Win-Win·Huawei Innovation வாரத்தின் இரண்டாவது நாளில் இடம்பெற்ற Green Development Solution (பசுமை மேம்பாட்டு தீர்வு) ஆரம்ப விழாவில், Huawei நிறுவனத்தின் வலையமைப்பு வணிகக் குழுமத்தின் தலைவர் Ryan Ding,  “Green ICT for New Value” (புதிய பெறுமதிக்கான பசுமை தகவல் தொழில்நுட்பம்) எனும் தலைப்பில் ஆற்றிய முக்கிய உரையின் போது, சக்தி திறனுக்கு முன்னுரிமை அளிப்பதன் அவசியத்தையும் சக்தி திறனுக்கான தரமான, தொழில்துறை அளவிலான பரந்த காட்டியுடனான தொகுதியின் அவசியத்தை வலையமைப்புகளுக்கு வலியுறுத்தினார்.

மூன்றாம் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் படி, டிஜிட்டல் சேவைகளால் உருவாக்கப்பட்ட தரவுப் போக்குவரத்து (data traffic) 2020 இல் உள்ளதிலும் பார்க்க 2030 இல் 13 மடங்காக அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, சக்தி திறன் மேம்பாடுகள் மேற்கொள்ளப்படாவிட்டால், ICT தொழில்துறையின் சக்தி நுகர்வு மற்றும் காபன் வெளியீடுகள் 2.3 மடங்காக அதிகரிக்கும். ITU வின் கருத்துப்படி, காலநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டின் (UNFCCC) பரிஸ் ஒப்பந்தத்தின் இலக்கை அடைவதற்கு, ICT தொழில்துறையானது 2030ஆம் ஆண்டுக்குள் காபன் வெளியீட்டை குறைந்தபட்சம் 45%  இனால் குறைக்க வேண்டும்.

சக்தி திறன் மேம்பாடுகள் வலையமைப்பாளர்களுக்கு மூன்று வழிகளில் பயனளிக்கும். முதலாவதாக, பயனர் இடம்பெயர்வு, தள மேம்படுத்தல்கள், வலையமைப்பு சக்தி குறைப்பு ஆகியவை அவர்களுக்கு OPEX சேமிப்பைக் வழங்கும். இரண்டாவதாக, மேம்படுத்தப்பட்ட சக்தித் திறன் 2G மற்றும் 3G பயனர்களை 4G மற்றும் 5G சேவைகளுக்கு மாற்றுவதற்கு ஆதரவளிக்கும். மூன்றாவதாக, காபன் தடயத்தைக் குறைப்பதற்கான வலையமைப்புகளின் முயற்சிகள் மூலம், சூழல் பாதிப்பை குறைக்க முடியும் என்பதுடன், அவர்களுக்குள்ள சமூகப் பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றவும் அது உதவும்.

Huawei மற்றும் அதன் வலையமைப்பு சேவை பங்காளிகள், ICT தீர்வுகளைப் பயன்படுத்தி சக்தி திறனை அதிகரிக்க ஏற்கனவே காபன்-அதி தீவிர பயன்பாட்டு தொழில்துறைகளை மேம்படுத்துவதன் மூலம், தங்கள் “carbon handprint” இனை அதிகரிக்க இணைந்து பணியாற்றி வருகின்றனர். அவர்களின் காபன் வெளியீட்டின் குறைப்பானது, அவர்களின் சொந்த வெளியீட்டிலும் 10 மடங்கு அதிகமாக இருக்கும். துறைமுகங்கள், நிலக்கரிச் சுரங்கம், உருக்கு போன்ற முக்கிய காபன்-தீவிர தொழில்துறைகளில் ஏற்கனவே பல வெற்றி வரலாறுகள் காணப்படுகின்றன.

Ryan Ding தனது உரையின் முடிவில், ஒரு ஒருங்கிணைந்த, தொழில்துறை அளவிலான குறிகாட்டி தொகுதியை நிறுவுவதற்கு அழைப்பு விடுத்தார். இது சக்திச் செயல்திறனை அளவிடக்கூடிய அடிப்படைகளை நிறுவ உதவுவதுடன் ஒட்டுமொத்த ICT துறையின் பசுமையான வளர்ச்சிக்கு வழிகாட்டியாக அது செயற்படும். “வலையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கும், பசுமையான ICT மூலம் புதிய பெறுமானத்தை உருவாக்கவும் Huawei தயாராக உள்ளது.” என Ryan Ding தனது உரையின் முடிவில் தெரிவித்தார்.

Win-Win·Huawei Innovation வாரம் ஜூலை 18 முதல் ஜூலை 21 வரை சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்றது. டிஜிட்டல் பொருளாதாரத்தில் பகிரப்பட்ட வெற்றியைக் காண்பதற்கு, உலகளாவிய வலையமைப்புகள், தொழில்துறை வல்லுநர்கள், கருத்தாள தலைவர்களுடன் இணைந்து 5G, பசுமை மேம்பாடு, கணனி வலையமைப்புகள், டிஜிட்டல் மாற்றம் போன்ற தலைப்புகளில் இங்கு ஆராயப்பட்டன.

இது தொடர்பான மேலதிக தகவலுக்கு: https://carrier.huawei.com/en/events/winwin-innovation-week.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *