இலங்கை> உலகின் பல்வேறு நாடுகளுடன் இணைந்து புரத தினத்தை (பெப்ரவரி 27) அனுசரித்து வரும் நிலையில், ‘Right To Protein’ – பொதுச் சுகாதார விழிப்புணர்வு அமைப்பானது, இலங்கையில் Protein-O-Meter எனப்படும் முத Protein-O-Meter அறிமுகப்படுத்தும் Right To Protein  Protein-O-Meter அறிமுகப்படுத்தும் Right To Protein  லாவது புரத கணிப்பானை (calculator) அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

Right To Protein’ தளத்தில் நுழைவதன் மூலம் Protein-O-Meter கருவியை பொதுமக்கள் அணுகலாம். தங்களது உடல் விபரம், வாழ்க்கை முறை மற்றும் நாளின் வெவ்வேறு நேரங்களில் உட்கொள்ளும் உணவுகள் தொடர்பிலான தனிப்பட்ட விரிவான விபரங்களை வழங்குவதன் மூலம், பொதுமக்கள் தங்கள் தினசரி புரதத் தேவையை கணக்கிட Protein-O-Meter உதவுகின்றது. உள்ளூர் உணவுகள் மற்றும் தின்பண்டங்களில் உள்ள புரத உள்ளடக்கத்தை Protein-O-Meter இனால் அளவிட முடியும். இந்தக் கருவியின் குறிக்கோள், ஒருவருடைய உணவில் காணப்படும் புரத இடைவெளியை காண்பிப்பதும், அனைத்து குடிமக்களுக்கும் அவர்களின் புரத இலக்குகள் பற்றி விழிப்பை ஏற்படுத்துவதும், ஒவ்வொரு உணவிலும் அதன் நான்கில் ஒரு பகுதியாக புரதத்தை உட்கொள்வதற்கும் நினைவூட்டுவதாகும்.

நமது முழுமையான சுகவாழ்வுக்கு புரதம் மிகவும் இன்றியமையாத பாரிய போசணை என்பதால், புரதக் குறைபாடு பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு காரணமாக அமைகின்றது. புரத உணவுகள், அவற்றின் நன்மைகள் மற்றும் மக்கள் மத்தியில் நீண்டகால நடத்தை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வுகள் காலத்தின் தேவையென, இலங்கையிலுள்ள நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இப்பணியை செயற்படுத்த, ‘புரத தினம்’ மற்றும் Protein-O-Meter போன்ற கருவிகள் சுய விழிப்புணர்வு மற்றும் நடத்தை மாற்றத்தை ஏற்படுத்த உதவும்.

இவ்வருடம், ‘அனைவரும் புரதத்தை எளிதாக அணுகல்’ எனும் கருப்பொருளை புரத தினம் கடைப்பிடிக்கிறது. எனவே புரத உணவுகளின் அணுகல் குறித்து கவனத்தை ஈர்ப்பதும், கிடைக்கக்கூடிய பல்வேறு புரத உணவு மூலங்கள் தொடர்பில் மக்கள் அதிகளவு அறிந்திருப்பதை ஊக்குவிப்பதும் இந்த வருடத்தின் குறிக்கோளாகும். சமூக ஊடகங்கள் சார்ந்த மக்கள் விழிப்புணர்வு, இது தொடர்பான ஒரே எண்ணம் கொண்ட தனிநபர்கள், வர்த்தகநாமங்கள், நிறுவனங்கள், வல்லுநர்கள், சங்கங்கள் உள்ளிட்ட பலவேறு தரப்பினரின் ஆதரவுடன், நாட்டின் பல்வேறு தளங்களில் புரதம் குறித்த போசணைக் கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்த புரத தினம் உதவும்.

இப்பணியில் நீங்களும் இணையுங்கள், இன்றே புரத தினத்தை #ProteinDay (#புரததினம்) கொண்டாடுங்கள். அதிக போசாக்கான பாதுகாப்பான உலகத்தை நோக்கி ஒரு அடி முன்னெடுத்து வையுங்கள்.

‘Right To Protein’ பற்றி: சிறந்த போசாக்கு, ஆரோக்கியம் மற்றும் சுகவாழ்வுக்கு அவசியமான புரத உட்கொள்ளலின் முக்கியத்துவத்தைப் பற்றி மக்களுக்கு தெளிவூட்டுவதற்கான பொதுச் சுகாதார விழிப்புணர்வு முயற்சியே ‘Right To Protein’ ஆகும். #RightToProtein திட்டமானது, பல்வேறு வகையான புரத மூலங்களை, குறிப்பாக தாவரம் மற்றும் விலங்கு ஆகிய இரு வகை புரதங்கள் மூலம்  பாரிய போசாக்கு இலக்குகளை அடைவது பற்றிய அறிவை வளர்ப்பதில் செயற்பட்டு வருகிறது. Right To Protein ஆனது, நிறுவனங்கள், அமைப்புகள், வல்லுநர்கள், நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரைக் கொண்ட இணைந்த தொகுதியை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் புரதம் மற்றும் புரத உணவு மூலங்கள் தொடர்பான கட்டுக்கதைகள் மற்றும் தவறான எண்ணங்களை மக்களிடமிருந்து நீக்கி, போதியளவான புரத நுகர்வு மூலம், போசணை பாதுகாப்பை நோக்கி அவர்களை அணிதிரளச் செய்வதே இதன் நோக்கமாகும். இத்தொகுதியானது, தாவர மற்றும் விலங்குப் புரதங்களின் உற்பத்தி மற்றும் நுகர்வின் தரம் மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. Right To Protein ஆனது, உலகளாவிய நாடுகளைச் சேர்ந்த ஒரே எண்ணம் கொண்ட பல தனிநபர்கள், கல்வியாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் நிறுவனங்களால் ஆதரவளிக்கப்பட்டு வருகிறது. அறிவு மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்குதல் அல்லது ஊக்குவிப்பு பங்குதாரர்களாகுதல் உள்ளிட்ட எந்தவொரு வகையிலேனும் இதில் இணைய அல்லது பங்களிக்க விரும்புவோரை இத்திட்டம் வரவேற்கிறது.

மேலதிக தகவலுக்கு, https://righttoprotein.com/protein-day.html எனும் தளத்தை பார்வையிடவும். அத்துடன் Twitter, Facebook, LinkedIn, Instagram இல் @righttoprotein என்பதை பின்தொடரவும்.

END

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *