நிலைபேறான உணவு முறைகள் மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகளின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் உலகளாவிய வருடாந்த ‘சோயா மாதம்’ கொண்டாட்டம்

புரதம் தொடர்பான அர்ப்பணிப்புள்ள விழிப்புணர்வு முயற்சி அமைப்பான, ‘Right To Protein’ ஆனது, ஏப்ரல் மாதத்தில் ‘சோயா மாதத்தை’ (‘Soy Month‘) கொண்டாடுகிறது. நிலைபேறான உணவு முறைகள் மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகரிப்பதில் சோயா அவரை வகிக்கும் பங்கை முன்னிலைப்படுத்துவதில் கவனம் செலுத்துவதன் மூலம், சோயா மற்றும் சோயா அடிப்படையிலான உணவுகள்,  பண்ணை உற்பத்திகள் மற்றும் நீர்வாழ் சோயா-உணவூட்டப்பட்ட விலங்கு மூலங்களின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வையும் புரிதலையும் அதிகரிப்பதில் பங்கேற்குமாறு அனைத்து பங்குதாரர்களுக்கும் இத்திட்டம் அழைப்பு விடுக்கிறது.

புரதக் குறைபாடு இலங்கையில் ஒரு முக்கிய பிரச்சினையாக உள்ளது. உணவு மற்றும் போசணை தொடர்பில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், ஐந்து வயதுக்குட்பட்ட இலங்கை குழந்தைகளில் சுமார் 27% ஆனோர், புரதக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, இக்குழந்தைகளிடையே வளர்ச்சி குன்றுதல் போன்ற உடல்நலப் பிரச்சினைகளுக்கு அது வழிவகுக்கின்றது. சோயா அடிப்படையிலான உணவு மூலாதாரங்கள், உயர்தர, தாவர அடிப்படையிலான புரத மூலத்தை வழங்குவதன் மூலம் இந்த சிக்கல்கள் தீர்க்கப்படுகின்றன. மக்கள் தொகைக்கேற்ப புரத நிலையை மேம்படுத்துவதற்கும் போசணை பாதுகாப்பை அடைவதற்கும் மிக முக்கியமாக காணப்படுவது, உணவு புத்தாக்கம் மற்றும் அது தொடர்பில் மக்களுக்கான விழிப்புணர்வை ஊக்குவிப்பதாகும்.

சோயா அவரை ஒரு பல்அம்ச, ஊட்டச்சத்து நிறைந்த பருப்பு வகையாகும். இது பல்வேறு வகையான ஆரோக்கியம் சார்ந்த நன்மைகளைக் கொண்டுள்ளது. அனைத்து வகையான, அதவாது ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்களையும் கொண்ட தாவர அடிப்படையிலான புரதத்தின் ஒரே மூலாதாரமாக சோயா உணவுகள் காணப்படுகின்றன. அவை சைவ உணவு உண்பவர்களுக்கும் அசைவ உணவு உண்பவர்களுக்கும் சிறந்த தெரிவாக அமைகின்றன. 2023 ஏப்ரல் மாதத்தில் சோயா மாதத்தைக் கொண்டாடுவதன் மூலம், சோயா அவரை ஆராய்ச்சி மற்றும் அதன் மேம்பாட்டை ஊக்குவிக்கவும், நேபாளத்தில் உள்ள அதனை பயிரிடும் விவசாயிகளுக்கு அதிக வாய்ப்புகளும் ஏற்படுத்தப்படுகின்றன. இது மிக நிலைபேறான, சமநிலையான மற்றும் ஆரோக்கியமான உணவு முறையை உருவாக்க உதவும். எனவே இத்தொழில்துறையில் உள்ளவர்கள் இத்திட்டத்துடன் கைகோர்க்க வேண்டும்.

மேலும், மனிதர்கள் உட்கொள்ளும் இறைச்சி, கோழி, கடல் உணவுகளின் தரம் போன்ற விலங்கு சார்ந்த பொருட்களில் புரத உள்ளடக்கத்தை அதிகரிக்க சோயா ஒரு விலங்குத் தீவனமாக பயன்படுத்தப்படுகிறது. சோயாவை அடிப்படையாகக் கொண்ட தீவனத்தை ஊக்குவிப்பதற்கான உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, விலங்குகள் சார்ந்த பொதி செய்யப்பட்ட புரதப் பொருட்களுக்கான ‘சோயா-உணவு வழங்கப்பட்ட உற்பத்தி’ எனும் லேபலை ஒட்டுவதனை பின்பற்றுமாறு முன்னணி பண்ணை உற்பத்தியாளர்களை நாம் ஊக்குவிக்கிறோம். புரதம் நிறைந்த கால்நடைப் பொருட்களை நுகர்வோர் கண்டறிய இது உதவுகிறது. இத்தொழில்துறையானது, கால்நடைத் தீவனத்தில் தரமான புரத ஆதாரமாக சோயாவை அங்கீகரிப்பதையும் இது ஆதரிக்கிறது.

மக்களின் புரதத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் போசணை பாதுகாப்பை அடைவதற்கும் உதவுவதற்கான ஆற்றல் சோயாவுக்கு உள்ளது. உதாரணமாக, சோயா எண்ணெயானது, பல்வேறு மலிவு விலை காய்கறி எண்ணெய்களை விட ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது. அதே நேரத்தில் சோயா உணவுகள் அனைத்து ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்களையும் கொண்ட தாவர அடிப்படையிலான புரதத்தை வழங்குகின்றன. சோயா தீவனமானது, விலங்கு புரத மூலங்களின் புரத உள்ளடக்கத்தை மேலும் வளப்படுத்துகிறது. ஏப்ரல் மாதத்தில் சோயா மாதம் கொண்டாடப்படுவதன் மூலம், பல வடிவங்களில் உள்ள சோயாவின் நன்மைகளைப் பற்றி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட அனைவருக்கும் மேலும் விழிப்புணர்வு ஊட்டப்படுவதோடு, இது தொடர்பில் நிலவும் கட்டுக்கதைகளை அகற்றி, உணவில் புரத நுகர்வு மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்கான அதன் திறனை முன்னிலைப்படுத்தும். அத்துடன் நிலைபேறான விவசாயம் மற்றும் உணவு உற்பத்தியில் சோயாவின் பங்கை ஊக்குவித்தல் மற்றும் இந்த சத்தான உணவுகளை அதிக அளவில் உட்கொள்வதை ஊக்குவித்தல், விவசாயிகள் மற்றும் நுகர்வோர் ஆகிய இரு பிரிவினருக்கும் பயனளிக்கும் நிலைபேறான விவசாய நடைமுறைகளை மேம்படுத்துவதையும் சோயா மாதம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Right To Protein’ பற்றி:

‘Right To Protein’ ஆனது, ஒரு பொதுச் சுகாதார முன்முயற்சியாகும். இது உணவில் புரதத்தின் முக்கியத்துவம் மற்றும் போதியளவான, கட்டுப்படியான மற்றும் உயர்தர புரதத்தை அணுகுவதற்கான ஒவ்வொரு நபரின் உரிமையையும் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சிறந்த ஆரோக்கியத்தை ஆதரிப்பதிலும், போசணைக் குறைபாட்டைக் குறைப்பதிலும், நிலைபேறான வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் புரதத்தின் பங்கை இப்பிரசாரம் வலியுறுத்துகிறது.

‘Right To Protein’ பிரசாரமானது புரதத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய பொதுவான புரிதலை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதோடு, அரசாங்கங்கள், வணிகங்கள் உள்ளிட்ட ஏனைய நிறுவனங்கள் தங்களது கொள்கைகள் மற்றும் நடைமுறைகளில் புரத உற்பத்தி, விநியோகம், நுகர்வுக்கு முன்னுரிமை அளிப்பதை ஊக்குவிக்கிறது. இது நிலைபேறான விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு நடைமுறைகளை ஊக்குவித்தல், புரத விஞ்ஞானத் துறையில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியை ஆதரித்தல் மற்றும் பல்வேறு கட்டுப்படியான மற்றும் சத்தான புரத மூலங்களை மக்கள் அணுகுவதை உறுதி செய்தல் ஆகியன இதில் உள்ளடங்குகின்றன. இந்த பிரசாரமானது, குறிப்பாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில், ஒரு குறிப்பிடத்தக்க பொதுச் சுகாதார பிரச்சினையாக காணப்படும், புரதக் குறைபாட்டின் உலகளாவிய சுமை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. ‘Right To Protein’ முயற்சியை ஊக்குவிப்பதன் மூலம், போசணை பாதுகாப்பை மேம்படுத்தி, சுகாதார ரீதியான இறுதி முடிவுகளை மேம்படுத்துதல், வறுமை மற்றும் பட்டினியை குறைத்தல், நிலைபேறான வளர்ச்சிக்கு ஆதரவளித்தன் ஆகியன  இதன் நோக்கங்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *