கையடக்கத் தொலைபேசி தகவல்தொடர்பு சேவைகள் தொடர்பான நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் தெரிவான HUTCH, தற்போதைய போக்குவரத்து தடைப்பட்ட சூழலின் சவால்களை சமாளிக்க, தொழில்துறையொன்றில் முதலாவது முயற்சியாக, அதன் விநியோக பங்காளிகளுக்கு மின்சார மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் உதவித் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இலங்கையில், பெரும்பாலான அபிவிருத்தியடைந்து வரும் சந்தைகளைப் போன்றே, 90% கையடக்க சந்தாதாரர்கள் முற்கொடுப்பனவு சேவை முறையில் இருப்பதால், அவர்களுக்கான மீள்நிரப்பல் அட்டைகள் மற்றும் இலத்திரனியல் ரீலோடுகள் கிடைப்பது மிகவும் அவசியமாக உள்ளது.

இந்த தனித்துவமான திட்டத்தின் மூலம், Hutch ஆனது நாடு முழுவதும் 75,000 இற்கும் அதிகமான சில்லறை விற்பனை நிலையங்களில் அதன் கையடக்கத் தொலைபேசி தயாரிப்புகள், தொடர்ச்சியாக கிடைப்பதை உறுதி செய்வதற்காக அதன் விநியோக வலையமைப்பிற்கு 200 இற்கும் மேற்பட்ட இலத்திரனியல் மோட்டார் சைக்கிள்களை வழங்கப்படவுள்ளது.

இந்த திட்டம் குறித்து கருத்துத் தெரிவித்த Hutch இன் பிரதம நிறைவேற்று அதிகாரி திருக்குமார் நடராசா, “நாட்டில் நிலவும் எரிபொருள் பற்றாக்குறையுடன், மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தி எமது தயாரிப்புகளை விநியோகிப்பது மிகவும் கடினமாக உள்ளதோடு, தற்போது துவிச்சக்கர வண்டிகள் மற்றும் பொதுப் போக்குவரத்திற்கு மாத்திரமே அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு அத்தியாவசிய தகவல் தொடர்பாடல் சேவை வழங்குநர் எனும் வகையில், அதில் முக்கியமாக காணப்படுகின்ற விநியோக வலையமைப்பைத் தக்கவைக்க புதிய மற்றும் சரியான நேரத்திலான தீர்வுகளின் அவசியத்தை நாம் அடையாளம் கண்டுள்ளோம். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் எமது சேவைகளை தங்குதடையின்றி பெறலாம். எமது விநியோகஸ்தர்களுக்கு இலவச மின்சார மோட்டார் சைக்கிள் வழங்கும் உதவித் திட்டம் மூலம், எமது முக்கியமான தயாரிப்புகள் எமது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களைச் சென்றடைவதை உறுதி செய்யும்.” என்றார்.

இந்த முயற்சியானது, Hutch இன் Global Fortune 500 இனால் ஆதரிக்கப்படும் திட்டங்களில் ஒன்றாகும் என்பதுடன், CK Hutchison Holdings Limited ஆனது தற்போதைய கடினமான காலகட்டத்தில், அதன் முக்கிய வணிக பங்காளிகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் இலங்கையில் தனது வணிகத்தின் தொடர்ச்சியான நிலைபேறான தன்மையை உறுதிசெய்வது தொடர்பான அதன் தாய் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை காண்பிக்கிறது.

கொழும்பில் உள்ள HUTCH தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில், HUTCH இன் பிரதான நிறைவேற்று அதிகாரி திருக்குமார் நடராசா மற்றும் HUTCH நிறுவனத்தின் விற்பனை பொது முகாமையாளர் தரிந்து விஜேரத்ன ஆகியோரால் விநியோக பங்குதாரர்களுக்கு மின்சார மோட்டார் சைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டன.

END

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *