இலங்கையின் முன்னணி குழந்தை பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி செரமி (Baby Cheramy), பல தசாப்தங்களாக இலங்கையிலுள்ள மில்லியன் கணக்கான பெற்றோர்களின் நம்பிக்கையை வென்று அவர்களால் நேசிக்கப்பட்டு வரும் ஒரு வர்த்தகநாமமாகும். பெற்றோர் தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் சுகவாழ்வை, பேபி செரமியின் மென்மையான தயாரிப்புகளின் பராமரிப்பில் ஒப்படைத்துள்ளனர். இதுவே குழந்தை பராமரிப்பு பிரிவில் இவ்வர்த்தகநாமத்தை முன்னணியில் திகழ வழிவகுத்துள்ளது. Kantar Sri Lanka வினால் மேற்கொள்ளப்பட்ட வீட்டுப் பாவனை பொருட்கள் தொடர்பான ஆய்வின் அடிப்படையில், பேபி செரமி இலங்கையின் நம்பர் 1 குழந்தை பராமரிப்பு வர்த்தகநாமமாக தெரிவாகியுள்ளதோடு, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் குழந்தை பராமரிப்பு பிரிவில் சந்தையில் முதலிடத்தில் உள்ளது. அத்துடன் LMD சஞ்சிகையினால் ‘Most Loved Baby Care’ (மிகவும் விரும்பப்படும் குழந்தைப் பராமரிப்பு) வர்த்தகநாமம் என பெயரிடப்பட்டுள்ள இது, மிகப்பெரிய சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது என்பதற்கு அப்பால், இலங்கையிலுள்ள பெற்றோரின் இதயங்களை கொள்ளையடிக்க முடிந்துள்ளது என்பதை நிரூபிக்கிறது.

2020 ஆம் ஆண்டு முதல், நாட்டின் பாதுகாப்பான குழந்தை பராமரிப்பு வர்த்தகநாமமாக மாற்றம் பெறும் முயற்சியின் மூலம், ‘எமது குழந்தைகளுக்கு பாதுகாப்பான உலகத்தை உருவாக்குதல்’ எனும் இலட்சியம் மற்றும் பாரிய நோக்கத்தின் மூலம் வர்த்தகநாமம் அதன் நோக்கத்தை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. இந்நோக்கத்தின் ஒரு அங்கமாக, பேபி செரமி அதன் பாதுகாப்புத் தரங்களை மேலும் மேம்படுத்தி, அதன் அனைத்து தயாரிப்புகளின் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் வகையில், Baby Cheramy Safety Institute இனால் மேற்பார்வையிடப்படும் 8 படிகளைக் கொண்ட பாதுகாப்புச் செயன்முறையை நடைமுறைப்படுத்தியுள்ளது. நுகர்வோர் தேவைகளை அடையாளம் கண்டு, அவர்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களை பூர்த்தி செய்யும் தயாரிப்புகளை உருவாக்குவது எனும் விடயமும் இதில் அடங்குகின்றது. உதாரணமாக, இயற்கையான மற்றும் மூலிகைப் பொருட்களை பெற, ஆயுர்வேத மற்றும் சுதேச வைத்திய நிபுணர்களின் ஒத்துழைப்புடன் அது தொடர்பான பொருட்கள் அடையாளம் காணப்படுகின்றன; அத்துடன் உற்பத்தி கலவைகள் மற்றும் மூலப்பொருட்களை தெரிவு செய்வதற்காக, மூலப்பொருள் மற்றும் கலவை உருவாக்கும் நிபுணர்களை பேபி செரமி தொடர்பு கொள்கிறது; வாசனைத் திரவியங்களுக்காக, உலகின் சிறந்த நறுமண உற்பத்தியாளர்களை நிறுவனம் அணுகுகின்றது. அத்துடன், பாதுகாப்பு மதிப்பீடுகளில் கவனம் செலுத்துவதற்காக, உலகத் தரம் வாய்ந்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களிடம் நிறுவனம் கலந்தாலோசிக்கிறது. இங்கு சர்வதேச மருத்துவ ஆய்வுகள் மூலம் தயாரிப்புகள் ‘குழந்தைக்கு பாதுகாப்பானவை’ என சிறந்த குழந்தை மருத்துவர்கள் மற்றும் தோல் மருத்துவ நிபுணர்களின் குழுவினால் உறுதிப்படுத்தப்படுகின்றன.

மூன்று தூண்களை அடிப்படையாகக் கொண்டு, குழந்தைகளுக்கான பாதுகாப்பான உலகத்தை உருவாக்குவதற்கான உறுதிமொழியை பேபி செரமி வர்த்தகநாமம் உறுதிபூண்டுள்ளது. குழந்தைகளுக்கு பாதுகாப்பான, சிறந்த குழந்தை பராமரிப்பு பொருட்களை தயாரித்து வழங்குவதே அதன் முதலாவது தூணாகும். இரண்டாவது தூண், இலங்கையில் குழந்தை பராமரிப்பு துறையில் பாதுகாப்புத் தரங்களை அமைப்பதாகும். மூன்றாவதும் இறுதியுமான தூண், புதிதாக பெற்றோராக காலடி எடுத்து வைப்பவர்களுக்கு குழந்தைகளுக்கு பாதுகாப்பான உலகத்தை உருவாக்குவதற்காக, விழிப்புணர்வை வளங்குவதும், அது தொடர்பான அறிவை மேம்படுத்துவதும் ஆகும். பேபி செரமி, ‘தருபெட்டியாட்ட சுரக்ஷித லொவெக்’ (குழந்தைச் செல்வத்திற்கு பாதுகாப்பான உலகம்) எனும் தலைப்பின் கீழ் பெற்றோர் கிளினிக் நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் இவ்விடயத்தை நிறுவனம் மேற்கொள்கிறது. இதன் மூலம் உள்ளீர்க்கப்பட்ட பெற்றோர்த்துவம், ஆரம்ப குழந்தைப் பருவ வளர்ச்சி மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான உலகத்தை உருவாக்குவது பற்றிய விழிப்புணர்வை பேபி செரமி பரப்புகிறது.

நம்பர் 1 பாதுகாப்பான குழந்தை பராமரிப்பு வர்த்தகநாமமாக இருப்பதற்கான அதன் முயற்சியில், பேபி செரமி தனது தயாரிப்புகள் சோதனை செய்யப்பட்டவை என வெறுமனே கூறாமல், தனது தயாரிப்புகளின் பாதுகாப்பை பெற்றோரிடம் உறுதியளிக்கிறது. அந்த வகையில் அனைத்து விடயங்களிலும் குழந்தையின் பாதுகாப்பை முதன்மைப்படுத்தும் சூழலை உருவாக்கி, குழந்தை பராமரிப்புக்கான பாதுகாப்பான இறுதி தயாரிப்புகளை வழங்குவதில் வர்த்தகநாமம் பெருமிதம் கொள்கிறது. அந்த வகையில் தெளிவான மற்றும் வெளிப்படையான உயர் தரத்திலான தரநிலைகள் மற்றும் செயன்முறைகள் காரணமாக, தங்கள் குழந்தைகள் பாதுகாப்பாகவும், சிறந்த பராமரிப்புடனும் இருப்பதை பெற்றோர்களால் உறுதி செய்ய முடியும்.

ENDS

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *