Hemas International Business நிறுவனமானது தங்களது பிரபல மூலிகை மற்றும் ஆயுர்வேத தயாரிப்புகளை அண்மையில் சவுதி அரேபியாவின் முன்னணி கண்காட்சியில் சர்வதேச பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்தியது. இது ரியாத் சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் இடம்பெற்றதுடன், அங்கு Beautyworld கண்காட்சியில் உள்நாட்டு வர்த்தகநாமங்களை காட்சிப்படுத்திய ஒரேயொரு இலங்கை தனிநபர் பராமரிப்பு நிறுவனமாக ஹேமாஸ் திகழ்ந்தது. உலகப் புகழ்பெற்ற கண்காட்சி, தொழில்துறை நிபுணர்கள், உலகளாவிய வர்த்தகநாமங்கள் மற்றும் அழகு புத்தாக்குனர்களை ஒன்றிணைத்து தயாரிப்புகள், போக்குகள் மற்றும் வணிக வாய்ப்புகளின் துடிப்பான காட்சிப்படுத்தலை வழங்குகிறது. மூன்று நாள் கண்காட்சியில், Kumarika, Vivya, Swa மற்றும் Prasara போன்ற உள்நாட்டு வர்த்தகநாமங்களுடன் தனது Ceylon Soul Cinnamon வரிசையை  முழு அழகு விநியோகச் சங்கிலியையும் உள்ளடக்கிய 400க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்களுக்கு நிறுவனம் காட்சிப்படுத்தியது. முன்னணி முதலீட்டாளர்கள் மற்றும் பிரமுகர்கள் Hemas இன் கவர்ச்சிகரமான இயற்கை எண்ணக்கருக்கள், விரிவான அழகு சாதனப் பொருட்கள் மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு வர்த்தகநாமங்களைப் பற்றி அறிந்துகொள்ள Hemas காட்சிக்கூடத்தில் கூடினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *