இலங்கையின் மிகப்பெரிய விரைவுச் சேவை உணவகச் சங்கிலியான பெரேரா அன்ட் சன்ஸ் (Perera & Sons – P&S), அண்மையில் இடம்பெற்ற மெல்பேர்ன் புதுவருட விழாவில், புதுவருட பண்டிகையை வாடிக்கையாளர்களுடன் இணைந்து கொண்டாடியது. Dandenong Showroom (டான்டினாங் காட்சியறையில்) இடம்பெற்ற இந்த நிகழ்வானது, மெல்பேர்ன் சமூக நிகழ்வுகளில P&S முதன் முறையாக பங்கேற்ற நிகழ்வாகும். அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை சமுகத்தினருடன் தமது பாரம்பரிய சுவைகளை இவ்வர்த்தகநாமம் பகிர்ந்து கொண்டது.

இனிப்பு, காரம் மற்றும் பிரபல பலகாரங்கள் என 20 இற்கும் மேற்பட்ட உணவுப் பொருட்களைக் கொண்ட P&S உணவுக் கூடத்தில், இலங்கையை நினைவூட்டும் பல்வேறு உணவுகள் வழங்கப்பட்டன. இந்த கூடமானது ஒரு பாரிய கூட்டத்தை கவர்ந்ததோடு, பங்கேற்பாளர்களிடமிருந்து அற்புதமான கருத்துகளையும் பெற்று அவர்களது கவனத்தை ஈர்த்தது. அவர்கள் ஒவ்வொரு உணவை சுவைக்கும் போதும் தாம் இலங்கையில் வாழும் உணர்வை பெற்றனர். P&S பணிப்பாளர் அவிஷ்க பெரேரா மற்றும் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

இந்நிகழ்வு தொடர்பில் அவிஷ்க பெரேரா தெரிவிக்கையில்: “மெல்பேர்ன் புதுவருட விழாவில பங்கேற்றமை மனதிற்கு மிக நெகிழ்ச்சியாக இருந்தது. அவுஸ்திரேலியாவில் உள்ள எமது வாடிக்கையாளர்களின் அன்பையும் உற்சாகத்தையும் காண்பது உண்மையிலேயே மனதைத் தொடும் விடயமாக இருந்தது. எமது உணவுக் கூடத்தில் வரிசையாக நின்ற அனைவரையும் காணும்போது, நாம் எதற்காக இந்தச் செயலை செய்கிறோம் என்பதற்கான காரணத்தை எமக்கு நினைவுபடுத்தியது. இலங்கைச் சுவைகளை உலகெங்கும் பரப்பும் ஒரு முயற்சி இதுவாகும். எமது கூட்டாளர்களான Green Asia Pty Ltd நிறுவனத்தின் தொடர்ச்சியான ஆதரவிற்கும், ஒரு துடிப்பான மற்றும் மறக்கமுடியாத நிகழ்வை ஏற்பாடு செய்த அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவன பழைய மாணவர் சங்கத்தினருக்கும் (Sri Lanka German Technical Training Institute Old Boys’ Association of Australia Inc), அவர்களது ஒத்துழைப்புக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்றார்.

இந்த வெற்றிகரமான நிகழ்வு, ‘இலங்கையின் சிறந்த சுவைகளை உலகளவில் உயர்த்துதல்’ என்ற P&S இன் உலகளாவிய நோக்கத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது. 2021ஆம் ஆண்டிலிருந்து, P&S நிறுவனம் அவுஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் இடம்பிடித்ததன் மூலம் பல்வேறு வகையான உற்பத்திகளை ஏற்றுமதி செய்து, இலங்கையின் சிறந்த சுவைகளை உலகளாவிய ரீதியில் பரப்ப முனைந்துள்ளது. இதன் மூலம் கண்டங்கள் கடந்து, சமூகங்களிடையே கலாசாரங்களை கொண்டாட வழியேற்படுத்தியுள்ளது.

இந்த வெற்றிகரமான நிகழ்வில் பெரேரா அன்ட் சன்ஸ் நிறுவனம், பங்கேற்க, அந்நிறுவனத்தின் அவுஸ்திரேலிய வணிக கூட்டாளரான Green Asia Pty Ltd மற்றும் Sri Lanka German Technical Training Institute Old Boys Association of Australia Inc ஆகியோரின் உறுதியான கூட்டாண்மைகள் முக்கிய பங்கு வகித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *