கொழும்பு, இலங்கை, 2024 ஜூன் 25 : Cinnamon Hotels & Resorts ஆனது, ‘The Gathering of Giants’ (ஆசிய யானைகளின் ஒன்றுகூடல்) எனும் மிகச் சிறந்த அறிவூட்டல் வார இறுதி நிகழ்வை எதிர்வரும் 2024 ஓகஸ்ட் 09 முதல் 11 வரை Cinnamon Habarana Complex இல் அறிமுகப்படுத்தி ஆரம்பித்து வைக்கவுள்ளது. ‘யானைகளின் ஒன்றுகூடல்’ எனும் நிகழ்வாக அமையவுள்ள, அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாக இது அமையவுள்ளதோடு, ஒரு கற்றல் அனுபவத்தையும் வழங்கும். இந்த கண்கவர் ஒன்றுகூடலானது, ஒரே இடத்தில் ஆசிய யானைகள் அதிக அளவில் ஒன்று சேரும் இடமாக கருதப்படும், மின்னேரியா தேசிய பூங்காவில் இடம்பெறவுள்ளது. மின்னேரியா குளமானது வறட்சியான காலங்களில் 300 இற்கும் மேற்பட்ட யானைகளை பராமரிக்கிறது.

மின்னேரியா தேசிய பூங்காவிற்கு அருகாமையில் அமைந்துள்ள Cinnamon Habarana Lodge மற்றும் Habarana Village by Cinnamon (ஒன்று சேர்த்து Cinnamon Habarana Complex என அழைக்கப்படுகிறது) இந்த பிரமிக்க வைக்கும் நிகழ்வைக் காண, விருந்தினர்களுக்கு ஒப்பற்ற வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. Cinnamon Hotels & Resorts, Cinnamon Nature Trails, Seylan Bank இணைந்து முன்னெடுக்கும் Gathering of Giants நிகழ்வானது, இந்த இயற்கை அதிசயத்தைப் பொக்கிஷமாகப் பாதுகாத்து, அமைதியான யானை – மனித சகவாழ்வு மற்றும், யானை – மனித மோதல் முகாமைத்துவத்தின் அவசியத்தை வலியுறுத்தும் கொண்டாட்டத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த நிகழ்வின் முக்கியத்துவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட Cinnamon Hotels & Resorts இன் பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரியும், பிரதம செயற்பாட்டு அதிகாரியுமான ஹிஷான் சிங்கவன்ஷ, “The Gathering of Giants ஒன்றுகூடல் நிகழ்வானது, உண்மையான பேணிப் பாதுகாத்தல் மற்றும் நிலைபேறான தன்மைக்கான எமது அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகிறது. Cinnamon Hotels & Resorts ஆகிய நாம், சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும் கல்வி மற்றும் விழிப்புணர்வு ஆகியவற்றின் பலத்தை நம்புகிறோம். Cinnamon Nature Trails உடனான எமது ஒத்துழைப்பின் மூலம்

யானைகளை பாதுகாத்து பேணும் முயற்சிகளில் வெற்றிபெறவும், யானை – மனித இணக்கமான சகவாழ்வின் முக்கியத்துவத்தை மேம்படுத்தவும் முயற்சி செய்கிறோம்.” என்றார்.

இந்த முக்கிய நிகழ்வானது Cinnamon Hotels & Resorts இன் நெறிமுறைகளுடன் முழுமையாக ஒத்திசைவதோடு, ஜூலை முதல் ஒக்டோபர் வரை நடைபெறும் வருடாந்த ஒன்றுகூடலான, சூழவுள்ள வாழ்விடங்களில் இருந்து சிறிய யானை கூட்டங்கள் மின்னேரியா மற்றும் கவுடுல்ல தேசிய பூங்காக்களில் கூடும் நிகழ்வுடன் இணைகிறது. ஏனைய பகுதிகளில் குறைந்து வரும் நீர் மற்றும் உணவு வளங்கள் காரணமாக ஒன்றுகூடும் இந்த யானைகள், நீராடுதல், நீர் அருந்துதல், உணவு உண்ணுதல் மற்றும் துணையை தேடுதல் போன்ற கண்கவர் காட்சிகளை பார்வையிட சந்தர்ப்பமாக அமைகிறது. Lonely Planet இனால் உலகளாவிய ரீதியில் ஆறாவது பாரிய விலங்குகள் ஒன்றுகூடலாக அறியப்பட்டுள்ள இந்நிகழ்வு, BBC மற்றும் CNN மூலம் பெருமையாக கருதப்படும் ஒரு நிகழ்வாகும். இந்த இயற்கை நிகழ்வு பார்வையாளர்களுக்கு ஒரு தனித்துவமான மற்றும் மறக்கமுடியாத அனுபவத்தை வழங்கும்.

இந்நிகழ்வு ஏற்படுத்தவுள்ள தாக்கம் தொடர்பில் குறிப்பிட்ட, Sri Lanka Resorts மற்றும் Cinnamon Bentota Beach பிரதித் தலைவர் ஜொஹான் அஸ்கான், “The Gathering of Giants நிகழ்வானது, நிலைபேறான சுற்றுலாவில் முக்கிய பங்கு வகிக்கும் வகையில், Cinnamon Habarana Complex வளாகத்தின் கவர்ச்சியை அதிகளவில் மேம்படுத்தும். இந்த இயற்கை நிகழ்வை ஊக்குவிப்பதன் மூலம், இலங்கை வழங்குகின்ற தனித்துவமான வனவிலங்கு அனுபவங்கள் மீது நாம் கவனத்தை ஈர்க்கச் செய்வதோடு மட்டுமல்லாமல், எதிர்கால சந்ததியினருக்காக இந்த அனுபவங்களைப் பாதுகாப்பதற்கான எமது அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டுகிறோம்.” என்றார்.

Gathering of Giants நிகழ்வில், வனவிலங்குகள் மற்றும் புலிகள் பாதுகாப்பு தொடர்பில் 48 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னை அர்ப்பணித்து, 39 புத்தகங்களை எழுதி, தேசிய வனவிலங்கு சபை மற்றும் இந்திய பிரதமரின் புலி பணிக்குழு உள்ளிட்ட பல அரசாங்க குழுக்களில் கடமையாற்றி, இத்துறையில் பல்வேறு சேவைகளை ஆற்றிய, இந்தியாவின் புகழ்பெற்ற வனவிலங்குப் பாதுகாப்பாளரும் எழுத்தாளருமான வால்மிக் தாபர் உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் மற்றும் சர்வதேச பேச்சாளர்களின் உரைகளும் இதில் இடம்பெறவுள்ளன. The Gathering of Giants ஒன்றுகூடலில் உரையாற்றவுள்ள ஏனைய முன்னணி

நிபுணர்கள் பட்டியலில் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவரும், அறங்காவலருமான விஞ்ஞானி டாக்டர் பிரிதிவிராஜ் பெர்னாண்டோ, யானைகள் நடவடிக்கை மற்றும் யானை – மனிதமோதல் தணிப்பு திட்டத்திற்கான தேசிய செயற்திட்டத்தின் தலைவரான டாக்டர் சுமித் பிலப்பிட்டிய, இலங்கை உயிர்ப்பல்வகைமை விஞ்ஞானியும் Linnean Medal பதக்கத்தை சமீபத்தில் வென்றவருமான டாக்டர் ரொஹான் பெத்தியாகொட ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

இந்த நிபுணர்கள் யானைகள் கூட்டத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் மற்றும் அதன் இலங்கைக்கான முக்கியத்துவம் பற்றிய நுண்ணறிவுகளை வழங்கவுள்ளனர்.

Cinnamon Hotels & Resorts இன் வனஜீவராசிகள் மற்றும் இயற்கை சார்ந்த சுற்றுலாப் பிரிவான Cinnamon Nature Trails உடன் இணைந்து, செலான் வங்கியின் கூட்டாண்மையுடன் இடம்பெறவுள்ள Gathering of Giants நிகழ்வானது, Cinnamon Hotels & Resorts இன் சூழல் நிலைபேறானதன்மை மற்றும் பாதுகாப்பிற்கான அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. மூலோபாய முயற்சிகள் மற்றும் அறிவூட்டல் முயற்சிகள் மூலம், யானைகள் கூட்டத்தைப் பாதுகாத்து கொண்டாடுவதை Cinnamon Hotels & Resorts நோக்கமாகக் கொண்டுள்ளது. எதிர்கால சந்ததியினருக்கு ஒரு நேசத்துக்குரிய இயற்கை அதிசயமாக இருப்பதை இது உறுதி செய்கிறது.

The Gathering of Giants ஆனது, வெறுமனே ஒரு நிகழ்வு மாத்திரமல்ல, இது இயற்கையின் அழகு மற்றும் அதை பாதுகாப்பதன் முக்கியத்துவத்திற்கான ஒரு சான்றாகும். Cinnamon Habarana Complex இந்த புரட்சிகரமான நிகழ்வுடன் ஒன்றிணைவதன் மூலம், Cinnamon Hotels & Resorts ஆனது தொடர்ச்சியாக நிலைபேறான சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான இலங்கையின் தனித்துவமான வனஜீவராசிகள் பாரம்பரியத்திற்கான உலகளாவிய அங்கீகாரத்தை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது.

ENDS

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *