கடந்த 8 தசாப்தங்களாக சுதேஷி கொஹொம்பவின் உற்பத்தியாளரும் சந்தைப்படுத்துனருமான Swadeshi Industrial Works PLC நிறுவனம், Care Trust International (Pvt) Ltd. அதன் தயாரிப்பு மூலம் அதன் சுதேஷி கொஹொம்பவின் புலமைச் சொத்துரிமைகளை மீறியதற்காக பல்வேறு தடை உத்தரவுகளைப் பெற்றுள்ளது. கொழும்பு வர்த்தக உயர் நீதிமன்றம் கடந்த 2024 மே 14ஆம் திகதி இத்தடை உத்தரவை பிறப்பித்தது.

‘சுதேஷி கொஹொம்ப’ வர்த்தக முத்திரையின் பெருமைக்குரிய உரிமையாளராக விளங்கும் சுதேஷி இண்டஸ்ட்ரீஸ், கடந்த எட்டு தசாப்தங்களாக மூலிகை சவர்க்காரம் மற்றும் மூலிகை தனிநபர் பராமரிப்பு பிரிவில் சந்தையில் முன்னணியில் திகழ்கிறது.

Care Trust International (Pvt) Ltd. கொஹொம்ப தொடர்பான அதன் புலமைச் சொத்துரிமைகளை மீறுவதைத் தடுக்கும் வகையில் கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி குறித்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சுதேஷி நிறுவனத்தின் பதிவுசெய்யப்பட்ட ஒரு வர்த்தக முத்திரையாக விளங்கும் ‘கொஹொம்ப’சுதேஷி கொஹொம்ப நிறுவனத்தால் 80 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது இங்கிலாந்தின் Vegetarian Society, UK யின் அங்கீகாரம் பெற்றுள்ளமை மற்றும் தோல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட வயதுவந்தவர்களுக்கான மூலிகை கொண்ட தனிநபர் பராமரிப்பு தயாரிப்பு உள்ளிட்ட, தொழில்துறையில் முந்திக் கொண்டு தனது பெயரில் பல்வேறு முதலாவது சாதனை உரிமை கோரல்களுக்கு உரித்துடையதாக திகழ்கின்றது. இலங்கையிலுள்ள மூலிகையுடனான தனிநபர் பராமரிப்பு பிரிவில் முன்னோடியும் சந்தையின் முன்னணி நிறுவனமுமான Swadeshi Industrial Works PLC நிறுவனம் 1941 இல் கூட்டிணைக்கப்பட்ட, ISO 9001:2015 சான்றளிக்கப்பட்ட நிறுவனமாகும். சுதேஷி அதன் மூலிகை பராமரிப்பு தயாரிப்பு வர்த்தக முத்திரைக்கு பிரபலமாக விளங்குகின்றது. குறிப்பாக சுதேஷி கொஹொம்ப, ராணி சந்தனம், சுதேஷி கொஹொம்ப பேபி ஆகியன பல வருடங்களாக இலங்கையர்களால் அன்புடன் அரவணைக்கப்பட்டு வரும் நம்பிக்கைக்குரிய வர்த்தகநாமங்களாகும். நிறுவனம் 80 ஆண்டுகால வளமான வரலாற்றைக் கொண்டுள்ளதோடு, அது நீண்ட கால நம்பகத்துடன் சிறந்து விளங்குவதன் மூலம் தற்போது உலகளாவிய சந்தையிலும் தனது தடத்தை பதித்துள்ளது. சுதேஷி கொஹொம்ப, மிகவும் விரும்பப்படும் வர்த்தகநாமங்களில் ஒன்று என, 2023 ஆம் ஆண்டில் Brand Finance உடன் இணைந்து, LMD இனால் வழங்கப்பட்ட தனிநபர் பராமரிப்பு தயாரிப்பாக (சவர்க்காரம்) விளங்குகின்றது. அத்துடன் Kantar worldpanel Sri Lanka வின் 2023 அறிக்கையின் படி, சுதேஷி கொஹொம்ப இலங்கையின் முதலாவது இடத்தில் உள்ள மூலிகை சவர்க்கார வர்த்தகநாமமாகும்.

சிறந்த தரமான சருமப் பராமரிப்புப் பொருட்களில் நிபுணத்துவம் பெற்ற இந்நிறுவனம், தோலுக்கு மிருதுவானதும் மென்மையானதுமான இயற்கை மூலிகைப் பொருட்களை மூலப்பொருட்களாகப் பயன்படுத்துகிறது. சுதேஷியின் பிரபலமான வர்த்தகநாமங்களில் சுதேஷி கொஹொம்ப, ராணி சந்தனம், சுதேஷி கொஹொம்ப பேபி, பேர்ல்வைட், லக் பார், சேஃப்ப்ளஸ், பிளக் ஈகிள் பேர்ஃப்யூம், கொஹொம்ப ஹேண்ட் வொஷ், கொஹொம்ப பொடி வொஷ், ஷவர் ஜெல் ஆகியன உள்ளடங்குகின்றன. சுதேஷியின் தயாரிப்புகள் யாவும் 100% சைவத்தை அடிப்படையானது என்பதோடு, அவை விலங்குகளின் கொடுமைகளிலிருந்து விலக்கற்றவையாகும்.

இவ்வழக்கில் Swadeshi Industrial Works PLC சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ரொமேஷ் டி சில்வா, வசந்தகுமார் நைல்ஸ் ஆகியோர் ஆஜராகியிருந்ததோடு, சட்டத்தரணி சனத் விஜேவர்தனவினால் சட்ட உதவி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *