அண்மையில் BMICH இல் நடைபெற்ற 2024 ஜனாதிபதி சுற்றாடல் விருது விழாவில், வாகன சேவை மையப் பிரிவின் கீழ் DIMO வெண்கல விருதை வென்றுள்ளது. ஜனாதிபதி சுற்றாடல் விருது விழாவில் DIMO இந்த விருதைப் பெறுவது இது இரண்டாவது வருடமாகும். இந்த விருது வழங்கும் விழாவில் வாகன சேவை மைய பிரிவுக்கு உயரிய விருதாக வெண்கல விருதே வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த பெறுமதி வாய்ந்த விருது வழங்கும் விழாவில், Mercedes-Benz வாகனங்களுக்கான சேவை வழங்கும் சேவை மையமான DIMO 800, சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பில் அது கொண்டுள்ள சிறந்த அர்ப்பணிப்புக்காக இவ்வாறு அங்கீகரிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது. DIMO 800 மையத்தில் சூரிய மின்கலத் தொகுதிகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதோடு, நீர் விரயத்தைக் குறைப்பதற்காக கழிவு நீர் சுத்திகரிப்பு தொகுதி மற்றும் மழைநீர் சேகரிப்பு தொகுதி ஆகியன நிறுவப்பட்டுள்ளன. அத்துடன், இயற்கையான காற்றோட்டம் மற்றும் ஒளி போன்ற சுற்றுச்சூழல் நட்பு நடைமுறைகளைப் பயன்படுத்தி அதன் கட்டடம் நிறுவப்பட்டுள்ளது. அது மாத்திரமன்றி ISO 14001: 2015 இற்கு அமைய, சுற்றுச்சூழல் முகாமைத்துவ தரச் சான்றிதழையும் இம்மையம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்விருது வழங்கும் நிகழ்வில், சுற்றாடல் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தியினால் வழங்கப்பட்ட இந்த தனித்துவமான வெண்கல விருதை, DIMO நிறுவனத்தின் இணக்க செயற்பாடுகள் தலைவி திருமதி தனுஷா சந்திரசேகர பெற்றுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *