இலங்கையின் முன்னணி உள்ளூர் பால் வர்த்தக நாமங்களில் ஒன்றான பெல்வத்தை (Pelwatte Dairy) நிறுவனம், அண்மையில் தமிழ் விவசாய சமூகத்திற்கு உதவிகளை வழங்கி, தைப்பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தது. தமிழ் மக்கள் கொண்டாடும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று எனும் வகையில், இவ்விவசாயிகளுடன் வலுவான மற்றும் அர்த்தமுள்ள உறவுகளை கட்டியெழுப்பவும் அதனைத் தொடர்ச்சியாக பேணும் வகையிலும் பெல்வத்தை நிறுனம் இப்பண்டிகையை தொடர்ச்சியாக கொண்டாடி வருகிறது.

அந்த வகையில் இவ்வருடம், தைப்பொங்கலைக் கொண்டாடும் விவசாயிகளுக்கு பெல்வத்தை நிறுவனம் சுமார் 2,000 பரிசுப் பொதிகளை வழங்கியது. இப்பரிசுப் பொதியில் பாரம்பரிய தைப்பொங்கல் பானைகள், அரிசி, சீனி, தேங்காய், கருப்பட்டி, போஞ்சி, ஊதுபத்தி குச்சிகள் போன்றவை உள்ளடக்கப்பட்டிருந்தன. இக்கொண்டாட்ட நிகழ்வின் ஒரு பகுதியாக பெல்வத்தை நிறுவனத்தின் பிராந்திய மற்றும் கள உத்தியோகத்தர்களும் அங்கம் வகித்ததோடு, இப்பொருட்களை அவர்கள் பால் விவசாயிகளது வீடுகளுக்கு கொண்டு சேர்த்தனர்.

பெல்வத்தை நிறுவனத்தின் தலைவர் ஆரியசீல விக்ரமநாயக்க, இக்கொண்டாட்ட நிகழ்வுகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “விவசாயிகளுடன் கலாசார ரீதியாகவும் சமய ரீதியாகவும் தொடர்பைப் பேணுவதில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இவ்வாறான கொண்டாட்டங்களின் போது, ஒவ்வொரு விவசாயிகளுடனும் அர்த்தமுள்ள கலந்துரையாடல்களை மேற்கொள்ளவும், அவர்களின் உற்பத்தி செயன்முறை குறித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கவும், பல வருடங்களாக அவர்கள் வழங்கி வரும் பங்களிப்பு மற்றும் ஆதரவிற்காக எமது நன்றியைத் தெரிவிக்கவும் முடிந்துள்ளது.” என்றார்.

இச்சமூகத்தில் உள்ள விவசாயிகள் பல வருடங்களாக பெல்வத்தை நிறுவனத்தின் வெற்றிக்கு பெரிதும் ஆதரவளித்து, தமது பங்களிப்பை வழங்கி வருகின்றனர். பல வருடங்களாக விவசாயிகள் நிறுவனத்திற்கு வழங்கி வரும் பங்களிப்பு மற்றும் ஆதரவிற்காகவும் எதிர்காலத்தில் அதனை தொடர்வதற்காகவும் விவசாயிகள் மீது நிறுவனம் வைத்திருக்கும் அன்பிற்கான ஒரு சிறிய அடையாளமே இவ்வாறான திட்டங்களாகும். விவசாய சமூகமானது, பெல்வத்தை நிறுவனத்தின் வெற்றியின் மூலக்கற்கள் என்பதால் அவர்களுக்கு ஆதர வழங்குவதில் நிறுவனம் எப்போதும் உறுதியுடன் இருக்கும்.

END

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *