இலங்கையின் பரபரப்பான தலைநகரின் மையப்பகுதியில் உள்ள ஜப்பானியருக்கு சொந்தமான ஹோட்டலான Granbell Hotel Colombo, சமீபத்தில் அதன் முதலாவது வருட நிறைவு விழாவை சிறப்பாக கொண்டாடியது. இந்த மைல்கல்லை ஒரு பிரமாண்டமான செய்தியாளர் சந்திப்பின் மூலம் ஹோட்டல் நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்நிகழ்வானது, ஊடகவியலாளர்கள் மற்றும் தொழில்துறையில் உள்ள பிரபலங்களின் கவனத்தை ஈர்த்தது. ஹோட்டல் நிர்வாகம் அவர்களின் வெற்றிகரமான பயணத்தைப் பற்றிய விடயங்களைப் பகிர்ந்து கொண்டது. அவர்களது மிகத் திறமையான குழுவின் அர்ப்பணிப்பு மற்றும் ஒவ்வொரு விருந்தினருக்கும் மறக்க முடியாத அனுபவங்களை வழங்குவது தொடர்பில் ஹோட்டல் கொண்டுள்ள அர்ப்பணிப்பை ஆகியன இதன்போது எடுத்துக் கூறப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் தங்களது விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேகமான இரவொன்றை கழிப்பதற்கான, அவர்களது தி ஆல் டே டைனிங் ரெஸ்டாரண்டில் (The All Day Dining Restaurant) இரவு உணவு மற்றும் தி பார் ஒன் தி டொப்பில் (The Bar On the Top) விசேட பொழுதுபோக்கு உள்ளிட்ட அற்புதமான பரிசுகளை சமூக ஊடக பக்கம் ஊடாக ஹோட்டல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Granbell Hotel Colombo வின் ஆண்டு விழாவில், Belluna Co. Ltd நிறுவனத்தின் தலைவர் Kiyoshi Yasuno, பணிப்பாளர் Hiroshi Yasuno ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். Belluna Japan பணிப்பாளர் Junko Kato, Belluna Lanka பங்குதாரரான நிஷாந்த பெரேரா, SLITHM தலைவர் ஷிரந்த பீரிஸ் உள்ளிட்ட மதிப்பிற்குரிய அதிதிகள் மற்றும் பிரமுகர்களும் இதில் கலந்து கொண்டனர்.

பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், Granbell Hotel Colombo ஆனது, அவை அனைதையும் தாண்டி 2022 ஏப்ரலில் அதன் கதவுகளைத் திறந்தது. நவம்பர் முதல் 40% இற்கும் அதிக தங்குமிட வசதியை ஹோட்டல் பேணி வந்தது. இதற்காக இலங்கை அரசாங்கம், இலங்கை சுற்றுலா, பயண முகவர்கள், கூட்டாளர்கள், மற்றும் வெளிநாட்டு சுற்றுலா முகவர்கள், பெருநிறுவனங்கள் வழங்கிய பாரிய ஆதரவிற்கு ஹோட்டல் நிர்வாகம் நன்றி தெரிவித்துள்ளது. Granbell Hotel Colombo ஆனது, டில்லியில் இடம்பெற்ற SATTE 2023 சுற்றுலா கண்காட்சியிலும் துபாயில் இடம்பெற்ற Arab Travel Mart இலும் பங்கேற்றது. அங்கு அதன் உலகத் தரம் வாய்ந்த வசதிகள் மற்றும் எல்லையற்ற சேவைகளை அது காட்சிப்படுத்தியிருந்தது. இலங்கையின் சுற்றுலாத் துறையை மேலும் மேம்படுத்தும் வகையில் எதிர்வரும் வருடத்தில் World Travel Mart உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா கண்காட்சிகளிலும் கலந்துகொள்ள ஹோட்டல் எதிர்பார்த்துள்ளது.

ஹோட்டலானது 4 வகைகளின் அடிப்படையில் 292 அறைகளைக் கொண்டுள்ளதோடு, அவற்றில் அரைவாசி அறைகள் கண்களைக் கவரும் கடல் காட்சிகளை கொண்டுள்ளன. Granbell Hotel Colombo ஆனது, கடற்கரை தோற்ற தங்குமிடத்தை தேடுபவர்களுக்கான சரியான இடமாகும். விருந்தினர்கள், இந்து சமுத்திரத்தை பார்த்தவாறு, மிக உயர்ந்த வகை அறையில், மொட்டை மாடிகளில் கடல் காட்சியை பார்த்தவாறு, குளியல் தொட்டியில் நீராடலாம். மிக முக்கியமாக மொட்டைமாடியுடன் இணைந்த முடிவிடமற்ற நீச்சல் தடாகம் மற்றும் பார் ஆகியன நகர காட்சியையும் கடலின் அற்புதமான காட்சிகளையும் காண வழி வகுக்கின்ற அதே சமயம், ஜப்பானிய உணவகம் Tempura மற்றும் Teppanyaki ஆகிய உணவு வகைகள் மூலம் உங்கள் நாவுக்கு சுவையூட்டுகிறது.

ஆடம்பரமான தங்குமிடங்கள் மற்றும் உலகத் தரம் வாய்ந்த உணவுத் தெரிவுகளுக்கு மேலதிகமாக, Granbell Hotel Colombo ஆனது, விருந்தினர் மண்டபம், கூட்ட மண்டபம், மாநாட்டு அறை உள்ளிட்ட பெருநிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அவசியமான வசதிகளையும் வழங்குகிறது. ஹோட்டல் நகரின் ஒரு மையப் பகுதியில் அமைந்துள்ளதால், கொழும்பிலுள்ள வணிகங்களையும், பொழுதுபோக்கு மற்றும் ஷொப்பிங் அனுபவங்களுக்கு எளிதான அணுகலை வழங்குகிறது. இதன் மூலம் வணிக பிரிவினருக்கும் ஓய்வைக் கழிக்கும்  பயணிகளுக்கும் ஏற்ற இடமாக இது அமைகிறது.

ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையேயான 70 ஆண்டுகளுக்கும் மேலான இரு தரப்பு உறவுகளை மையப்படுத்திய Granbell Hotel Colombo ஸ்தாபிப்பு ஆனது, விசேட முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த உறவுகளை வலுப்படுத்துவதிலும் கலாசார பரிமாற்றத்தை மேம்படுத்துவதிலும் ஹோட்டல் கவனம் செலுத்துகிறது. https://granbellhotel.lk/ இணையத்தளம் அல்லது 011 2 397 397 எனும் இலக்கத்தைத் தொடர்பு கொள்வதன் மூலம் ஹோட்டலில் தங்குவதற்கான முன்பதிவை மேற்கொள்ளலாம். இதன் மூலம் உலகெங்கிலும் உள்ள பயணிகளுக்கு சிறந்த இடமாக விளங்கும் வகையில், Granbell Hotel Colombo கொண்டுள்ள ஆடம்பரத்தையும் விருந்தோம்பலையும் நீங்கள் அனுபவிக்கலாம்.

Le Grand Galle ஹோட்டலின் உரிமையாளரான Belluna, எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் அதன் ஐந்தாவது வருட நிறைவு விழாவை கொண்டாட எதிர்பார்த்துள்ளார். வரலாற்று சிறப்புமிக்க காலி கோட்டை மற்றும் வசீகரிக்கும் கடற்கரையில் இருந்து ஐந்து நிமிட தூரத்தில் அழகாக அமைந்திருக்கும் Le Grand ஆனது, தாராளமான சதுர மீற்றர் இடைவெளி கொண்ட அறைகள் முதல் விசாலமான அறைகள் வரை வழங்குகிறது. Jacuzzi மற்றும் Plunge Pool அறைகள் உள்ளிட்ட வசதிகள் கொண்ட அதன் 57 நேர்த்தியான அறைகளுக்குள் மறைந்திருக்கும் பொக்கிஷங்கள் ஏராளமாகும். அதன் ஒப்பற்ற அமைவிடமானது, யுனெஸ்கோவின் பாரம்பரிய தளமான காலி கோட்டைக்கு இடையில் மிக அருகே தங்க விரும்புகின்ற, மகிழ்ச்சியான இடங்களைத் தேடும் பயணிகளுக்கும் குடும்பங்களுக்கும் சரியான தங்குமிடமாக அமைகிறது. ஹோட்டலின் கடல் உணவு உணவகத்தில் மகிழ்ச்சி காத்திருப்பதோடு, அதில் ஆச்சரியமூட்டும் சுவைகள் உங்கள் உணவுகளில் நடனமாடும். பூல் பார் ஆனது அமைதியான பின்னணியில் புத்துணர்ச்சியூட்டும் பானங்களை அனுபவிக்க விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கிறது. அமைதியின் சரணாலயமான ஆனந்தமான Balinese Spa வில் ஓய்வெடுத்து புத்துணர்ச்சி பெற முடியும். Le Grand Galle ஆனது, வசீகரிக்கும் திருமணங்களுக்கும், காதல் ரசம் சொட்டும் தேனிலவுக்கும் ஏற்ற இடமாகவும் விளங்குகின்றது. இதில் தங்குவதற்கான முன்பதிவுகளுக்கு https://www.legrandgalle.lk/ எனும் இணையத்தளம் அல்லது 091 2 228 555 எனும் இலக்கம் ஊடாக தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *