இலங்கையின் முன்னணி குழந்தை பராமரிப்பு வர்த்தக நாமமான Baby Cheramy (பேபி செரமி), தனது வர்த்தகநாமத்தின் மதிப்பை பேணியவாறு இலங்கையின் பெற்றோர்களை தொடர்ந்தும் ஊக்குவிப்பதன் மூலம் தனது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. ஒரு சில மாதங்களுக்கு முன்பு, இலங்கையில் முதன்முதலாக ஒரே பிரசவத்தில் பிறந்த 6 குழந்தைகளின் பெற்றோருக்கு ஆதரவளிப்பதற்காக பேபி செரமி முன் வந்தது. அதற்கமைய ஒரு வருடம் முழுவதும் அவர்களுக்கு அவசியமான குழந்தை பராமரிப்பு பொருட்களை வழங்க உறுதியளித்திருந்தது.

குறித்த குழந்தைகளின் தந்தையான உதயங்க மறவன்கொட, அவர்களது கடந்த சில மாதங்கள் எவ்வாறு அமைந்தன என, தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார், “எனது மனைவி திலிணிக்கும் எனக்கும் ஒரே பிரவசத்தில் ஆறு குழந்தைகள் கிடைத்திருப்பது முற்றிலும் எதிர்பாராத ஒன்றாகும். நாம் பல்வேறு உடல் ரீதியான, உணர்வு ரீதியான, நிதி ரீதியான சவால்களை சந்தித்தோம். ஆயினும் பேபி செரமியின் உதவியானது, எமது பல்வேறு தேவைகளில் சிலவற்றை எளிதாக்குவதாக அமைந்திருந்தது. முழு ஈடுபாடு கொண்ட தந்தையாக இருந்து, எனது குழந்தைகளை வளர்ப்பதில் எனது பங்கு மிகவும் முக்கியமானது என்பதை அறிந்து கொண்டேன். நான் ஒரு ஈடுபாடுள்ள தந்தையாகவும் கணவனாகவும் இருப்பதால், எனது மனைவி மற்றும் எமது குடும்பத்திற்கு உணர்வுபூர்மான மற்றும் உடல் ரீதியான ஆதரவை வழங்க என்னால் முடிந்துள்ளது.” என்றார்.

பேபி செரமி, இந்த பெற்றோரின் தேவைகளை உணர்ந்து, அவர்களது குடும்பத்திற்கு தேவையான டயபர்கள், ஷம்பு, சவர்க்காரம், கிறீம், கொலோன் உள்ளிட்ட குழந்தை பராமரிப்பு பொருட்களை வழங்க முன்வந்துள்ளது. இத்தயாரிப்புகளின் முதல் தொகுதி கடந்த 2021 ஒக்டோபரில், 6 குழந்தைகளின் தந்தையான உதயங்க மறவன்கொடவிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த குழந்தைகளின் தாயான திலிணி வாசனா தயானந்த இது தொடர்பில் தனது கருத்தை தெரிவிக்கையில், “கடந்த சில மாதங்களாக பேபி செரமி எம்முடன் இணைந்திருப்பதானது நாம் பெற்ற அதிர்ஷ்டமாகும். அத்தியாவசிய குழந்தை பராமரிப்பு  தயாரிப்புகளை எமக்கு வழங்கும் பேபி செரமியின் அர்ப்பணிப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எதிர்வரும் சில மாதங்களுக்கு இத்தயாரிப்புகளை கொள்வனவு செய்வது தொடர்பில் நாம் கவலைப்பட வேண்டியதில்லை. இதன் மூலம் எமது தோள்களில் இருக்கும் ஒரு பெரிய சுமை குறைந்துள்ளது. ஒவ்வொரு சவாலையும் நானும் எனது கணவரும் இணைந்து எதிர்கொண்டோம். அது எமது குழந்தைகளின் வாழ்க்கைக்கு சிறந்த தொடக்கத்தை வழங்க உதவியாக இருந்தது” என்றார்.

ஆறு குழந்தைகளுடனான ஒரு தாயின் அனுபவம் சவாலானதாகும். ஆயினும் தந்தையின் ஆதரவுடன், அவர்கள் இருவரும் இணைந்து தங்கள் குழந்தைகளுக்கு அதிக ஆறுதலையும் பராமரிப்பையும் வழங்க முடிந்துள்ளது. இந்த 6 குழந்தைகளின் தந்தை உண்மையான ஊக்கத்தின் தூணாகவும், முழுமையான ஒரு பெற்றோருக்கு முன்மாதிரியாகவும் இருக்கிறார் என்பதை பேபி செரமி அறிந்துள்ளது. அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான பெற்றோராகளாக இருப்பதன் மூலம், தந்தைகள் மேலும் முன்வந்து, தாயுடன் இணைந்து தங்கள் குழந்தைகளின் வளர்ப்பிற்கு சமமான ஆதரவை வழங்க வேண்டுமென்பதை, பேபி செரமி ஊக்குவிக்கிறது.

பெற்றோருக்கான கிளினிக்குகள் மற்றும் தகவல்களை பறிமாறிக் கொள்ளும் அமர்வுகள் மூலம் உரிய தெளிவூட்டல்களை பெற்றோர்கள் பெறுவதை உறுதி செய்வதன் மூலம், அனைத்தையும் அறிந்த பெற்றோர்களை உருவாக்குவதை அடிப்படையான விடயத்தில் பேபி செரமி அர்ப்பணிப்பைக் கொண்டுள்ளது. அந்த வகையில், ஆரம்ப குழந்தைப் பருவ வளர்ச்சி தொடர்பில் இளம் தலைமுறையினருக்கு விழிப்புணர்வூட்டும் விசேட சமூக நிகழ்ச்சியான ‘தறு பெட்டியாகே லோகய’ (சிறு குழந்தையின் உலகம்) எனும் கிளினிக்கை  பேபி செரமி நடாத்துகிறது.

பேபி செரமி ஆனது, முதற் தர குழந்தைப் பராமரிப்பு வர்த்தகநாமம் என்பதுடன் இலங்கையில் மிகவும் விரும்பப்படும் வர்த்தகநாமங்களில் ஒன்றாகவும் திகழ்கின்றது. இது, சுமார் ஆறு தசாப்த கால வரலாற்றைக் கொண்ட Hemas Consumer Brands நிறுவனத்தின் ஒரு அங்கமாகும். இவ்வர்த்தக நாமமானது, குழந்தைகளை மிகுந்த கவனத்துடன் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், soap, shampoo, baby cologne, baby cream, lotion, baby diapers, wipes, laundry wash liquid & powder, bottle wash, cotton buds, baby gift boxes போன்ற பல்வேறு குழந்தைப் பராமரிப்பு தயாரிப்புகள் மற்றும் துணைப் பொருட்களை இலங்கையில் வழங்கி வருகிறது. அது மாத்திரமன்றி, பேபி செரமியின் உயர்தர தயாரிப்புகள் மற்றும் அதிநவீன உற்பத்திச் செயன்முறைகளை அங்கீகரிக்கும் வகையில், குழந்தை சோப்புகளுக்கான SLS சான்றிதழைப் பெற்ற முதலாவது இலங்கை வர்த்தக நாமம் எனும் அங்கீகாரத்தையும் அது கொண்டுள்ளது. பேபி செரமி தயாரிப்புகள் குழந்தைகளின் சருமத்தில் மென்மையாகவும் இதமாகவும் இருக்குமென தோலியல் ரீதியாக பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், அவை IFRA (சர்வதேச நறுமண சங்கம்) இனால் சான்றளிக்கப்பட்ட வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன.

அனைத்து பேபி செரமி தயாரிப்புகள் மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய குழந்தை வளர்ப்பு பற்றிய மேலதிக விபரங்களுக்கு, www.babycheramy.lk எனும் அதன் இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது https://www.facebook.com/BabyCheramy/ ஊடாக அதன் Facebook பக்கத்தைப் பார்வையிடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *