இன்று மேற்கொள்ளப்பட்ட ஒரு முக்கிய அறிவிப்பின் பிரகாரம், Hutch தனது சந்தாதாரர்களுக்கு 100% Anytime டேட்டா பெக்கேஜ்களை, எவ்வித இரவு நேர ஒதுக்கீடும் இல்லாமல் வழங்க  ஆரம்பித்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களின் இரவு நேர ஒதுக்கீட்டை அணுகுவதற்கு நள்ளிரவு வரை இனி காத்திருக்கவோ, பகல் நேரத்தில் பயன்படுத்த ஒதுக்கீடுகள் தீர்ந்து விடும் என்று கவலைப்படவோ தேவையில்லை. Hutch Anytime டேட்டா புரட்சியுடன், தற்போது முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் தமது முழு டேட்டா ஒதுக்கீட்டை பயன்படுத்தவும், நாளின் எந்த நேரத்திலும் இணையத்தில் அதிக சுதந்திரத்துடன் உலாவரும் சந்தர்ப்பத்தையும் பெறுகின்றனர்.

அனைத்து Hutch 078 & 072 சந்தாதாரர்களும் *131# ஐ டயல் செய்து இந்த பெக்கேஜ்களை செயற்படுத்திக்கொள்ள முடியுமென்பதுடன், இது 3G மற்றும் 4G  ஆகிய இரு பாவனையாளர்களுக்கும் கிடைக்கின்றது. இந்த புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Hutch Anytime டேட்டா திட்டங்கள், 600MB இற்கு ரூபா. 47, 1.3GB இற்கு ரூபா. 97, 3GB இற்கு ரூபா. 197, 4.7 GB இற்கு ரூபா. 297, 8.2GB இற்கு ரூபா. 497, 12GB இற்கு ரூபா. 647 மற்றும் 20GB இற்கு ரூபா. 997 போன்ற பெக்கேஜ்களை உள்ளடக்குவதுடன், வாடிக்கையாளர்களுக்கு வசதியானவற்றை வழங்கும் அதன் வாக்குறுதியை மேலும் உறுதிப்படுத்துகிறது

இந்த முயற்சியானது  வாடிக்கையாளரின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற தயாரிப்புகளை வழங்குவதற்கான Hutch இன் தொடர்ச்சியான முயற்சிகளையும், சிறந்த பெறுமதியான தயாரிப்புகளை வழங்குவதில் அதன் அர்ப்பணிப்பையும் மீண்டும் எடுத்துக்காட்டுகிறது. இந்த முயற்சியானது மொபைல் சந்தாதாரர்களின் கவலைகளை நிவர்த்தி செய்வதற்காக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் (TRCSL) துரிதமாக அங்கீகரிக்கப்பட்டது.

“உணர்வுமிக்க கூட்டாண்மை நிறுவனம் என்ற வகையில், Hutch எப்போதும் வாடிக்கையாளர்கள் எம்மிடம் கூறுவதை செவிமடுத்துள்ளது. அவர்களின் கவலைகளைப் புரிந்துகொள்வதும், அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதும் Hutch இன் வாழ்க்கைக்கான ஒரு முறையாகும். அனைத்து இலங்கையர்களின் கவலைகளையும், ஏமாற்றங்களையும் நாங்கள் கேள்விப்பட்டுள்ளோம். அவர்கள் இனி பகல் / இரவு டேட்டா ஒதுக்கீட்டைப் பற்றியும்,  இரவு ஒதுக்கீடு வீணாவதாகவும் கவலைப்பட தேவையில்லை. புதிய 100% Anytime டேட்டா பெக்கேஜ்கள் வேகமாக வளர்ந்து வரும் எங்கள் சந்தாதாரர் தளத்திற்கு பாரிய நிவாரணம், மன அமைதி மற்றும் வசதியை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என Hutchison Telecommunications Lanka (Pvt) Ltd இன் சந்தைப்படுத்தல் பிரிவின் தலைமை அதிகாரியான ரம்சீனா தெரிவித்தார்.

COVID – 19 இனால் நாடு சவால்களை எதிர்கொண்டுள்ள இந் நேரத்தில், இந்த முயற்சியானது நிவாரணத்தின் மற்றொரு வரவேற்கத்தக்க படியாக அமைந்துள்ளது. இந்த Anytime டேட்டா பக்கேஜ்கள்,  பாவனையாளர்கள் நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் முழுமையாக தகவல்களை பெற்றிருக்கவும், அவர்களின் அன்புக்குரியவர்களுடன் இணைந்திருக்கவும், தேவைப்படும் போது அவர்களின் இரவு ஒதுக்கீட்டை பற்றி கவலைப்படாமல் வீட்டிலிருந்து அவர்களின் பணி நடவடிக்கைகளைத் தொடரவும் உதவும்.

மேலும் Hutch ரூபா.15 இலவச நாளாந்த நிவாரண ரீலோட் சலுகையை ஏப்ரல் 7, 2020 வரை நீட்டித்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. கிரடிட் மீதி முடிவடைந்த அனைத்து Hutch 078 & 072 முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கும், குறிப்பாக வீட்டிலிருந்து வேலை செய்யும் இக் காலப்பகுதியில், இந்த சேவை கிடைக்கிறது. இந்த நிவாரண ரீலோட்டை எந்த நேரத்திலும் டேட்டா, எந்த வலையமைப்புகளுக்குமான அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ் சேவைகளுக்கும் பயன்படுத்த முடியும். இன்றுவரை 500,000 க்கும் மேற்பட்ட Hutch சந்தாதாரர்கள் இந்த ரூபா.15 நிவாரண அனுகூலத்தை பெற்றுள்ளமை தொடர்பில் Hutch பெருமிதம் கொள்கிறது, இது அவர்கள் தொடர்ந்து இணைந்திருக்க வாய்ப்பளிக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *