இலங்கையில் தற்போது ஒரு சுயாதீன நிறுவனமாக செயற்பட்டு வரும் Belluna Lanka, நாட்டின் வளர்ச்சிக்கும் முதலீட்டுக்கும் நீண்டகாலத்துக்கான தனது உறுதிப்பாட்டை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. கடந்த 50 வருடங்களுக்கு மேலாக பல்வேறு துறைகளில் உலகளாவிய அனுபவம் கொண்ட ஜப்பானின் Belluna Co. Ltd. நிறுவனத்திற்கு முழுமையாகச் சொந்தமான ஒரு துணை நிறுவனம் எனும் வகையில், Belluna Lanka அதன் தாய் நிறுவனத்தின் நிதி உறுதித்தன்மை, சர்வதேச கௌரவம் மற்றும் வெற்றிகரமான வணிக முயற்சிகள் ஆகிய உறுதியான அடித்தளம் ஊடாக  ஆதரவைப் பெறுகிறது. உலகளாவிய  திடமான தனிப்பட்ட நிதியிருப்புடன், Belluna Lanka இலாபகரமான முயற்சிகளின் நிரூபிக்கப்பட்ட பதிவுகளுடன் ரியல் எஸ்டேட், விருந்தோம்பல் மற்றும் சேவை வழங்கலில் ஒரு முன்னோடியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. நிலைபேறான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் புத்தாக்கமான முதலீடுகளை நிறுவனம் ஏற்படுத்துகிறது. இலங்கையில் மேற்கொண்ட அதன் அனைத்து முதலீடுகளும் ஜப்பானிலிருந்து நேரடியாக தனிப்பட்ட நிதி வழங்கல் மூலமானைவையாகும். இதன் மூலம் நிறுவனம் காட்டும் நிதிப் பாதுகாப்பும், வளர்ச்சியின் மீதான உறுதியும் வெளிப்படுகின்றன.

கடந்த பத்து வருடங்களாக Belluna Lanka இலங்கையில் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் மூலதன விரிவாக்கம் மேற்கொண்டு, நாட்டின் எதிர்கால முன்னேற்றத்துடன் இணைந்து செயற்பட்டு வருகிறது. இலங்கையின் பண்பாட்டு மரபையும், பாரம்பரியத்தையும் மதித்து, தரமான வாழ்விடங்களையும், அனுபவங்களையும் உருவாக்குவதே நிறுவனத்தின் நோக்கமாகும். கவனமாக தெரிவு செய்யப்பட்ட முதலீடுகள் மூலம் வளர்ச்சி மற்றும் விருந்தோம்பல் துறையில் உலகளாவிய முன்னோடியாக நாட்டை நிலைநிறுத்துவதன் மூலம் இலங்கை பொருளாதார இலக்குகளை அடைய Belluna Lanka ஆதரவளிக்கிறது.

Belluna Lanka நிறுவனத்தின் அர்ப்பணிப்பானது, பன்முகத்தன்மை கொண்ட மற்றும் வளர்ச்சியடையும் பிரிவுகளில் பிரதிபலிக்கிறது. குறிப்பாக தற்போது வரை அதன் மொத்த பிராந்திய முதலீடானது, 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை (சுமார் ரூ. 60 பில்லியனை) கடந்துள்ளது. இதில் பெரும்பாலானவை இலங்கைக்குள் உள்ள திட்டங்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன. தெற்காசியாவில் Belluna நிறுவனத்தின் மூலோபாய தளமாக இலங்கையை மையமாகக் கொண்டு Belluna Lanka செயற்படுவதோடு, ஏனைய சந்தைகளிலும் அதன் விரிவாக்கத்தை மேற்கொண்டு முன்னேற்றம் கண்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Granbell Colombo மற்றும் Le Grand Galle ஆகிய முக்கிய இரு ஹோட்டல் திட்டங்கள் நிறுவனத்தின் முதன்மையான விருந்தோம்பல் முயற்சிகளாகும். இவை இலங்கையின் இயற்கை அழகு மற்றும் கலாசார பாரம்பரியத்துடன், ஜப்பானிய குறைந்தபட்ச இட வடிவமைப்புடன் காலத்தால் போற்றப்படும் இலங்கை கைவினைத்திறனுடன் திறமையாகக் கலந்து தனித்துவமிக்க அனுபவத்தை வழங்குகின்றன. Marriott International மூலம் நிர்வகிக்கப்படும் The Westin Maldives போன்ற பன்னாட்டு திட்டமும் Belluna நிறுவனத்தின் பிராந்திய முனைப்பின் சின்னமாகும். இது 2018 இல் நிறைவு செய்யப்பட்டது. அதேவேளை, நிறுவனம் சின்னமன் கார்டனில் அமைத்துள்ள 447 Luna Tower உள்ளிட்ட ரியல் எஸ்டேட் திட்டங்களிலும் புகழ்பெற்ற வளர்ச்சியை அடைந்துள்ளது. இனிமையான மெருகுடன், அமைதியான ஓய்வு தேடுகிறவர்களுக்கு வடிவமைக்கப்பட்ட அதிசொகுசு Luna ஆனது, ஒளிந்து கிடக்கும் அழகிய செழுமையை பிரதிபலிப்பதோடு, தனித்துவமான மற்றும் நேர்த்தியான உணர்வை வழங்குகிறது. அத்துடன், கொழும்பு 03 இல் உள்ள D.R. Wijewardene மாவத்தையுடன் இணைந்த முக்கிய காணியை Belluna கொண்டுள்ளது. இது இலங்கையின் நகர்ப்புற வளர்ச்சி அபிலாஷைகளுடன் இணைந்ததாகும்.

நிறுவனத்தின் அர்ப்பணிப்பு தொடர்பில், Belluna Co. Ltd. பணிப்பாளர் Hiroshi Yasuno கருத்து வெளியிடுகையில், “Belluna நிறுவனத்தின் நோக்கம் எப்போதும் நீடித்த முதலீடுகள் ஊடாக மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதாகவே இருந்து வந்துள்ளது. தெற்காசியாவின் முக்கிய தளமாக விளங்கும் வகையில் Belluna Lanka நிறுவனமானது இந்தக் கோட்பாட்டை இலங்கையை அதன் மையத்தில் கொண்டு வருவதன் மூலம் நடைமுறைப்படுத்துகிறது. நாம் நாட்டின் திறனை ஆழமாக நம்பி அதில் முதலீடு செய்து வருகிறோம். ஜப்பானிய வடிவமைப்புக் கோட்பாட்டை இலங்கையின் படைப்பாற்றல், அரவணைப்பு மற்றும் புத்திக் கூர்மையுடன் இணைப்பதன் மூலம் நிலைபேறான மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தும் சூழல்களையும் அனுபவங்களையும் தொடர்ந்து வடிவமைத்து வருகிறோம். விரிவாக்கத்தை மேற்கொள்வதோடு மட்டுமல்லாமல், ஒவ்வொரு திட்டமும் ஒருமைப்பாடு, நிலைபேறான தன்மை மற்றும் நாம் சேவை செய்யும் சமூகங்கள் மீதான ஆழ்ந்த மரியாதை ஆகியவற்றில் எமது மதிப்புகள் உள்ளடக்கப்பட்டதாக இருப்பதை உறுதி செய்வதோடு, சமுதாயங்களை மதிக்கும் மனப்பான்மையை பிரதிபலிக்க வேண்டும் என்பது எமது நோக்கமாகும்.” என்றார்.

இந்த புதிய அத்தியாயத்தில் Belluna Lanka நுழையும் நிலையில், இலங்கையின் முதலீடு, அபிவிருத்தி மற்றும் நிலைபேறான முன்னேற்றத்தின் பின்புலத்தில் ஒரு உந்து சக்தியாக அதன் நிலையை தொடர்ந்து வலுப்படுத்துகிறது. புத்தாக்கம் மற்றும் விசேடத்துவத்தை வலியுறுத்துவதன் மூலம், புதிய தீர்வுகள், உயர்தர சேவைகள் மற்றும் சமூகப் பரிணாமங்கள் மூலம், இலங்கையில் பசுமையும், பொருளாதார வளமும் உள்ள எதிர்காலத்தை உருவாக்க Belluna Lanka முயற்சிக்கிறது.

END.

Belluna Lanka பற்றி

டோக்கியோ பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட Belluna Lanka Pvt. Ltd. நிறுவனத்தின் முழுமையான உரிமை கொண்ட Belluna Lanka Pvt. Ltd. நிறுவனம், விருந்தோம்பல், ரியல் எஸ்டேட் மற்றும் சொத்து முகாமைத்துவம் ஆகியவற்றிலான மூலோபாய முதலீடுகள் மூலம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டுள்ள உலகளாவிய நிபுணத்துவத்தை இலங்கைக்குக் கொண்டு வருகிறது. தெற்காசியாவில் இலங்கை அதன் மூலோபாய தளமாகச் செயற்படுவதன் மூலம், நிறுவனம் ஒரு தயாரிப்பு சார்ந்த மற்றும் மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையை தழுவுகிறது. அத்துடன் சர்வதேசத் தரங்களை நிலைநிறுத்தியவாறு, உள்ளூர் வாய்ப்புகளை பிரதிபலிக்கும் வகையில் அதன் முயற்சிகளை வடிவமைக்கிறது. நிலைபேறான வளர்ச்சி, சமூக மேம்பாடு மற்றும் நீண்டகால மதிப்பு உருவாக்குவது தொடர்பில் கொண்டுள்ள அர்ப்பணிப்புடன், Belluna Lanka நிறுவனம் அதன் தாய் நிறுவனம் மற்றும் உள்ளூர் தலைமைத்துவத்துடன் புத்தாக்கம், மீள் முதலீடு மற்றும் ஒத்துழைப்பு மூலம் இலங்கையின் பொருளாதார எதிர்காலத்திற்கு தொடர்ச்சியான அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கி வருகிறது.

இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு www.bellunalanka.lk இணையத்தளத்தைப் பார்வையிடவும்.

Photo caption: ஜப்பானின் Belluna Co. Ltd. நிறுவனத்தின் பணிப்பாளர் Hiroshi Yasuno

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *