களனி பல்கலைக்கழகம் (UoK) மற்றும் தம்மிக்க மற்றும் பிரிசிலா பெரேரா மன்றம் (DP Foundation) இணைந்து கடந்த 2022 ஒக்டோபர் 4 ஆம் திகதி புரிந்துணர்வு உடன்படிப்பை ஒன்று செய்துகொள்ளப்பட்டது. வர்த்தக வள முகாமைத்துவம் (ERP) தொடர்பில் ஒன்லைன் சான்றிதழ் கற்கை ஒன்றை உருவாக்குவதே இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் நோக்கமாகும்.

வர்த்தக வள முகாமைத்துவம் (ERP) தொடர்பில் தேவையான அறிவை இலவசமாக கற்பதற்கு வாய்ப்பு வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இது SAP அறிவு மற்றும் திறமையை சிறப்பம்சமாகக் கொண்ட வகையில் உருவாக்கப்பட்டுள்ளதோடு வர்த்தக வள முகாமைத்துவ துறையில் பயிற்சி பொறுவோர் தொடக்கம் உதவி ஆலோசகர்கள் வரை ஏழு துறையினருக்கு வாய்ப்புகளை உறுவாக்குகிறது.

களனி பல்கலைக்கழகத்தின் (UoK) இந்த புதிய திட்டத்தை உருவாக்குவதற்கு டி.பீ. மன்றம் (DP Foundation) அதன் டி.பீ. எடியுகேஷன் (DP Education) மூலம் திட்டத்தின் உள்ளடக்கத்தை தயாரிப்பதற்குத் தேவையான நிதி மற்றும் மனித வளத்தை பெற்றுத்தருவதற்கு பங்களிப்புச் செய்கிறது.

இது டி.பீ. எடியுகேஷன் ‘மன்றத்தின் ஒன்லைன் பல்கலைக்கழக கல்வியை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் மேற்கொள்ளப்படும் திட்டமாகும். இதற்கு முன்னர் இவ்வாறான இரட்டைத் திட்டம் ஒன்று மொரட்டுவை பல்கலைக்கழகத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டதோடு முதல் திட்டமாக Trainee -Full Stack Developer ஒன்லைன் நிகழ்ச்சி இருந்தது. இன்று 135,000க்கும் அதிகமான மாணவர்கள் அதனுடன் இணைந்துள்ளனர். Trainee-Full Stack Developer கற்கைக்கு https://open.uom.lk/ என்ற இணையதளத்திற்கு பிரவேசிக்கவும். அது தொடர்பிலான இரண்டாவது திட்டமானது வர்த்தக முகாமைத்துவம் தொடர்பான சான்றிதழ் தரத்திலான அமெரிக்க திட்ட முகாமைத்துவ நிறுவனத்தினால் சான்றளிக்கப்பட்ட CAPM தரத்திலான ஒன்லைன் கற்கை ஒன்றை உருவாக்குவதை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேரா மற்றும் பிரிசிலா பெரேரா அகியோரின் நன்கொடையான டி.பீ. மன்றம் (DP Foundation), இலங்கையின் அறிவு சார்ந்து பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் இலங்கை பல்கலைக்கழக இலவச ஒன்லைன் கற்பித்தல் அரங்மான டி.பீ. எடியுகேஷன் (DP Education) உருவாக்கப்பட்டுள்ளது.

டி.பீ. எடியுகேஷன் தொடர்பில் மேலதிக விபரங்களுக்கு https://open.uom.lk/  இணையதளத்திற்கு பிரவேசிக்கவும்.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *