இலங்கையின் முன்னணியிலுள்ள பல்வகை துறைசார்ந்த கூட்டு நிறுவனமான DIMO நிறுவனம், TATA Motors உடன் இணைந்து, ‘DIMO – TATA Mega Campaign’ (DIMO – TATA மெகா பிரச்சாரத்தை) 2023 ஜனவரி 09 முதல் 21 வரை, 16 DIMO – TATA சேவை மையங்கள் மற்றும் நாடு முழுவதும் நிறுவப்பட்ட 32 இடங்களிலும் முன்னெடுக்கிறது. இந்த பிரசார திட்டமானது, அனைத்து TATA வர்த்தக வாகன வாடிக்கையாளர்களுக்கும், தங்களது வாகனம் குறைந்தபட்ச செயலிழப்புகள் மற்றும் பராமரிப்பு செலவுக்குட்பட்டதாக இயங்குவதை உறுதி செய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இதன் விளைவாக வாடிக்கையாளர்களின் தினசரி செயற்பாடுகள் சீராக இடம்பெறுவதோடு, குறிப்பாக வாகன இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ள தற்போதைய சூழலில், மிகவும் அவசியமானதாக காணப்படும் வாகனங்களின் நீண்ட ஆயுட்காலத்தை பேணுவதற்கும் வழி வகை செய்கின்றது.

இதன் மூலம் எஞ்சின், கியர்பொக்ஸ், டிபெரென்ஷியல், ப்ரொப்பல்லர் ஷாஃப்ட், கிளட்ச், சஸ்பென்ஷன், ஸ்டீயரிங், பிரேக், ஹைட்ரோலிக்ஸ், எலக்ட்ரிக்கல்ஸ், எரிபொருள் தொகுதி உள்ளிட்ட 80 விடயங்கள் தொடர்பான முழுமையான ஆய்வு போன்ற பல்வேறு நன்மைகளை வாடிக்கையாளர்கள் பெறுவார்கள். வாகனத்தை சிறந்த முறையில் பராமரிக்க என்னென்ன பழுதுபார்த்தல் விடயங்கள் மற்றும் சேவைகள் தேவை என்பது பற்றிய ஆலோசனையுடன், ஒவ்வொரு ஆய்வு பற்றிய விரிவான அறிக்கைகளையும் இதில் பெற முடியும். இது தவிர, இந்த பிரசார திட்டத்தின் மூலம் இணையும் வாடிக்கையாளர்கள், உதிரிப் பாகங்களுக்கு 50% வரை தள்ளுபடி வவுச்சர்களைப் பெறலாம். இவை 2023, மார்ச் 31 வரை செல்லுபடியாகும் என்பதுடன் குறித்த காலப்பகுதியில் இதனை பல முறை பயன்படுத்தலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்பிரசார திட்டத்தின் போது, வாடிக்கையாளர்கள் DIMO – TATA பணிமனைகளால் வழங்கப்படும் சேவை மற்றும் பழுதுபார்ப்பு பொதிகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இதில், லுப்ரிகேஷன் சேவைகள், கிளட்ச் ரிப்பயர், பிரேக் பேட் மாற்றுதல், டைமிங் பெல்ட், ஹப் கிரீசிங், எஞ்சின் ரிப்பயர் உள்ளிட்ட பெரும்பாலான TATA வர்த்தக வாகன மாதிரிகளுடன் தொடர்புடைய விடடங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்த சேவை பொதிகள் வாடிக்கையாளர்களுக்கு மதிப்பு கூட்டிய சேவையை வழங்குவதோடு, இவை ஏனைய பழுதுபார்ப்பு மையங்களால் ஈடு செய்ய முடியாத வகையிலான, மிகவும் கட்டுப்படியான விலையிலும் குறுகிய காலத்திற்குள்ளும் மேற்கொள்ளப்படுகின்றது. இதில், வாடிக்கையாளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட DIMO – TATA தரக்குறியீட்டுன் கூடிய ரீ-சேர்ட்டுகள் வழங்கப்படுவதோடு, இலவச ஒயில் மீள்நிரப்பல்கள் உள்ளிட்ட விடயங்களும் கிடைக்கின்றன.

DIMO நிறுவனத்தின் விற்பனைக்குப் பின்னரான சேவையின் பிரதம செயற்பாட்டு அதிகாரி மஹேஷ் கருணாரத்ன இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “2023 ஆம் ஆண்டில் வாகன பராமரிப்பிற்கான சரியான ஆரம்பத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக, நாடு தழுவிய DIMO – TATA மெகா பிரசாரம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு வாடிக்கையாளர்கள் உரிய நேரத்திற்குள், மலிவான சேவைகளைப் பெறுகிறார்கள். வாகன உரிமையாளர்களுக்கான சரியான வளர்ச்சிப் பங்காளியாக DIMO திகழ்வதே இந்த பிரச்சாரத்திற்கான காரணம் என்பதோடு, வாகனத் துறையில் உள்ள அனைத்து பங்குதாரர்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை ஊக்குவிக்கும் எமது நோக்கத்தையும் இது உள்ளடக்கியுள்ளது.” என்றார்.

மஹேஷ் கருணாரத்ன மேலும் தெரிவிக்கையில், “ஒரு வாகனத்தின் சரியான பராமரிப்பு நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவது மட்டுமன்றி, எரிபொருளின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை போன்ற விடயங்கள் என்பன செல்வாக்குச் செலுத்தும் இக்காலத்தில் எரிபொருள் சிக்கனத்தை அதிகரித்தல், அதே நேரத்தில் வாகனத்தின் ஒட்டுமொத்த செயற்றிறனையும் மேம்படுத்துதல் என்பனவும் மிக முக்கியமானதாகும். இது மேலதிக பராமரிப்பு மற்றும் செயற்பாட்டு செலவுகளின் தேவைக்கு முற்றுப் புள்ளி வைப்பதோடு, வாகனத்தின் மதிப்பை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. தற்போதைய பொருளாதார சூழலில் முறையான வாகனப் பராமரிப்பின் அவசியம் மிகவும் முக்கியமானது என்பதுடன், இந்த பிரசாரத் திட்டமானது, வாடிக்கையாளர்களுக்கு அவர்களது வாகனங்களின் சீரான செயற்பாட்டை உறுதிப்படுத்த  உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.” என்றார்.

END

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *