நாட்டின் முன்னணி விவசாய இயந்திரங்கள் மற்றும் உபகரண விநியோகஸ்தரான Hayleys Agriculture Holdings Ltd, உலகின் தலைசிறந்த விவசாய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை இலங்கையில் அறிமுகப்படுத்துவதில் பெயர்பெற்று விளங்குகிறது. கடந்த பல ஆண்டுகளாக புதிய விவசாய இயந்திரமயமாக்கல் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் விவசாயிகளுக்கு விவசாய நடவடிக்கைகளை சுலபமாக்குவதற்கும் விளைச்சலை அதிகரிக்கவும்  Hayleys Agriculture உதவி வந்துள்ளது. உலகின் முன்னணி விவசாய இயந்திர உற்பத்தி நிறுவனமான Kubota உடனான அதன் ஒத்துழைப்பு, கடந்த தசாப்தத்தில் புத்தாக்கமான விவசாய இயந்திரங்களுடன் உள்ளூர் விவசாயத் துறையின் வளர்ச்சிக்கு வழிகோலியுள்ளது. Kubota வின் SPW-48C நெல் நடுகை இயந்திரம் அதன் புகழ்பெற்ற நெல் நடுகை தொழில்நுட்பத்துடன் 2013 ஆம் ஆண்டில் உள்ளூர் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டதுடன் இலங்கையில் விவசாய இயந்திரமயமாக்கலில் ஒரு புதிய அத்தியாயத்தை வெளிப்படுத்தியிருந்தது.

Kubota நெல் நடுகை இயந்திரத்தின் உதவியுடன், நெல் நடுகை சீரான இடைவெளியில் நடப்படலாம் என்பதுடன், குறைந்த அளவு விதைகளைப் பயன்படுத்தி சிறந்த அறுவடையைப் பெற முடியும். இது கைமுறையாக நெல் நடுகை செய்வதை விட 20 மடங்கு அதிக செயல்திறனை உறுதி செய்வதுடன், நெல் நாற்றுகளை எந்தவித சேதமும் இல்லாமல் கவனமாக நடுகை செய்யும் திறனையும் கொண்டது. Kubota நெல் நடுகை இயந்திரம் FMRC சான்று அங்கீகாரத்தைப் பெறுவதற்காக இலங்கையில் பல சோதனைகள் மற்றும் பரீட்சார்த்த முயற்சிகளுக்கு உட்பட்டுள்ளதுடன், சோதனைகளின் போது, உள்ளூர் நெல் வயல்களில் அதன் பல்துறை திறனை நிரூபித்துள்ளது.

Kubota நெல் நடுகை இயந்திரம் ஜப்பானிய தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு புத்தாக்கமான மற்றும் சக்திவாய்ந்த வடிவமைப்பைக் கொண்டுள்ளது. அதன் சிறிய வடிவமைப்பு அளவானது சேற்று வயல்களில் அது செயல்படுவதை எளிதாக்குகிறது. OHV Overhead வால்வு பெட்ரோல் இயந்திரம் மூலம் இயங்கும் Kubota நெல் நடுகை இயந்திரம் எரிபொருளைச் சேமிக்கும் திறன் கொண்டதுடன், உற்பத்தித்திறனை அதிகரிக்கிறது. இது ஒரு நாளைக்கு 2 முதல் 2.5 ஏக்கர் நெல் வயல்களை நடுகை செய்யும் திறன் கொண்டதுடன், மிக முக்கியமாக, நெல் நாற்றுகளுக்கு இடையிலான தூரத்தை ஐந்து வெவ்வேறு வழிமுறைகளில் சரிசெய்தல் மற்றும் நெல் நாற்றுகளின் நடுகை ஆழத்தை சரிசெய்யும் தெரிவுகளுடன் இது கிடைக்கப்பெறுகிறது. அதன் கட்டுப்பாட்டு தொகுதி மற்றும் நெம்புகோல் கைப்பிடிகள் வசதியான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது ஒரு அனுபவமற்ற விவசாயி கூட இயந்திரத்தை எளிதாக இயக்குவதற்கு உதவுகிறது.

Kubota நெல் நடுகை இயந்திரம் குறித்து Hayleys Agriculture Holdings Ltd நிறுவனத்தின் விவசாய உபகரணங்கள் பிரிவுக்கான பொது முகாமையாளரான சுமித் ஹேரத் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், “Kubota போன்ற உலகப் புகழ்பெற்ற வர்த்தகநாமத்துடன் இணைந்து இலங்கை விவசாயிகளுக்கு விவசாய இயந்திரங்களை வழங்கி அவர்களை வலுவூட்டுவதில் நாங்கள் பெருமையடைகிறோம். Kubota நெல் நடுகை இயந்திரம் மிகவும் திறன் வாய்ந்தது. வேலைக்கு மிகவும் ஏற்றது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு சௌகரியத்தை அதிகரிக்கிறது. இயந்திரமயமாக்கப்பட்ட நெல் நடுகை என்ற கோட்பாடு மிகவும் பிரபலமானது என்பதுடன், உலகில் பல நாடுகளால் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. Hayleys Agriculture நிறுவனத்தில் நெல் நடுகை தொழில்நுட்பத்தில் சிறந்த நடைமுறைகள் பற்றிய அறிவு மற்றும் நிபுணத்துவம் எங்களிடம் உள்ளது. Kubota நெல் நடுகை இயந்திரத்தை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து அந்த அறிவு மற்றும் நிபுணத்துவத்தை உள்ளூர் விவசாயிகளிடையே நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்,” என்று குறிப்பிட்டார்.

Kubota ஒரு உலகப் புகழ்பெற்ற விவசாய இயந்திர உற்பத்தி நிறுவனம் என்பதுடன், உலகிற்கு முன்னணி நெல் நடுகை இயந்திர வழங்குனராகத் திகழ்ந்து வருகின்றது. இலங்கையில் இயந்திரமயமாக்கப்பட்ட நெல் நடுகை செய்யும் இயந்திர சந்தையில் முன்னணியில் உள்ளது. Kubota விவசாய இயந்திரங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் நெல் பயிர்ச்செய்கையின் பெரும்பாலான வளர்ச்சி நிலைகளுடன் Kubota இலங்கையில் வளர்ந்து வரும் பிரசன்னத்தைக் கொண்டுள்ளது. Hayleys இலங்கையில் இதுவரை 600 இற்கும் மேற்பட்ட Kubota நெல் நடுகை இயந்திரங்களை விற்பனை செய்துள்ளது. புத்தாக்கமான விவசாய இயந்திரமயமாக்கல் தீர்வுகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் உள்ளூர் விவசாயத்தை மேம்படுத்துவதற்கான அதன் முயற்சிகள் குறித்து அது மிகவும் பெருமை கொள்கிறது.

முற்றும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *