கொழும்பு, ஏப்ரல் 26, 2025: இலங்கையில் Nissan வாகனங்களுக்கான உத்தியோகபூர்வ விநியோகஸ்தரான Associated Motorways (Pvt) Ltd. (AMW) நிறுவனம், புதிய Nissan Magnite ஐ உத்தியோகபூர்வமாக இலங்கைச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய Magnite, மிடுக்கான தோற்றம், மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் உறுதியான உள்ளக, வெளிப்புற வடிவமைப்பு மூலம் மெருகூட்டப்பட்டுள்ளது. 1.0L Petrol MT மற்றும் EZ-Shift, 1.0L Turbo Petrol MT மற்றும் CVT என நான்கு பவர்டிரெயின் தெரிவுகளுடன் 18 மாதிரிகளில் இவை கிடைக்கின்றன.

2020 டிசம்பரில் உலகளாவிய ரீதியில் முதன்முறையாக அறிமுகமான Nissan Magnite, இன்று வரை 1.9 இலட்சத்திற்கும் அதிகமான உலகளாவிய விற்பனையை பதிவு செய்துள்ளது. புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட வடிவமைப்பிற்கான அதன் உறுதிப்பாட்டை புதிய Nissan Magnite தொடர்கிறது. ‘One Car, One World’ எனும் Nissan இன் உத்தியின் கீழ், வலதுபுற மற்றும் இடதுபுற சாரதி ஆசன மாதிரிகளுடன், உலக சந்தைகளில் உயர் தரம், நம்பகத்தன்மை மற்றும் ஜப்பானிய இயல்புகள் கொண்ட இந்த வாகனம் பெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது.

இது தொடர்பில் AMW நிறுவனத்தின் குழும முகாமையாளர் Andre Bonthuys தெரிவிக்கையில், “5 வருட இறக்குமதி தடைக்குப் பின்னர், Nissan Magnite இன் புதிய வகைகளின் அறிமுகமானது இலங்கையில் Nissan வாகனங்களுக்கான புதிய யுகத்தினை உருவாக்கவுள்ளது. இது ஏனைய சந்தைகளில் வாடிக்கையாளர்களிடையே பெற்ற வெற்றியை போன்றே இலங்கையிலும் இவ்வகை வாகனங்களில் எதிர்பார்ப்பு மிக்க நம்பிக்கையை ஏற்படுத்தும். புதிய Nissan Magnite இன் அறிமுகமானது, சிறந்து விளங்குவதற்கான எமது ஆழமான அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதுடன், இலங்கையில் உள்ள எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்தவற்றை வழங்குவதற்கான எமது அர்ப்பணிப்பை வலுப்படுத்துகிறது. புதிய Nissan Magnite ஏனைய சந்தைகளைப் போலவே, இலங்கையிலும் அதற்கு அப்பாலும் உள்ள வாடிக்கையாளர்களிடம் தொடர்ந்து வீறுநடை போடுமென நாமும் எதிர்பார்க்கிறோம். நாம் எப்போதும் சிறந்ததை வழங்க நம்பிக்கையுடன் செயற்படுகிறோம்.” என்றார்.

Nissan Motor Corporation, தெற்காசிய பிரிவு தலைவர் ரகுநாத் நாயர் தெரிவிக்கையில், “65 இற்கும் மேற்பட்ட உலக சந்தைகளில் இவ்வகை வாகனப் பிரிவில் எதிர்பார்ப்புகளையும் தாண்டி புதிய தரநிலைகளை Magnite அமைத்துள்ளது. பாதுகாப்பு, வசதிகள், தரம் என அனைத்திலும் அதிக மதிப்பை இது வழங்குகிறது. புதிய Nissan Magnite, இலங்கையிலுள்ள மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள் மத்தியிலும் இதே வெற்றியை தொடர்ச்சியாக பதிவு செய்யும் என நாம் உறுதியாக நம்புகிறோம்.” என்றார்.

ஜப்பானிய வடிவமைப்பையும் திறமையான உற்பத்தியையும் இணைத்து, ‘Bold Inside Out’ எனும் கருப்பொருளின் கீழ் வடிவமைக்கப்பட்ட புதிய Nissan Magnite உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அம்சங்களையும் ஈர்க்கக்கூடிய செயல்திறனையும் வழங்குகிறது. இந்த வாகனம் வீதியில் அதன் உறுதியை மேம்படுத்தும் வகையிலான உறுதிமிக்க வெற்றிகரமான வெளிப்புற வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது lightsaber-style indicators உடன் கூடிய நேர்த்தியான LED headlamps, 3D honeycomb வடிவத்துடன் கூடிய அதி நவீன LED taillamps மற்றும் L வடிவ DRL ஆகியவற்றைக் கொண்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட அதன் வடிவமைப்பில், உயர்த்தப்பட்ட skid plate, ஒரு பெரிய grille, புதிய இரட்டை-தோற்ற 16 அங்குல வைர வெட்டுடன் கூடிய alloy wheels, செயற்பாடு மிக்க கூரை பீலிகள் மற்றும் அதி நவீன  அதிக நில இடைவெளி (Ground Clearance) உள்ளிட்ட நவீன வெளித் தோற்றத்துடன் காட்சியளிக்கிறது. 6 தனி நிறங்கள் மற்றும் 5 இரட்டை தோற்ற நிறங்கள் என மொத்தமான 11 வண்ண தெரிவுகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட தனித்துவமான வாகனம் செலுத்தும் அனுபவத்தை Magnite வழங்குகின்றது

புதிய Nissan Magnite, அதன் வகைப் பிரிவில் முதன்மையாக உள்ள பல நவீன அம்சங்களுடன் கூடிய உள்ளக வடிவமைப்பை வழங்குகிறது. பிரீமியம் தரமுடைய, மிருதுவான தோற்றத்துடன் காணப்படும் 360 பாகை leather pack அம்சம் இதில் இடம்பெறுகிறது. இதில் Brownish Orange நிறத்தில் காணப்படும் leatherette கொண்ட டேஷ்போர்ட், Honeycomb தையலமைப்புடன் கூடிய ஆசனங்கள், leatherette உடனான கதவுகள், parking brake lever, steering, front armrest போன்றவற்றிலும் leatherette அம்சம் இடம்பெற்றுள்ளது. மிகப் பெரிய சேமிப்புத் திறன் கொண்ட கெபின், மேம்பட்ட இருக்கை வசதி, 60:40 விகித பின்புற இருக்கை பிரிப்புடன் 336 – 540 L வரை விரிவாக்கக்கூடிய boot space இனை இது கொண்டுள்ளது. முட்டுக் கால்களுக்கான அதிக இடவெளி, உயரமான சாரதி இருக்கை, முன்புற armrest சேமிப்பு பகுதி மற்றும் குளிரூட்டப்பட்ட glove box ஆகியன, ஆறுதலையும் அழகையும் ஒன்றிணைத்த உள்ளக கட்டமைப்பை உருவாக்குகின்றன.

மேலும், புதிய Magnite வாகனம் 20 இற்கும் அதிகமான புதிதாக அறிமுகமான முன்னணி மற்றும் சிறந்த அம்சங்களைக் கொண்டுள்ளது. இதில் Heat Guard தொழில்நுட்பத்துடன் கூடிய மெத்தையிடப்பட்ட leatherette ஆசனங்கள், நினைவாற்றலுடனான பல நிற ஒளி அமைப்புகள், Plasma Cluster வளி அயனாக்கி மற்றும் உலகளாவிய smart key உடனான, 60 மீற்றர் வரையிலான தொலைவிலிருந்து எஞ்சினை ஸ்டார்ட் செய்யக் கூடிய தொழில்நுட்பம், Walk Away Lock மற்றும் Approach Unlock அம்சங்களையும் கொண்டுள்ளது. இதற்குத் துணையாக மிகப்பெரிய bezel-less auto-dimming IRVM, Full LED exterior pack (Headlamp, tail lamp, DRLs, Indicator, Front fog lamp), Around View Monitor உள்ளிட்ட பல முன்னணி வசதிகளும் இதில் உள்ளன. உள்ளே, 17.78cm digital cluster, 8 அங்குல (20.32 cm) Wireless Android Auto மற்றும் Apple CarPlay வசதியுடன் கூடிய Floating touchscreen, ARKAMYS 3D sound, cruise control ஆகியவையும் உள்ளன. அத்துடன், புதிய யுக வாடிக்கையாளர்களுக்காக dashcam, wireless charger, JBL speakers, puddle lamps, LED scuff plates கொண்ட தொழில்நுட்ப பொதியையும் அது கொண்டுள்ளது. இதன் மூலம் Magnite ஆனது, இவ்வகை வாகனங்களில் மிகவும் விரும்பத்தக்க வசதியை அளிக்கிறது.

மேலும், Nissan Magnite வாகனத்தில் சுறுசுறுப்பான மற்றும் மகிழ்ச்சியான பயண அனுபவத்தை வழங்கும் நவீன powertrains அமைப்புகள் உள்ளன. அந்த வகையில், HRA0 1.0 turbo engine எஞ்சின் ஆனது, B-SUV பிரிவில் மிகச்சிறந்த எரிபொருள் திறனை (20 kmpl) வழங்குவதுடன், குறைந்த வேகத்தில் அதிக முறுக்கத்தை (torque) வழங்குவதற்கும் சிறந்ததாக விளங்குகின்றது. இதில் Nissan GT-R போன்ற ஸ்போர்ட்ஸ் கார்களில் பயன்படுத்தப்படும் Mirror Bore Coating தொழில்நுட்பம், split cooling மற்றும் forged crankshaft ஆகியனவும் காணப்படுகின்றன. இது செயல்திறன், எரிபொருள் திறன், குறைந்த ஒலி மற்றும் அதிர்வு, குறைந்த NVH மற்றும் காபன் வெளியீடு ஆகியவற்றை உறுதி செய்கிறது. இந்த எஞ்சின் 5 ஸ்பீட் கியர் பொக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இது, B4D 1.0L கொண்ட இயல்பாகவே ஒத்திசையும் எஞ்சினையும், manual அல்லது EZ-Shift (AMT) என இரண்டு தெரிவுகளுடன் வழங்கப்படுகிறது.

பாதுகாப்பு என்பது Nissan நிறுவனம் முன்னுரிமை அளிக்கும் விடயம் என்பதைக் காட்டும் வகையில், புதிய Magnite வாகனம் 40 இற்கும் அதிகமான தரநிலைகள் கொண்ட வழக்கமான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட 55 இற்கும் அதிகமான பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது. இதில் Airbags (2 Front Airbags/2 Side Airbags/2 Curtain Airbags), Vehicle Dynamic Control (VDC), Traction Control System (TCS), Hill Start Assist (HAS), Hydraulic Brake Assist (HBA), Anti-Lock Braking System (ABS), Electronic Brake-force Distribution (EBD), Tyre Pressure Monitoring System (TPMS) ஆகியன உள்ளடங்குகின்றன.

மேலும், 3 புள்ளி ஆசன பட்டிகள், ஆசன பட்டி நினைவூட்டல், child locks, ISOFIX anchorages, பின்புற பார்க்கிங் சென்சர்கள் ஆகிய அம்சங்கள் இதன் அனைத்து வகைகளிலும் வழக்கமான பாதுகாப்பு அம்சங்களாக இணைக்கப்பட்டுள்ளன. வாகனத்தின் மேம்பட்ட கட்டமைப்பில் 67% உயர் தடிப்பம் கொண்ட உருக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இவை பயணத்தின் போது பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்கின்றன. மேலும், 3 வருடங்கள் அல்லது 100,000 கி.மீ வரையான உத்தரவாதத்துடன் புதிய Magnite வழங்கப்படுவதனால், மனதிற்கு நிம்மதியையும், வாகன உரிமையாளருக்குள்ள சிறந்த அனுபவத்தையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

இந்த புதுப்பிக்கப்பட்ட Nissan Magnite ஆனது, இவ்வகை வாகனங்களில் மிக உயர்ந்த மதிப்பை வழங்கும் வாகனமாக திகழ்கின்றது. அனைத்து அம்சங்களிலும் சிறந்து விளங்கும் ஒரு வாகனத்தைக் தேடும் வாடிக்கையாளர்களுக்கு இது சிறந்த தெரிவாகும். அனைத்து வாகன ஆர்வலர்களும் தங்களுக்கு அருகிலுள்ள Nissan காட்சியறைகளுக்குச் சென்று புதிய திட்டத்தின் நன்மைகள் மற்றும் வாய்ப்புகளை அனுபவிக்குமாறு Associated Motorways (Pvt) Ltd. கேட்டுக் கொள்கின்றது.

Associated Motorways (Private) Ltd.  பற்றி

Associated Motorways (Private) Ltd நிறுவனமானது, இலங்கையில் Nissan Motor Company நிறுவனத்தின் உத்தியோகபூர்வ விநியோகஸ்தராக செயற்படுகிறது. இந்நிறுவனம் தனது செயற்பாடுகளை 1950 ஆம் ஆண்டு ஆரம்பித்த நிலையில், 1957 ஆம் ஆண்டு முதல் Nissan உடன் இணைந்து பயணித்து வருகிறது. இந்நிறுவனம், ஜப்பான், தாய்லாந்து, இந்தியா ஆகிய நாடுகளில் உள்ள Nissan உற்பத்தி நிலையங்களிலிருந்து வாகனங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்து வருகிறது. மேலதிக விபரங்களுக்கு: www.nissanlk.com எனும் இணையத்தளத்தை பார்வையிடவும்

Photo Caption

Associated Motorways (Private) Limited  நிறுவனத்தின் குழும முகாமையாளர் Andre Bonthuys மற்றும் Nissan தெற்காசிய வணிக பிரிவுத் தலைவர் ரகுநாத் நாயர் ஆகியோர், புதிய Nissan Magnite வாகனத்தை கொள்வனவு செய்த முதல் தொகுதி வாடிக்கையாளர்களுடன் அறிமுக விழாவில் கலந்து கொண்ட போது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *