இந்தியாவின் கொல்கத்தாவில் சமீபத்தில் இடம்பெற்ற 3ஆவது ICC Emerging Asia Insurance Awards 2021 (வளர்ந்துவரும் ஆசிய காப்புறுதி விருதுகள் 2021) இல், 2021 ஆம் ஆண்டில் மேற்கொண்ட காப்புறுதி விரிவாக்கத்திற்காக சிறந்த மூலோபாயங்களுக்கான விருதை ஜனசக்தி லைஃப் பெற்றுள்ளது. இந்திய வர்த்தக சம்மேளனத்தினால் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மூன்றாவது முறையாக இடம்பெறும் Emerging Asia Insurance Awards, விருது வழங்கும் மாநாடு, Insurance Institute of India, Life Council of India, General Council of India, National Insurance Academy, PWC ஆகியவற்றுடன் இணைந்து இந்திய வர்த்தக சம்மேளனத்தால் நடாத்தப்பட்டது. ஆசியாவிலுள்ள காப்புறுதி நிறுவனங்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு அங்கீகாரம் வழங்கவும், கௌரவமளிக்கவும் மேற்படி மதிப்பாய்வாளர்களால் இப்பிராந்தியத்தின் காப்புறுதித் தொழில்துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த விருது தொடர்பில் ஜனசக்தி இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளரும் அதன் பிரதான நிறைவேற்று அதிகாரியுமான ரவி லியனகே கருத்துத் தெரிவிக்கையில், “எமது வர்த்தக மூலோபாயங்களுக்காக, இந்த பெறுமதி வாய்ந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமையானது, பொருளாதார நிச்சயமற்ற இக்காலத்திலும் நாம் மூலோபாய ரீதியாக மீளெழுச்சி அடைந்துள்ளோம் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இது எமது தற்போதைய விரைவாக்கம் மற்றும் இத்தொழில்துறையில் எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தீர்வுகளை வழங்கி தொடர்ந்து சேவை செய்வது தொடர்பான எதிர்கால வாய்ப்புகளையும் இது பறைசாற்றுகின்றது. மேலும் இது எமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பு மற்றும் நாம் எதிர்கொண்ட சவாலான வருடத்திற்கு மத்தியில், நிறுவனத்தின் வளர்ச்சியில் ஒப்பிட முடியாத பங்களிப்பை வழங்கிய, எமது நிறுவனத்தின் சிங்கப் படையாகிய எமது ஊழியர்களின் திறனுக்கும் ஒரு சான்றாகும்.” என்றார்.

வாழ்க்கையை மேம்படுத்துதல் மற்றும் கனவுகளை வலுப்படுத்துதல் ஆகிய தனது பெருநிறுவன நோக்கத்துடன், ஜனசக்தி லைஃப் நிறுவனமானது நெறிமுறை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில், அதன் பங்குதாரர்களுக்கு உண்மையாக இருந்து, அதிக பெறுமதியை வழங்க எப்போதும் பாடுபடுகிறது. வாடிக்கையாளரை எப்போதும் மையப்படுத்தியதாக, வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் காப்புறுதித் தீர்வுகள் மற்றும் சேவைகள் மூலம் காப்புறுதி வழங்குனராக இதை உறுதிப்படுத்துகிறது. இந்த நோக்கத்தை ஈடுபாட்டுடன் விரிவுபடுத்தும் வகையில், தனது ஊழியர்களுடன் இணைந்து ஜனசக்தி லைஃப் எப்போதும் அதன் குழுவிலுள்ள உறுப்பினர்களுக்கு அவர்களின் கனவுகளை நனவாக்கவும் அபிலாஷைகளை வளர்த்துக் கொள்ளவும் உதவுவதற்காக, உயர்ந்த ஒத்துழைப்புடனான பணியாற்றும் சூழலை வழங்க முயற்சித்து வருகிறது.

இலங்கையின் சிறந்த 100 மதிப்புமிக்க மற்றும் வலிமையான வர்த்தக நாமங்கள் தொடர்பாக, சமீபத்திய Brand Finance அறிக்கைக்கு அமைய, ஜனசக்தி இன்சூரன்ஸ் நிறுவனம், மிக வேகமாக வளர்ந்து வரும் இலங்கை வர்த்தக நாமங்களில் ஒன்றாக, முதல் 10 (TOP 10) வர்த்தக நாம தரவரிசையில் இடம்பிடித்துள்ளது. 2022ஆம் ஆண்டில் மிகச் சிறந்த வர்த்தகநாமம் எனும் பெறுமதி வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ள நிறுவனம், ‘வேகமாக வளரும் முதல் 10 இலங்கை வர்த்தக நாமங்களில்’ (‘TOP 10 Fastest Growing Sri Lankan Brands’) ஒன்றாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது. அத்துடன், A+ மற்றும் 569 வர்த்தகநாம வலிமை குறியீட்டு (BSI) புள்ளிகளுடன், TOP 10 கௌரவ பட்டியலில் பட்டியலிடப்பட்ட ஒரே காப்புறுதி வர்த்தகநாமமாகவும் அது விளங்குகின்றது. சந்தையில் உள்ள அனைத்து ஆயுள் காப்புறுதி வர்த்தக நாமங்களின் மொத்த வர்த்தகநாம மதிப்பான 9% மட்டுமேயான அதிகரிப்புடன்  ஒப்பிடும்போது, ​​2022 ஆம் ஆண்டில், முன்னணி காப்புறுதியாளர் வர்த்தகநாம மதிப்பின் அடிப்படையில், வருடாந்தம் 22% எனும் சிறந்த வளர்ச்சியை நிறுவனம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 2021ஆம் ஆண்டில் அதன் புதிய வியாபாரத்தில் காணப்படும் போட்டிக்கு எதிராக, சந்தையில் ஒரு மட்ட அதிகரிப்புடன் முன்னேறிய வலுவான சந்தைப் பங்கு வளர்ச்சியை அடைந்துள்ள அதே வேளையில், தொடர்ச்சியாக இரண்டு பில்லியன் மைல்கல் எனும் அடைவை கடந்து வரலாற்றுச் சாதனையை நிலைநாட்டியுள்ள ஜனசக்தி லைஃப், தொடர்ச்சியாக அதன் வர்த்தகநாம மதிப்பை கூட்டி வருகிறது.

ஜனசக்தி சிங்கப் படையினால் நிரூபிக்கப்பட்டுள்ள சாதனை மற்றும் செயற்றிறன் ஆகியவற்றின் அடிப்படையிலான கலாச்சாரத்துடன், 2021 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய தரத்திற்கு இணையாக 100 MDRT சாதனையாளர்களை வெற்றிகரமாக அது உருவாக்கியுள்ளது. ஜனசக்தி இன்சூரன்ஸ் நிறுவனம், தனது ஊழியர்களை வலுவூட்டும் அதே வேளையில், சாதகமான மதிப்புமிக்க கலாசாரத்தை வளர்ப்பதற்கான அதன் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில், அதன் ஒப்பிட முடியாததும் மீளெழுச்சி கொண்டதுமான அதன் பணியிட கலாசாரம் காரணமாக, இலங்கையில் சிறந்த பணியிடம் எனும் அங்கீகாரத்தையும் அது பெற்றுள்ளது. கடந்த 27 வருட காலப்பகுதியில், ஜனசக்தி லைஃப் பிஎல்சி நிறுவனம் காப்புறுதித் துறையில் தொடர்ந்தும் புரட்சியை ஏற்படுத்தி வருவதுடன், குறிப்பிட்டு கூறும் வகையிலான ஒரு சக்தியாக முன்னோக்கி பயணித்து வருகிறது. நாடளாவிய ரீதியில் 75 இற்கும் அதிகமான கிளைகளைக் கொண்ட அதன் கிளை வலையமைப்பானது, அனைத்து தரப்பு மக்களும் அதன் தனித்துவமான காப்புறுதி தீர்வுகளை பெறுவதற்கான வசதியை வழங்குகிறது.

END

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *