பேபி சோப், கிறீம், கொலோன், பவுடர், ஷம்பு, ஒயில், கிட்ஸ் கொலோன்

புதிய மூலிகைப் பொருட்கள், புதிய வாசனைத் திரவியங்கள், புதிய பொதியுடன் நாட்டின் முதற் தர மூலிகை குழந்தை பராமரிப்பு வர்த்தகநாமம் மேலும் உச்சத்தை நோக்கி

இலங்கையின் முதற் தர மூலிகைக் குழந்தை பராமரிப்பு வர்த்தக நாமமான, சுதேஷி “Khomba Baby Soap” (கொஹொம்ப பேபி சோப்), புதிய மூலிகைப் பொருட்கள் மற்றும் புதிய இனிமையான வாசனைத் திரவியங்களுடன் மேலும் பல தயாரிப்பு வகைகளுடன் மீள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தேங்காய்ப் பால், கற்றாழை, ஒலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய், மரமஞ்சள், தேன், ஆனைக்கொய்யா, இக்சோரா மலர் ஆகியவற்றின் சேர்க்கையுடன் பிரதானமாக வேம்பு (கொஹொம்ப) சார்ந்த தயாரிப்புகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளன. அவை அந்தந்த சந்தைப் பிரிவுகளில் அதன் தனித்துவத்தை பேணி வருவதாக, கொஹொம்ப பேபி – குழந்தைகளின் தனிப்பட்ட பராமரிப்பு உற்பத்தியாளரான Swadeshi Industrial Works PLC தெரிவிக்கின்றது.

பேபி சோப், பேபி கொலோன், பேபி கிறீம், பேபி பவுடர், பேபி ஷம்பு, பேபி ஒயில், கிட்ஸ் கொலோன், பேபி கிஃப்ட் பெக் ஆகியவற்றை உள்ளடக்கிய கொஹொம்ப குழந்தை பராமரிப்பு தயாரிப்புகள் (Khomba Baby Range), உள்நாட்டிலுள்ள மூலிகைப் பொருட்கள் அடங்கியுள்ளது. அத்துடன் அவ்வாறு அடங்கிய உள்நாட்டில் உள்ள ஒரேயொரு தயாரிப்பு சுதேஷி கொஹொம்ப பேபி ஆகும். சுதேஷியின் உற்பத்திகள் யாவும் வளர்ந்து வரும் சந்தைப் பிரிவில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. அவை தினந்தோறும் சிறந்த ஆரோக்கியம், சுகாதாரம், பாதுகாப்பு, சருமத்தில் மென்மையான தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் இயற்கைக்கு உகந்த தயாரிப்புகளைத் தேடுபவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுதேசி ஆகிய நாம், 1941ஆம் ஆண்டு முதல் சருமத்திற்கு உகந்த மென்மையான மூலிகை சவர்க்காரங்களை தயாரித்து வருகிறோம் என்பதுடன், எமது நுகர்வோருக்கு மேலும் மதிப்பை ஏற்படுத்தும் வகையில் தேங்காய்ப் பால், மரமஞ்சள், ஆனைக்கொய்யா, போன்ற இயற்கையின் சிறந்த மூலிகைப் பொருட்களுடன் கொஹொம்ப பேபி வர்த்தகநாமத்தை மீள அறிமுகப்படுத்தியுள்ளோம்.

Khomba Baby Soap (கொஹொம்ப பேபி சோப்) ஆனது, வேம்பு (கொஹொம்ப), தேங்காய்ப் பால், கற்றாழை, மரமஞ்சள், ஆனைக்கொய்யா, மரமஞ்சள் போன்ற இயற்கையின் சிறந்த அருட்கொடைகளை கொஹொம்ப பேபி கொண்டுள்ளது. இவை சருமத்தை தூய்மைப்படுத்தவும், ஈரப்பதனை பேணவும், மென்மையான மற்றும் குழந்தையின் லேசான தோலை பாதுகாக்கவும் பயன்படுத்தப்படுகின்றது. கொஹொம்பா பேபி சவர்க்காரம் சருமத்தில் ஈரப்பதத்தைப் பாதுகாப்பதோடு, மென்மையான மற்றும் குணப்படுத்தும் தன்மை கொண்டது.

புதிய Khomba Baby Milk Soap ஆனது, வேம்பு (கொஹம்ப) உடன் தேங்காய்ப் பால் மற்றும் கற்றாழை ஆகியவற்றை உள்ளடக்கியுளளது. Khomba Baby Venivel Soap ஆனது, வேம்பு (கொஹம்ப) உடன் மரமஞ்சள், தேன், பாதாம் எண்ணெய் சேர்க்கப்பட்டது. Khomba Baby Avocado Soap ஆனது, வேம்பு (கொஹம்ப) உடன் ஆனைக்கொய்யா மற்றும் ஒலிவ் எண்ணெய் சேர்க்கப்பட்டது. Khomba Baby Rathmal Soap ஆனது, வேம்பு (கொஹம்ப) உடன் மரமஞ்சள் மற்றும் ஒலிவ் எண்ணெய் சேர்க்கப்பட்டது. இந்த சவர்க்காம் வெள்ளை, சார்ந்த வெள்ளை, இளஞ்சிவப்பு, பச்சை ஆகிய ஐந்து வண்ணங்களில், புதிய கவர்ச்சிகரமான பொதியில் கிடைக்கிறது.

வேம்பு (கொஹம்ப), குழந்தையின் சருமத்தை கிருமிகளிலிருந்து இயற்கையாக பாதுகாக்கிறது. தேங்காய்ப் பால், சருமத்தில் ஈரப்பதனை பேணி மென்மையாகவும் மிருதுவாகவும் வைக்கிறது. பேபி சோப்பில் தேங்காய் கிறீம் பயன்படுத்துவதன் மூலம் வெறுமனே ஈரப்பதன் என்பதையும் தாண்டிய நிலை பேணப்படுகின்றது. தேங்காய்ப் பால் கிறீம் தோலில் வரட்சி, அரிப்பு, வீக்கம், சிவத்தல் ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவதுடன், சருமத்திற்கு ஆறுதலளிக்கிறது. அத்துடன் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான, சருமத்தை பேண உதவுகிறது. பண்டைய காலங்களில் இலங்கைத் தாய்மார் பல நூற்றாண்டுகளாக குழந்தைகளை பால் குளியலில் ஈடுபடுத்தியுள்ளனர் என்பது சான்றாகும்.

கற்றாழை, சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்கிறது. இக்சோரா மலர் குழந்தையின் சருமத்தை மென்மையாகவும் குளிர்ச்சியாகவும் வைத்திருக்கும். ஒலிவ் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெயில் உள்ள இயற்கையான விற்றமின் E, குழந்தையின் தோலுக்கு போசணையை அளிக்கிறது. தேன், குழந்தையின் சருமத்தை பக்டீரியா/ பங்கசுக்களின் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது. ஆனைக்கொய்யா, குழந்தையின் சருமத்திற்கு ஈரப்பதனை வழங்குவதுடன் போசணையையும் அளிக்கிறது. மரமஞ்சள், கிருமி நீக்கம் செய்து குழந்தையின் சருமத்திற்கு ஆறுதலளிக்கிறது.

கொஹொம்ப பேபி சோப் ஆனது, குழந்தையின் சருமத்தில் ஏற்படும் ஒவ்வாமைகளிலிருந்து பாதுகாப்பதுடன் சருமத்திற்குத் தேவையான போசணையை அளிக்கிறது. சிறந்த மூலிகைக் கலவையுடன் தயாரிக்கப்பட்டு உள்ளூர் சந்தையில் உள்ள ஒரேயொரு மூலிகைகள் கொண்ட குழந்தைகளுக்கான சவர்க்காரம் இதுவாகும். அத்துடன் சருமத்திற்கு மென்மையான, புதிய இனிமையான நறுமணங்களுடன் அது தற்போது மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. குழந்தையின் சருமத்தை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும், மென்மையாகவும், மிருதுவாகவும், ஈரப்பதமாகவும் பேணும் மீள் அறிமுகம் செய்யப்பட்டுள்ள Khomba Baby குழந்தை பராமரிப்பு தயாரிப்புகள் குழந்தைக்கு ஆரோக்கியத்தையும் சுகத்தையும் தருகிறது என சுதேஷி நிறுவனம் தெரிவிக்கின்றது.

இத்தாயரிப்புகளின் பிரதான மூலப்பொருளான வேம்பு (கொஹொம்ப), பல நூற்றாண்டுகளாக இலங்கைத் தாய்மார்களால் பயன்படுத்தப்பட்டு வரும் மூலிகை மூலப்பொருளாகும். அத்துடன், 80 ஆண்டுகளுக்கும் மேலாக மூலிகைகளைக் கொண்ட தனிநபர் பராமரிப்பு தயாரிப்பு நிபுணரான சுதேசி, இந்த மூலிகைகளை கவனமாக தேர்ந்தெடுத்து, தாயின் அன்பின் நம்பிக்கையை உறுதி செய்யும் வகையில், உயர்ந்த தரத்துடன் சிறந்த மூலிகை தயாரிப்புகளாக உங்களிடம் கொண்டு சேர்க்கிறது. உங்களுக்கு வழங்கி வருகின்றது. இந்த மூலிகைகளின் கலவைகள், பாரம்பரியமாக குழந்தைகளை குளிப்பாட்டி இயற்கையாகவே கிருமிகளை நீக்கம் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அத்துடன் இந்த மூலிகை மூலப்பொருட்களை சருமத்தில் பயன்படுத்துவது எப்போதும் பாதுகாப்பானதாகவும் மிருதுவானதாகவும் அமைகிறது.

“இலங்கையின் முன்னணி மூலிகை தனிநபர் பராமரிப்பு தயாரிப்புகளின் உற்பத்தி நிறுவனம் எனும் வகையில், சுதேசி அதன் அனைத்து தயாரிப்புகளிலும் பயன்படுத்தப்படும் மூலிகைப் பொருட்களின் செயற்பாட்டு நன்மைகள் தொடர்பில் நுகர்வோர் மேலும் அறிந்து கொள்ள வேண்டுமென விரும்புகிறது. நாங்கள் இலங்கையின் சிறந்த மூலிகைகளை மட்டுமே பயன்படுத்துகிறோம் என்பதுடன், பயன்படுத்தப்படும் அனைத்து மூலப்பொருட்களும் விரிவாக ஆய்வுக்குள்ளாக்கப்படுகின்றன. தயாரிப்புகளின் தரத்தை உறுதி செய்வதற்காக முழுமையாக சோதனைக்கு உள்ளாக்கப்படுவதுடன், எமது தயாரிப்புகள் யாவும் 100% சைவத்தை அடிப்படையானது. அவை விலங்குகள் மீது சோதிக்கப்படவில்லை என்பதுடன் விலங்குகளின் கொடுமைகளிலிருந்து விலக்கற்றவை. சுதேஷி கொஹொம்ப, ராணி சந்தனம், சுதேஷி கொஹொம்ப பேபி உள்ளிட்ட சுதேசி தயாரிப்புகள் யாவும் இங்கிலாந்தின் Vegetarian Society, UK யினது அங்கீகாரம் பெற்றவை. இந்த உறுதிமொழியானது, நிறுவனத்தின் முன்னோக்கு-சிந்தனைகளின் நடைமுறைகளுக்கு சான்றாக அமைவதுடன், இது நுகர்வோருக்கு நெறிமுறை ரீதியானதும் சூழல் நட்புரீதியானதுமான தெரிவுகளை மேற்கொள்ளவுமான எமது விருப்பத்தையும் காண்பிக்கிறது. நிறுவனம் எப்போதும் தனது தயாரிப்புகளில் ஆரோக்கியம் மற்றும் சூழல் தாக்கம் தொடர்பில் கருத்தில் கொள்வதோடு, தொடர்ந்தும் அவற்றிற்கு முன்னுரிமையளிக்கின்றது.

மிக உயர்ந்த தரம் வாய்ந்த உள்நாட்டு தயாரிப்புகளை சந்தைக்குக் வழங்குவதானது, நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி (R&D) தொடர்பிலான முதலீட்டின் சிறந்த பிரதிபலிப்பாகும். மேலும் சுதேஷி தொழிற்சாலையானது ISO 9001 – 2015 தரநிலைகளின் கீழ் சான்றளிக்கப்பட்ட ஒரு முழுமையான ஆய்வுக்கூடத்தையும் கொண்டுள்ளது.

சுதேஷியினால் சந்தைக்கு வழங்கப்படும் முன்னணி வர்த்தகநாமங்களில் சுதேஷி கொஹொம்ப, கொஹொம்ப பேபி, பெர்ல்வைட், லக் பார், சேஃப்பிளஸ், பிளக் ஈகிள் பேர்ஃப்யூம், சுதேஷி ஷவர் ஜெல் ஆகியவை அடங்குகின்றன. முன்னணி மூலிகை சவர்க்கார வர்த்தகநாமமான கொஹொம்ப ஹேர்பல் மற்றும் மிகப் பிரபலம் வாய்ந்த ஒளிரும் முகத்தை வழங்கும் ராணி சந்தனம் ஆகியவற்றையும் நிறுவனத்தின் தயாரித்து சந்தைப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *