இலங்கையின் முன்னணியில் உள்ள பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமான DIMO நிறுவனத்தின் சுகாதாரப் பிரிவும், இலங்கையில் Simens Healthineers ஐ பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனமுமான DIMO Healthcare, நாட்டின் முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றான Lanka Hospitals இன் தொழில்நுட்ப திறன்களை மேலும் மேம்படுத்தும் வகையில், மிக உயர்ந்த தரத்துடன் நோயறிதலை மேற்கொள்ள உதவும், அதிநவீன Siemens Healthineers Symbia Evo Excel Gamma Camera சாதனத்தை நிறுவியுள்ளது.

Lanka Hospitals இல் நிறுவப்பட்டுள்ள சமீபத்திய Siemens Healthineers Symbia Evo Excel Gamma Camera உபகரண தொகுதியானது, புற்றுநோய் உள்ளிட்ட, மருத்துவ விஞ்ஞானத்தில் சிக்கலான பல்வேறு நோய்களை துல்லியமாக கண்டறிவதிலும், சில புற்றுநோய் மருத்துவ சிகிச்சைகளின் முடிவுகளை வழங்குவதிலும் தனித்துவமான பங்கை வகிக்கிறது. அத்துடன், சிறுநீரகம், நுரையீரல், இதயம், நரம்புகள், உடலின் பல்வேறு உறுப்புகள் தொடர்பான பல்வேறு நோய்களை துல்லியமாக கண்டறிய இந்த இரட்டை உணரல் Gamma கெமரா சிறப்பாக பங்காற்றுகிறது.

Gamma கெமராவில் உள்ள மேம்பட்ட Symbia Evo Excel தொழில்நுட்பமானது, வேகமாகவும் உயர்தரமானதுமான படங்களையும் எடுக்க உதவுகிறது. இது சிறிய தொற்றுநோய்களைக் கூட எளிதாகக் கண்டறிய உதவுவதோடு, ஆரம்பநிலை நோயறிதல் மற்றும் சிகிச்சை தொடர்பான முடிவுகளை எடுக்க மிகவும் உதவியாக உள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த Lanka Hospitals அணு மருத்துவ நிபுணர் சந்திரகுப்த உடுகம, “நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், மருத்துவமனையின் வசதிகளை மேம்படுத்துவதற்கும், சிறந்த நோயாளர் பராமரிப்பை வழங்குவதற்கும், உள்நாட்டு சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் Lanka Hospitals வழங்கும் பங்களிப்பை இது மேலும் வலுப்படுத்தும். அந்த வகையில், நோயாளிகளுக்கு ஒப்பிட முடியாத பராமரிப்பை வழங்குவது தொடர்பிலான எமது பயணத்தை ஆதரிக்கும் சரியான பங்காளியாக, மருத்துவப் பொறியியலில் நிபுணத்துவம் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப அணுகுமுறைகள் கொண்ட DIMO Healthcare நிறுவனத்தை நாம் அடையாளம் கண்டுள்ளோம்.” என்றார்.

DIMO நிறுவனத்தின் பணிப்பாளரும் DIMO Healthcare பிரிவின் பொறுப்பாளருமான விஜித் புஷ்பவெல கருத்துத் தெரிவிக்கையில், “சமூகங்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை வலுவூட்டும் வகையில் செயற்படும் DIMO நிறுவனமானது, புதிய தொழில்நுட்ப முறைகள் மூலம் இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட Lanka Hospitals இன் பயணத்தின் சிறந்த ஒரு பங்காளர் எனும் வகையில் எமக்கு மிகப் பெருமையாக இருக்கிறது. அத்துடன், ஆரோக்கியமான தேசத்தை கட்டியெழுப்புவதற்காக, புத்தம் புதிய தொழில்நுட்பத் தீர்வுகளை அறிமுகப்படுத்துவதில் DIMO Healthcare முன்னணியில் திகழ்கின்றது.” என்றார்.

DIMO Healthcare ஆனது, சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற மருத்துவ பொறியியல் வர்த்தகநாமங்களுடன் பணிபுரிவதில் கொண்டுள்ள நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, தேவையான உதிரிப் பாகங்கள் மற்றும் துணைப் பொருட்களுக்கான 24/7 அணுகல் உள்ளிட்ட, உபகரணங்களின் உகந்த செயற்றிறன் மற்றும் தொடர்ச்சியான நோயாளிகளின் பராமரிப்பை உறுதி செய்வது தொடர்பான விரிவான விற்பனைக்குப் பின்னரான சேவைகள் மற்றும் உதவிகளை வழங்குகிறது.

ஒப்பிட முடியாத விற்பனைக்குப் பின்னரான சேவையுடன் அதிநவீன தொழில்நுட்பங்களை வழங்குவதன் மூலம், DIMO Healthcare நிறுவனம் இலங்கையர்களுக்கு மேம்பட்ட மருத்துவ பராமரிப்பு மற்றும் ஆரம்ப நிலை நோயறிதல் சேவைகளை வழங்கி, இலங்கை சுகாதாரத் துறையை வலுவூட்டுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *