vivo V30 தொடரானது  2024 ஐரோப்பிய கிண்ண™ தொடக்க விழாவை படம்பிடிக்கும் உத்தியோகபூர்வ ஸ்மார்ட்போனாக விளங்குகின்றது

UEFA ஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஷிப் 2024 (UEFA EURO 2024™) கால்பந்து தொடரானது, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், 2024 ஜூன் 14ஆம் திகதி ஜேர்மனியில் உள்ள மியூனிச் கால்பந்து அரங்கில் ஆரம்பமானது. உலகளாவிய ரீதியில் அதிகம் பார்வையிடப்படும் கால்பந்து போட்டித் தொடர்களில் ஒன்றான இது, ஐரோப்பா முழுவதிலும் உள்ள சிறந்த அணிகளை ஒன்றிணைப்பதன் மூலம், உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான கால்பந்து ரசிகர்களை ஈர்க்கின்றது. 2022 FIFA உலகக் கிண்ணத்தைத் தொடர்ந்து, UEFA EURO 2024™ தொடரின் உத்தியோகபூர்வ பங்காளியாக மீண்டும் vivo சர்வதேச கால்பந்து அரங்கிற்குத் திரும்புகிறது.

UEFA EURO 2024™ தொடரில் பார்வையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதை vivo நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக தொழில் துறையில் முன்னணி வாய்ந்த தொழிநுட்பங்கள், புதிய, முதன்மைவாய்ந்த portrait அம்சங்கள் சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளுக்கான ஒத்துழைப்பில் கொண்டுள்ள அனுபவம் ஆகியவற்றை குறிப்பிடலாம். UEFA EURO 2024™ தொடரின் உத்தியோகபூர்வ பங்காளி எனும் வகையில் vivo V30 தொடரானது, அதன் மேம்பட்ட புகைப்படவியல் திறன்களை இதில் வெளிப்படுத்தும். இதன் மூலம் பயனர்கள் தொழில்முறை தரத்திலான portrait புகைப்படங்களை  எடுக்கவும், மைதானத்திலும் அதற்கு வெளியேயும் உற்சாகமான தருணங்களை புகைப்படம் எடுக்கவும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது.

vivo V30 தொடர்: ஸ்டுடியோ தரத்திலான portrait புகைப்படம் மூலம் போட்டியின் WOW தருணங்களை படம் பிடியுங்கள்

புதிய vivo V30 தொடரானது, புதிய Aura Light Portrait அம்சத்தின் மூலம் Portrait புகைப்படத்தின் தரத்தை மேலும் அதிகரிக்கும், அதே நேரத்தில் மிருதுவான செயற்றிறனையும், பிரகாசமான காட்சியையும் நீண்ட மின்கல ஆயுள் ஆகியவற்றையும் வழங்குகிறது. மேம்படுத்தப்பட்ட அதன் பிரத்தியேகமான தொழில்நுட்ப அம்சமான soft light ஆனது, சூழல் வேறுபாடுகளின் அடிப்படையில் நிற மாற்றத்தை புத்திசாலித்தனமாக அளவீடு செய்வதோடு, தூரத்திற்கு ஏற்ப அதன் பிரகாசத்தை மாற்றியமைக்கிறது. இந்த புத்தாக்க கண்டுபிடிப்பானது, சுற்றுப்புற சூழலுடன் நிற வேறுபாடுகளுக்கு ஏற்ப ஒத்திசைகிறது. சவாலான வெளிச்சம் காணப்படுகின்ற நிலைகளிலும் பிரம்மிக்க வைக்கும் portrait புகைப்படங்களை எடுப்பதை அது உறுதி செய்கிறது.

விளையாட்டு மற்றும் தொழிநுட்பம் இடையேயான ஒத்திசைவு மூலம் மனித நேயத்தின் மகிழ்ச்சியைப் பகிர்தல்

UEFA EURO 2024™ தொடரானது, உலகளாவிய ரீதியில் அங்கீகாரம் பெற்ற ஒரு விளையாட்டு நிகழ்வு மாத்திரமல்லாது, vivo அதன் “The Joy of Humanity” எனும் வர்த்தகநாம செய்தியை உலகளாவிய பார்வையாளர்களுக்கு தெரிவிக்கவும், உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களுடன் ஒன்றிணைய ஒரு பாலமாகவும் அமைகின்றது.

உலகளாவிய ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு மனிதநேயம் மற்றும் விளையாட்டின் உண்மையான உணர்வை வழங்க vivo எப்போதும் உறுதி பூண்டுள்ளது. ஒரு முன்னணி ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான vivo, தொடர்ச்சியான ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்புகள், மூலோபாய கூட்டாண்மை மற்றும் தயாரிப்பு மேம்பாடு ஆகியவற்றின் மூலம் ஸ்மார்ட்போன் புகைப்படவியலின் எல்லைகளைக் கடக்கிறது. vivo V30 தொடரின் இணையற்ற புகைப்படவியல் திறன்களுடன், UEFA EURO 2024™ தொடரில் விளையாட்டின் அழகை சிரமமின்றி படம்பிடிப்பதற்கான அதிக வாய்ப்புகளை கால்பந்து ரசிகர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் பெறுகின்றார்கள்.

vivo Overseas Product Department பொது முகாமையாளர் Yongduan Zhou தெரிவிக்கையில், “UEFA EURO 2024™ தொடர் உடனான எமது கூட்டாண்மையானது, விளையாட்டின் அழகை அனைவரும் ரசிக்கவும் அவர்களுக்கு விருப்பமான நினைவுகளைப் பதிவு செய்வதன் மூலம் பயனர் அனுபவத்தை மேம்படுத்தவும் உதவுகிறது” என்றார். மேலும் இந்த அற்புதமான விளையாட்டு, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை ஒன்றிணைப்பதோடு, V30 தொடர் மூலம், பயனர்களை இந்த மறக்க முடியாத பயணத்தின் கதை சொல்பவர்களாக மாற்றுவதன் மூலம் அவர்களின் ஆர்வத்தைத் தூண்ட விரும்புகிறோம். ஒரு தொடுகை மூலம் ஒவ்வொருவரும் தங்கள் சொந்த அனுபவக் கதைகளை சொல்பவர்களாக மாற முடியும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், ஸ்மார்ட்போன் மூலம் புகைப்படம் எடுப்பதை மேம்படுத்தும் அதிநவீன தொழிநுட்பங்களை நாம் தொடர்ந்தும் உருவாக்குவோம்.” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *