இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையில் வளர்ந்து வரும் நட்சத்திரமான Groundworth Partners, நுணுக்கமான முறையில் தெரிவு செய்யப்பட்ட ரியல் எஸ்டேட் வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் தமது வாடிக்கையாளர்களுக்கு ஒப்பிட முடியாத பெறுமதியை வழங்குகின்ற அத்திவாரத்தில் கட்டமைக்கப்பட்ட ஒரு நிறுவனமாகும்.

உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் பல்வேறு விடயங்களை Groundworth Partners வழங்குகிறது. அவர்களது முழுமையான செயன்முறையானது ஒவ்வொரு வாய்ப்பும் மிக உயர்ந்த தரத்தை பூர்த்தி செய்வதை உறுதி செய்கிறது. முன்னாள் நீதவானின் தலைமையிலான சிரேஷ்ட சட்டக் குழுவினால் சொத்துகளின் அனைத்து ஆவணங்களும் ஆய்வு செய்யப்படுவதன் அடிப்படையில், சட்ட ரீதியான பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கின்ற விடயமும் இதில் அடங்குகின்றது. பாதுகாப்பு மிக முக்கியமானது என்பதால், சிறந்த சுற்றுப்புறங்களில் உள்ள சொத்துகளை அவர்கள் தெரிவு செய்து வழங்குகிறார்கள். இடத்தை இலகுவாக அடையும் வசதி மிகவும் அவசியமாகும் என்பதால், பல்வேறு மூலோபாய ரீதியாக பெறப்பட்ட, சிறப்பான வகையில் வீதிகளுடன் இணைக்கப்பட்டு, எளிதாக அணுகக் கூடிய காணிகளை அவர்கள் வழங்குகின்றனர். வசதி என்பது முக்கிய அம்சம் என்பதால், ஒவ்வொரு Groundworth சொத்தும், அத்தியாவசிய சேவைகள் மற்றும் வசதிகளைக் கொண்ட இடங்களுக்கு அருகில் காணப்படுகின்றன. முக்கியமாக, எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டுள்ள அவர்களது ரியல் எஸ்டேட் நிபுணர்கள் குழுவினர், எந்தவொரு காணியையும் பெறுவதற்கு முன்னர் அதற்கான சாத்தியமான எதிர்கால மதிப்பை கவனமாக ஆய்வு செய்கின்றனர்.

வணிகம், சட்டம், நிதி, கட்டடக்கலை ஆகிய விடயங்களில் விரிவான அனுபவமிக்க நிபுணர்களின் குழுவினால் Groundworth Partners நிறுவனம் வழிநடத்தப்படுகிறது. இந்த நிபுணத்துவம் அவர்களது வாடிக்கையாளர்களுக்கு விரிவான மற்றும் நெறிப்படுத்தப்பட்ட அனுபவத்தை உறுதி செய்கிறது.

Groundworth Partners இன் நிர்வாக பணிப்பாளரும் அதன் இணை நிறுவுனருமான கசுன் ஆந்த்ரஹென்னடி இது பற்றிக் குறிப்பிடுகையில், “நாம் நம்பிக்கையுடன் முதலீடு செய்கின்ற ரியல் எஸ்டேட் வாய்ப்புகளை வழங்குகிறோம். Groundworth ஹிம்புட்டான மற்றும் Groundworth அத்துருகிரிய போன்ற விற்பனை செய்யப்பட்டு நிறைவு செய்யப்பட்ட எமது திட்டங்கள், எமது கடுமையான தெரிவு செய்யும் செயன்முறை மற்றும் தரம் தொட்பான அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு சான்றாக விளங்குகின்றன.” என்றார்.

ரியல் எஸ்டேட் சந்தையில் பயணிப்பதில் உள்ள சிக்கல்களை உணர்ந்துள்ள Groundworth Partners, அதன் செயன்முறைகளை எளிதாக்கும் முயற்சிகளை மேற்கொள்கின்றது. முழு பயணத்திலும் தமது வாடிக்கையாளர்களுக்கு ஆதரவான வகையில் அமைக்கப்பட்ட விரிவான சேவைகளை அவர்கள் வழங்கி வருகிறார்கள். தகவலறிந்த முடிவுகள் எடுக்கப்படுவதை உறுதி செய்வதற்கான நிபுணத்துவ வழிகாட்டல், முதலீடுகளில் உள்ள நிதியை மாற்றுதல் மற்றும் பொருந்திக் கொள்ளல், விற்பனைக்குப் பின்னரான பராமரிப்பு முகாமைத்துவம், ஹட்டன் நெஷனல் வங்கியுடன் கூட்டுச் சேர்ந்து கவர்ச்சிகரமான வீட்டுக் கடன் தெரிவுகளுக்கான அணுகல் பற்றிய ஆலோசனை சேவைகள். விருது பெற்ற கட்டடக் கலைஞர்களைக் கொண்ட Studio Hexar உடனான கூட்டுறவானது, தாங்கள் கொள்வனவு செய்த காணியில் வீடு அல்லது கட்டடமொன்றை கட்ட ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களுக்கு மேலதிக சேவையாக, ஒப்பிட முடியாத கட்டட வடிவமைப்பு மற்றும் சேவைத் தளத்தை உருவாக்குதவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துகிறது.

இலங்கையில் ரியல் எஸ்டேட் முதலீட்டுத் துறையில் மாற்றத்தை ஏற்படுத்த Groundworth Partners தயாராக உள்ளது. உரிய முறையிலான தெரிவு, வாடிக்கையாளர் அனுபவம், தரம் தொடர்பான அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், நம்பிக்கை மற்றும் ஒப்பிட முடியாத மதிப்பை உருவாக்குதவற்கான நற்பெயரை அவர்கள் கொண்டுள்ளார்கள்.

மேலதிக தகவலுக்கு தொடர்பு கொள்ளவும்:

Groundworth Partners,
12ஆம் மாடி, MAGA ONE, 200, நாவல வீதி,
நாரஹென்பிட்டி, கொழும்பு 05, இலங்கை
+94 77 050 6506
[email protected]
https://www.groundworthpartners.com/

END

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *