– தேசத்தின் வளர்ச்சிப் பங்காளி

இலங்கையிலுள்ள முன்னணி பல்வகைத்துறை கூட்டு நிறுவனமான DIMO, 2023 ஆம் ஆண்டிற்கான அதன் நாட்காட்டியை சமீபத்தில் அறிமுகப்படுத்தியிருந்தது. இது நாடு முழுவதும் காணப்படும் பல்வேறு தனித்துவமான வீதிகளை காட்சிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இது நாட்டின் அழகை சித்தரிப்பது மட்டுமல்லாமல், வாழ்க்கைக்கு பல்வேறு வழிகள் உள்ளதையும் குறிக்கிறது. இலங்கையின் வீதிகள், ஒழுங்கைகள் மற்றும் நெடுஞ்சாலைகள், குறுகியதாகவோ அல்லது பரந்ததாகவோ, இயற்சை எழில் மிக்க காட்சியை கொண்டதாகவோ அல்லது ஒன்றோடொன்று இணைக்கப்பட்டதாகவோ உள்ள போதிலும் அவை தெற்காசியாவின் அடர்த்தியான வீதி வலையமைப்பாக மட்டுமல்லாமல், காலப் போக்குடன் மக்களை இணைக்கும் ஒரு இணைப்பு எனும் சிறப்பையும் கொண்டுள்ளது. வர்த்தகம் முதல் வாணிபம், உறவுகள் மற்றும் சாகசங்கள் வரை, இலங்கையிலுள்ள வீதிகள் வரலாறு முழுவதும் மக்களின் வாழ்க்கையின் கதைகளைச் சொல்கின்றன. தேசத்தின் வளர்ச்சி பங்காளியான DIMO, இந்த உணர்வை எதிரொலிக்கிறது. அதன் அனைத்துத் துறைகளும் அனைத்து இலங்கையர்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளுக்கு தொடர்ச்சியாக ஊக்கமளிப்பதை இலக்காகக் கொண்டுள்ளன.

இந்த நாட்காட்டியானது தேசத்தின் அனைத்து மூலைகளையும் உள்ளடக்கியுள்ளதன் மூலம், இலங்கையின் அழகை உலகிற்குக் காண்பிக்கிறது.

இந்த நாட்காட்டியில் சித்தரிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வீதியும் அதன் சொந்த கதையையும் பயணத்தையும் கொண்டுள்ளன. 18 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட அற்புதமாக, பொருத்தமாக பெயரிடப்பட்ட ‘தஹ அட்ட வங்குவ’ வீதி, குருணாகல் அதிவேக நெடுஞ்சாலை, லொக்கல் ஓயா – மஹியங்கனை வீதி, கல்குடா வீதி மற்றும் அறுகம்பை திருகோணமலை நெடுஞ்சாலை போன்ற பல்வேறு வீதிகள் இந்நாட்காட்டியில் இடம்பெற்றுள்ளன.

கலா வெவ எனப்படும் புராதன நீர்த்தேக்கத்துடனான அநுராதபுரத்தில் உள்ள கலா வெவ – அகுன வீதி, தாழியடியில் உள்ள இயற்கை எழில் சூழ்ந்த கடற்கரை வீதி மற்றும் பொலன்னறுவையில் உள்ள கலஹகல வீதி ஆகியன இந்த நாட்காட்டியில் இடம்பெற்றுள்ள வேறு சில வீதிகளாகும். புத்தள – கதிர்காமம் வீதி, யாழ்ப்பாணத்தின் சங்குப்பிட்டி பாலம், அக்குறள வீதி, யாழ்ப்பாணம் – கிளிநொச்சி வீதி என்பனவும் இதில் இடம்பெற்றுள்ளன.

சூழலில் ஏற்படும் எதிர்மறையான தாக்கத்தை குறைப்பதற்கான வழிகளை ஆராயும் ஒரு நிறுவனம் எனும் வகையில், இந்த வருடமும், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலான காய்கறி அடிப்படையிலான அச்சிடும் மைகளால் இந்த நாட்காட்டிகள் அச்சிடப்பட்டுள்ளன. இந்த கருத்தின் பின்னணியில் உள்ள படைப்பாற்றலை தலைசிறந்த Sarva Integrated நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த கருத்தாளம் கொண்ட பெருமை மிக்க நாட்காட்டியானது, பல வருடங்களாக தேசம் அடைந்துள்ள முன்னேற்றத்தை சித்தரிக்கும் பல வீதிகளைக் காட்சிப்படுத்துகிறது. DIMO நிறுவனம் தனித்துவமான கதையைக் கொண்டுள்ளதாலும், தேசத்தை அதன் சொந்த வெற்றிக்கான பாதையில் தொடர்ந்து வழிநடத்துவதாலும் இந்த உணர்வை நிறுவனம் இங்கு எதிரொலிக்கச் செய்துள்ளது.

END

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *