தவறவில்லை. DPMC நிறுவனத்தினால் வழங்கப்பட்ட ஒப்பிட முடியாத விற்பனைக்குப் பின்னரான சேவை, தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் அர்ப்பணிக்கப்பட்ட வாடிக்கையாளர் ஒத்துழைப்பு என்பன இதற்கு மேலும் வலுச்சேர்த்தன. இந்த உறுதிப்பாடு, தற்போதைய KTM உரிமையாளர்களுக்குத் தொடர்ந்து உச்ச செயல்திறன், நம்பகத்தன்மை மற்றும் திருப்தியான அனுபவம் என்பவற்றை வழங்குகின்றது.

டேவிட் பீரிஸ் குழும நிறுவனத்தின் அதிபர் திரு.டேவிட் பீரிஸ், குழுமத்தின் தலைவரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான திரு.ரோஹன திசாநாயக்க, டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிறைவட்) லிமிடெட் நிறுவனத்தின் பணிப்பாளரும், பிரதம செயற்பாட்டு அதிகாரியுமான திரு.நாளக்க மடுகல்ல, வாகன விற்பனைக்கான பிரதம அதிகாரி திரு.லக்மல்.டி சில்வா, பஜாஜ் ஓட்டோ லிமிடெட் நிறுவனத்தின் இலங்கைக்கான விற்பனைத் தலைவர் திரு.சஜீன் குமார் சுக்ஹிஜா, பஜாஜ் ஓட்டோ லிமிடெட் நிறுவனத்தின் சேவைக்கான இலங்கைக்கான தலைவர் திரு.விஜய்சிங் எஸ் ஷெகாவத் ஆகியோர் KTM மோட்டார் சைக்கிள்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அவற்றுடன் காணப்படுகின்றனர்.
டேவிட் பீரிஸ் குழும நிறுவனத்தின் அதிபர் திரு.டேவிட் பீரிஸ், குழுமத்தின் தலைவரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான திரு.ரோஹன திசாநாயக்க, டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிறைவட்) லிமிடெட் நிறுவனத்தின் பணிப்பாளரும், பிரதம செயற்பாட்டு அதிகாரியுமான திரு.நாளக்க மடுகல்ல, வாகன விற்பனைக்கான பிரதம அதிகாரி திரு.லக்மல்.டி சில்வா, பஜாஜ் ஓட்டோ லிமிடெட் நிறுவனத்தின் இலங்கைக்கான விற்பனைத் தலைவர் திரு.சஜீன் குமார் சுக்ஹிஜா, பஜாஜ் ஓட்டோ லிமிடெட் நிறுவனத்தின் சேவைக்கான இலங்கைக்கான தலைவர் திரு.விஜய்சிங் எஸ் ஷெகாவத் ஆகியோர் KTM மோட்டார் சைக்கிள்களை அறிமுகப்படுத்துகின்றனர்.

KTM மோட்டார் சைக்கிள்கள் ஐரோப்பாவின் முதல்தர பந்தய மோட்டார் சைக்கிள் வர்த்தக நாமமாக உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்டிருப்பதுடன், அதன் உயர்ந்த வினைத்திறன் மிக்க செயற்பாடு மோட்டார் சைக்கிள் துறையில் அதனைத் தொடர்ந்தும் உறுதியான இடத்தில் பேணி வருகின்றது. இதன் காரணமாக MotoGP, Dakar Rally, மோட்டார் பந்தையங்கள் மற்றும் சர்வதேச மோட்டார் பந்தையத் திடல்கள் பூன்ற முன்னணி பந்தையங்களில் KTM மோட்டார் சைக்கிள்கள் தனக்கான தனியிடத்தை உறுதிசெய்து வருகின்றன. அது மாத்திரமன்றி இந்தியா, நேபாளம் போன்ற பிராந்திய சந்தைகள் மற்றும் உலகின் 80ற்கும் அதிகமான சந்தைகளிலும் இது உறுதியான பிரசன்னத்தைக் கொண்டுள்ளது. KTM இன் பந்தைய பாரம்பரியம் மற்றும் பொறியியல் சிறப்பு என்பன உலகளாவிய ரீதியில் உள்ள வாகன ஓட்டிகள் மற்றும் பந்தைய நிபுணர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது.

டேவிட் பீரிஸ் குழும நிறுவனத்தின் அதிபர் திரு.டேவிட் பீரிஸ், குழுமத்தின் தலைவர் அறிமுகப்படுத்தப்பட்ட KTM Adventure 390மோட்டார் சைக்கிளுக்கான சாவியை முதல் வாடிக்கையாளர்களில் ஒருவரிடம் கையளிக்கின்றார். குழுமத்தின் தலைவரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான திரு.ரோஹன திசாநாயக்க, டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிறைவட்) லிமிடெட் நிறுவனத்தின் பணிப்பாளரும், பிரதம செயற்பாட்டு அதிகாரியுமான திரு.நாளக்க மடுகல்ல ஆகியோர் அருகில் காணப்படுகின்றனர்.

இந்த மீள் அறிமுக நிகழ்வின் ஓர் அங்கமாக Duke 160, Duke 250 மற்றும்  Adventure 390 X போன்ற மூன்று பிரதான வகைகள் இலங்கைச் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டன. உயர்ந்த வினைத்திறனான செயற்பாட்டை வழங்கும் வகையில் அவை வடிவமைக்கப்பட்டிருப்பதுடன், வாகன ஓட்டிகளை இலக்காகக் கொண்ட தொழில்நுட்பத்திற்கு இணங்கும் வகையில் இவை தயாரிக்கப்பட்டுள்ளன. உலகளாவிய ரீதியில் விளையாட்டு மற்றும் சுற்றுலா மோட்டார் சைக்கிள் பிரிவுகளில் தொடர்ந்தும் முன்னிலை வகிக்கும் KTM மோட்டார் சைக்கிள்கள்,  வாகன ஓட்டிகளுக்கு அதிக வேகம், வடிவமைப்பு, கட்டுப்பாடு மற்றும் தனித்துவமான ஓட்ட அனுபவத்தை வழங்குகிறன.

டேவிட் பீரிஸ் குழும நிறுவனத்தின் அதிபர் திரு.டேவிட் பீரிஸ், குழுமத்தின் தலைவர் அறிமுகப்படுத்தப்பட்ட KTM Adventure 390மோட்டார் சைக்கிளுக்கான சாவியை முதல் வாடிக்கையாளர்களில் ஒருவரிடம் கையளிக்கின்றார். குழுமத்தின் தலைவரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான திரு.ரோஹன திசாநாயக்க, டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிறைவட்) லிமிடெட் நிறுவனத்தின் பணிப்பாளரும், பிரதம செயற்பாட்டு அதிகாரியுமான திரு.நாளக்க மடுகல்ல ஆகியோர் அருகில் காணப்படுகின்றனர்.

கவர்ச்சிகரமான, சிறந்த வடிவமைப்பு மற்றும் ரேசிங்கிற்கு ஏற்ற வகையிலான பொறியியல் கட்டமைப்பு போன்றவற்றுக்குப் பெயர் பெற்ற KTM சைக்கிள்கள், சக்தி வாய்ந்த ஆறு வேகங்களைக் கொடுக்கும் கியர் கட்டமைப்பைக் கொண்ட வெப்பத்தைக் குறைக்கும் திரவத்தைக் உள்ளடக்கிய இயந்திரம், கனம் குறைந்த வெளிக் கட்டமைப்பு மற்றும் சீரான கட்டுப்பாடு மற்றும் வேகமூட்டுதலை வழங்கும் வகையில் மேம்பட்ட WP APEX USD சஸ்பென்ஷன் கட்டமைப்பு என்பவற்றைக் கொண்டமைந்துள்ளன.  குறிப்பிட்ட சில வகை மோட்டார் சைக்கிள்கள் டுவல் டிஸ்க், டுவல் சனல் ABS உடன் நான்கு பிஸ்டன் ரேடியல் கலிபர்கள், சுயமான ஓட்ட மோடுகள் (Supermoto ABS உட்பட), ரைட்-பை-வயர் சிஸ்டம், ஸ்லிப்பர் க்ளச், க்குவிக்ஷிஃப்டர்+, நவீன TFT வண்ண திரைகள் மற்றும் பல வசதிகளைக் கொண்டுள்ளன. இதனால் அதிகரித்த பாதுகாப்பு மற்றும் சிறந்த பயண அனுபவம் என்பவற்றை அனுபிக்க முடியும்.

KTM மோட்டார் சைக்கிள்களுக்கான இலங்கையின் அங்கீகரிக்கப்பட்ட ஏக விநியோகஸ்தர் என்ற ரீதியில் DPMC நிறுவனம், நாடு முழுவதிலுமுள்ள விஸ்தரிக்கப்பட்ட காட்சியறைகள் மற்றும் சேவை வலையமைப்புக்களைத் திட்டமிட்டிருப்பதுடன், அதில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விரிவாக்கமும் அடங்கியுள்ளது. இதனால் நாட்டளாவிய வாடிக்கையாளர்களுக்கு எளிதான அணுகல் உறுதி செய்யப்படுகிறது. நிறுவனம் பயிற்சி பெற்ற தொழில்நுட்ப குழுக்கள், அசல் உதிரிப்பாகங்கள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட வாடிக்கையாளர் சேவையுடன் பிரசித்திபெற்ற சேவை ஆதரவை முழுமையாக வழங்க தயாராக உள்ளது. இதன் காரணமாக மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் மீண்டும் ஒப்பிட முடியாத அனுபவத்தை அனுபவிக்கலாம்.

உலகப் புகழ்பெற்ற வர்த்தக நாமங்கள் மற்றும் முற்றும் முன்னணி போக்குவரத்துத் தீர்வுகளை இலங்கையிலுள்ள வாடிக்கையாளர்களுக்கு கொண்டு வருவதில் DPMC தொடர்ந்து  செயற்படுகின்றது என்பது இதன் மூலம் மீண்டும் உறுதியாகின்றது.

மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள 0114700600 என்ற இலக்கத்திற்கு அழைக்கவும் அல்லது www.dpmco.com என்ற இணையத்தளத்திற்கு விஜயம் செய்யவும் அல்லது KTM Sri Lanka என்ற புகப்புத்தகப் பக்கத்தில் தொடரவும்.

படவிளக்கம்

டேவிட் பீரிஸ் குழும நிறுவனத்தின் அதிபர் திரு.டேவிட் பீரிஸ் அவர்கள் அறிமுகப்படுத்தப்பட்ட KTM Duke 250 மோட்டார் சைக்கிளுடன் காணப்படுகின்றார். குழுமத்தின் தலைவரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான திரு.ரோஹன திசாநாயக்க, டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிறைவட்) லிமிடெட் நிறுவனத்தின் பணிப்பாளரும், பிரதம செயற்பாட்டு அதிகாரியுமான திரு.நாளக்க மடுகல்ல, வாகன விற்பனைக்கான பிரதம அதிகாரி திரு.லக்மல்.டி சில்வா, பஜாஜ் ஓட்டோ லிமிடெட் நிறுவனத்தின் இலங்கைக்கான விற்பனைத் தலைவர் திரு.சஜீன் குமார் சுக்ஹிஜா, பஜாஜ் ஓட்டோ லிமிடெட் நிறுவனத்தின் சேவைக்கான இலங்கைக்கான தலைவர் திரு.விஜய்சிங் எஸ் ஷெகாவத் ஆகியோரும் அருகில் காணப்படுகின்றனர்.

Post Comment