புதுமையான ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான Huawei, பாவனையாளர்கள் தமது அன்றாட பணிகளை எவ்வித தடையும் இன்றி முன்னெடுக்க உதவும், 5000mAh  நீடித்து நிலைக்கும் மின்கலத்தைக்  கொண்ட புத்தம் புதிய Huawei Y6p ஸ்மார்ட்போனை அண்மையில் அறிமுகப்படுத்தியது. ஆரம்ப நிலை ஸ்மார்ட்போன் வரிசையுடன் புதிதாக இணைந்து கொண்ட இந்த நுட்பம் வாய்ந்த Y6 ஆனது மிகவும் பயன்மிக்கதாகும். மேலும், ஆரம்ப நிலை ஸ்மார்ட்போன்கள் 5000mAh மின்கலத்தை கொண்டிருப்பது மிக அரிதென்பதால்,  இது ஆச்சரியப்பட வைப்பதாக உள்ளது.

பாவனையாளர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் இணையப் பாவனை, சமூக ஊடகங்கள், அழைப்புகள், செய்திகள், வீடியோக்கள், இசை, விளையாட்டுகள் மற்றும் மேலும் பல செயற்பாடுகளுக்காக நாளாந்தம் பல மணி நேரத்தை செலவிடுவதால் மின்கலத்தின் ஆயுளானது ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சமாக  உள்ளது. அலுவலகத்திற்கு அல்லது முக்கியமான பணிகளுக்கு விரைந்து செல்லும் ஸ்மார்ட்போன் பாவனையாளர்கள் நீண்ட மின்கல ஆயுள் கொண்ட சாதனத்தை கொண்டிருந்தால் கவலைப்பட தேவையில்லை. மேலும், Huawei Y6p முதற்தர சாதனம் வழங்கக்கூடிய மிக உயர்ந்த மின்கல ஆற்றலை வழங்கி சவாலுக்கு தயாராக உள்ளது.

“இலங்கைச் சந்தையில் முதற்தர சாதனங்களுக்கு இணையான அம்சங்களைக் கொண்ட புதிய முன்னோடி Y6p ஆகும். இந்த நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட சாதனத்தின் உள்ளே பொருத்தப்பட்டுள்ள 5000mAh வலுவான மின்கலமானது ஒரு முக்கிய சிறப்பம்சமாகும். நாங்கள் Huawei Y6p ஐ அறிமுகப்படுத்தி சில நாட்களே ஆகும் நிலையில், தாம் செலுத்தும் பணத்துக்கேற்ற பெறுமதியை எதிர்பார்த்திருக்கும் ஸ்மார்ட்போன் ஆர்வலர்கள் மத்தியில் இது ஒரு முக்கிய ஈர்ப்பாக மாறி வருகிறது, ” என Huawei Devices – இலங்கைக்கான தலைவர் பீட்டர் லியூ தெரிவிக்கின்றார்.

இச்சாதனமானது கட்டுப்படியாகும் விலையில் கிடைக்கும் அதேவேளை, வலுமிக்க மின்கலத்திற்கு மேலதிகமாக, நவீன 4GB RAM + 64GB சேமிப்பகத்துடன் கிடைப்பதானது smart phoneன் நோக்கத்தை பூர்த்தி செய்ய தேவையானவற்றை விட அதிகமான அம்சங்களைக் கொண்டுள்ளது. பின்பக்கம் உள்ள மூன்று camera அமைப்பானது 13mp பிரதான camera, 5mp பரந்த கோண camera மற்றும் 2mp ஆழமான camera என்பவற்றைக் கொண்டிருப்பதுடன், 6.3 அங்குல dew drop திரையானது விரிந்த காட்சி அனுபவத்தையும் வழங்குகின்றது.

Huawei Y6p முன்கூட்டியே தரவிறக்கம் செய்யப்பட்ட Huawei App gallery உடன் வருகின்றது. இது தற்போது பிரபல அப்ளிகேஷன்கள் பலவற்றைக் கொண்ட பரந்த அப்ளிகேஷன் கட்டமைப்பாக வளர்ச்சியடைந்துள்ளது. Huawei App gallery ஆனது, பாவனையாளர்கள் இலகுவாக தமது Huawei ஸ்மார்ட்போனில் தரவிறக்கிக் கொள்ளக்கூடிய வகையில் பரந்த வகையான அப்ளிகேஷன்களையும், கேம்ஸ்களையும் வழங்குகின்றது. அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட, பல மில்லியன் அப்ளிகேஷன்களைத் தேடி தரவிறக்க வழிவகுக்கின்ற, புதுமையான கருவியாக விளங்கும் Petal searchஉடன் App gallery ஆனது ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

Huawei Y6p ஆனது, phantom purple, emerald green, midnight black போன்ற நிறங்களில் வருவதுடன் அற்புதமான அறிமுக விலையான 30,499 ரூபாய்க்கு இலங்கையில் கிடைக்கக்கூடியதாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *