இலங்கையில் Peugeot நிறுவனத்தின் உத்தியோகபூர்வ பிரதிநிதியான Carmart (Pvt) Ltd, “VIDEOCHECK” தளத்தின் மூலம்  வாகன பராமரிப்பு துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தவுள்ளது. VIDEOCHECK ஆனது, வீடியோ இணைப்பு, ஒன்லைன் மதிப்பீடு மற்றும் வாடிக்கையாளர் ஒப்புதல் ஆகியவற்றின் ஊடாக Peugeot Sri Lanka விற்பனைக்கு பின்னரான சேவையை டிஜிட்டல் மயப்படுத்த அனுமதிக்கின்றது.

சமூக தொலைவைப் பேண வேண்டிய இப் புதிய சூழ் நிலையில், காலத்தின் தேவையாக இருக்கும் ​​ VIDEOCHECK ஆனது அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வது மட்டுமன்றி மேலதிக வசதிகளையும் வழங்குகின்றது. ஐரோப்பாவில் விரிவான சோதனைக்குப் பிறகு இந்த தளம் நன்கு மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், செயல்முறைகளை டிஜிட்டல் மயமாக்கும்,  செயல்திறனை மேம்படுத்தும் Carmart இன்  நீண்டகால மூலோபாயத்தின் முக்கிய அம்சமாகும்.

ஆரம்பத்தில் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து மற்றும் ஒஸ்திரியாவில் பயன்படுத்தப்பட்டதுடன், சேவை செயன்முறைக்கு பெறுமதி சேர்க்கும் இந்த புத்தாக்க வழியை பயன்படுத்தும் போது வாடிக்கையாளர்களுக்கு அதிக திருப்தியை வழங்குவதாக ஆரம்ப முடிவுகள் காட்டியுள்ளன. தற்போது இது பிரான்ஸ், ஸ்பெய்ன், பெல்ஜியம், இத்தாலி மற்றும் போலந்து முழுவதும் PSA விற்பனைக்கு பின்னரான வலையமைப்புகளில் செயல்படுத்தப்பட்டுள்ளதுடன், மேலதிக சோதனைகள் ஜெர்மனியில் நடந்து வருகின்றன. தெற்காசியாவில் VIDEOCHECK இனை நடைமுறைப்படுத்திய முதலாவது நாடு இலங்கையாகும்.

VIDEOCHECK க்குப் பின்னால் உள்ள கோட்பாடு மிகவும் எளிமையானது. இது வாடிக்கையாளர் அபாயகரமான பட்டறை சூழலில் இருக்க வேண்டிய தேவையை நீக்குகிறது, எனினும் அவர்கள் மெய்நிகர் முறையில் தமது வாகனத்திற்கு அடுத்ததாக இருக்க அனுமதிக்கிறது. ஒரு கார் சேவைக்கு அல்லது பழுதுபார்ப்புக்கு ஒப்படைக்கப்பட்டவுடன், நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுநர் காரை ஒரு கார் தூக்கியில் வைத்து ஆய்வை மேற்கொண்டு, வீடியோ காட்சிகளை பதிவு செய்வார்.

இதனைத் தொடர்ந்து அவசியமான பழுபார்ப்பு அல்லது பராமரிப்பு ஆகியவற்றை முக்கியத்துவத்தின் அடிப்படையில் உற்பத்தியாளரினால் வரையறை செய்யப்பட்ட சரி பார்க்கும் பட்டியலில் குறித்துக்கொள்வார். இது முக்கியத்துவம் அல்லது மிக அவசரம் ஆகிய பிரிவுகளில் பயணிகள் பாதுகாப்பு அல்லது வீதியில் பயணிப்பான தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் அமையும். மேலும் tyre tread மற்றும் brake pad wear இன் காட்சி குறிகாட்டிகளையும் இது உள்ளடக்குவதுடன், இவை சரிபார்ப்புகளின் போது அளவிடப்படுகின்றன.

வீடியோ படமாக்கப்பட்டதும், மேற்கொள்ள வேண்டிய பணிக்கான கட்டண மதிப்பீடு உள்ளிடப்படும். இதில் மூல வாடிக்கையாளர் கோரிக்கை (உதாரணமாக, திட்டமிடப்பட்ட சேவை), பரிந்துரைக்கப்பட்ட பழுதுபார்ப்பு பணிகளுடன்,  தெரிவுப் பகுதியும் அடங்கும். இந்த அறிக்கை வாடிக்கையாளருக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படுவதுடன், அவர்கள் கணினி அல்லது ஸ்மார்ட்போனில் வீடியோவுடன் முழு வரைகலை அறிக்கையையும் பார்வையிட்டு ஒன்லைனில் ஒப்புதல் அளிக்க முடியும். முன்னும் பின்னுமாக மின்னஞ்சல் அனுப்பும் பாரம்பரிய முறையை விட இது  குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பாகும். இத்துறையில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்படும், Peugeot உரிமையாளர் அனுபவத்துக்கான  இப் புத்தாக்கம் தொடர்பில் Carmart அதிக நம்பிக்கை கொண்டுள்ளது. Carmart 1953 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் Peugeot விற்கான உற்பத்தியாளரால் அங்கீகரிக்கப்பட்ட ஏக இறக்குமதியாளர் / விநியோகஸ்தராக இருந்து வருகிறது. இது ஆசியாவில் இந்த வர்த்தகநாமத்துக்கான நீண்டகால பங்காளராகவும், உலகின் 4 வது பழமையானதாகவும் திகழ்கிறது. மேலதிக விபரங்களுக்கு  www.peugeot.lk அல்லது அழையுங்கள் 0114447888.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *